கடன் வாங்கி சொந்த வீடா? வாடகை வீடா? எது சிறந்தது? அதிரவைக்கும் பின்னணி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வேலைக்காக நகரங்களுக்குக் குடிபெயர்ந்து வாடகை வீட்டில் தங்கி வசிப்போர்களில் பலரின் எண்ணம் எப்படியாவது ஈஎம்ஐ-ல் சொந்த வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.

 

அது மட்டும் இல்லாமல் வங்கி நிறுவனங்களும் அவர்களது டெலிகாலர்கள் மூலம் உங்களை அழைத்து ஆசையையும் தூண்டுவார்கள். நீங்கள் நிறையைப் பணம் சம்பாதித்துவிட்டு அதனை எப்படிச் செலவு செய்வது என்று தெரியாமல் இருந்தால் எளிதாக வீடு வாங்கும் முடிவை எடுத்துவிடலாம்.

மாத சம்பளம் வாங்கும் இளைஞர்கள்

மாத சம்பளம் வாங்கும் இளைஞர்கள்

மாத சம்பளம் வாங்கும் இளைஞர்கள் இப்படி வீட்டுக் கடன் வாங்கிச் சிக்கலில் மாட்டிக்கொள்வது வாழ் நாள் முழுக்கக் கடனில் சிக்க வைத்துவிடும் என்றும் கூறுவதுண்டு. ஏன் என்றால் இன்றைய சூழலில் சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் வீடு வாங்குவது என்பது அவ்வளவு எளியக் காரியம் அல்ல. லட்சம், கோடிகளில் செலவு செய்ய வேண்டும் என்ற நிலை உள்ளது.

எனவே உங்கள் மாத சம்பளம் 50,000 ரூபாய் என்று வைத்துக்கொள்ளுங்கள். சென்னையில் ஒரு வாடகை வீட்டில் மாதம் 15,000 ரூபாய் வடை செலுத்தி வருகிறீர்கள்.

கடன் வாங்கி வீடு வாங்குதல்

கடன் வாங்கி வீடு வாங்குதல்

சிறந்த விலை வீடுகள் என்றால் 8.5 முதல் 9.9 சதவீத வட்டி விகித கடனில் கிடைக்கும். சென்னை புற நகர் பகுதியில் ஒரு வீட்டின் இன்றைய விலை 30 லட்சம் ரூபாய் என்றால் அதனை வாங்கும் போது ஸ்டாப் டுயூட்டி மற்றும் பிற கட்டணங்கள் என 10 சதவீதம் கூடுதல் செலவாகும்.

இப்போது நீங்கள் 30 லட்சம் ரூபாய் கடன் பெற்று 20 வருடத் தவணைக்கு வீடு வாங்கிவிட்டீர்கள். வட்டி விகிதம் 9.55 சதவீதம் என்று வைத்துக்கொண்டால் மாதம் 28,062 ரூபாய் என 20 வருடங்களுக்குத் தவணை செலுத்த வேண்டும்.

எவ்வளவு பணத்தினை வங்கிக்குச் செலுத்த வேண்டும்?
 

எவ்வளவு பணத்தினை வங்கிக்குச் செலுத்த வேண்டும்?

20 வருடங்கள் தவணையினை நீங்கள் செலுட்த்தும் போது ரூ. 28,062 x12x20 = ரூ. 67,34,871 என வீட்டின் மதிப்பினை விட இரண்டு மடங்கு தொகையினை வங்கிக்குச் செலுத்தி இருப்பீர்கள் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? வீட்டு கடன் கால்குலேட்டர்: https://tamil.goodreturns.in/emi-calculator.html

ஆசை வார்த்தைகளும் அதற்கான விளக்கமும்

ஆசை வார்த்தைகளும் அதற்கான விளக்கமும்

ஈஎம்ஐ மூலம் ஒருவரை வீடு வாங்க வைக்க வங்கி அதிகாரிகள் கூறும் ஆசை வார்த்தைகள் வரி விலக்கு கிடைக்கும் மற்றும் வாடகைக்குப் பதிலாகத் தவணை செலுத்தலாம் என்பதும், வாடகை வீட்டு உரிமையாளர்க்குச் செலுத்தும் பணத்திற்கு எந்த வட்டியும் கிடைக்காது என்பதாக இருக்கும். அது உன்மை என்றாலும் சில நிதி திட்டங்கள் வரி விலக்கு மற்றும் முதலீடு செய்த பணத்திற்க்கு வட்டி வருவாயும் அளிக்கும். அது குறித்து விளக்கமாகப் பார்க்கும் முன்பு வாடகை வீட்டில் நமக்கு ஆகும் செலவை இங்குப் பார்ப்போம்.

கடன் வாங்கி வீடு வாங்காமல் சேமித்து இருந்தால்?

கடன் வாங்கி வீடு வாங்காமல் சேமித்து இருந்தால்?

மாத வீட்டு வாடகை 15,000 ரூபாய் என்றால் 36 லட்சம் ரூபாயினை 20 வருடத்தில் வீட்டு உரிமையாளர்களுக்கு நீங்கள் செலுத்தியிருப்பீர்கள். இதுவே வீடு வாங்கியிருந்தால் 67,34,871 ரூபாய் செலவாகி இருக்கும். இவை இரண்டையும் கழித்துப் பார்த்தால் 31,34,871 ரூபாய் வாடகை வீட்டில் இருக்கும் போது மிச்சம் செய்து இருப்பீர்கள்.

கோடீசுவரர்

கோடீசுவரர்

இப்போது அந்த மிச்சம் ஆன 31,34,871 ரூபாய் பணத்தினை நீங்கள் சில நிதி திட்டங்களில் முதலீடு செய்து இருந்தால் கோடீசுவரர் ஆகி இருப்பீர்கள் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? ஆம், வாடகை வீட்டில் தங்கி இருந்து வருடத்திற்கு 1,50,000 ரூபாயினை நீங்கள் பிபிஎப் திட்டத்தில் முதலீடு செய்து வந்திருந்தால் வரி விலக்கு மட்டும் இல்லாமல் 1 கோடி ரூபாய் லாபம் அளித்து இருக்கும்.

இல்லை என்றால் அஞ்சல் அலுவலகப் பிக்சட் டெபாசிட் திட்டங்கள் மற்றும் கிசான் விகாஸ் பத்திரம் திட்டங்களில் முதலீடு செய்து இருந்தால் 4 மடங்கு லாபத்தினை அளித்திருக்கும். என்பிஎஸ் திட்டங்களிலும் முதலீடு செய்யலாம். மாதம் 20,000 ரூபாயினை நீங்கள் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்து வந்தால் 15 வருடத்தில் கோடீசுவரர் ஆக முடியும் என்றும் நிதி ஆலோசகர்கள் கூறுகிறார்கள். பணவீக்கம் போன்ற காரணங்கள் இருந்தாலும் 20 வருடத்தில் சொந்த வீடு எளிமையாகக் கிடைக்கும். அதுவும் கடன் இல்லாமல்.

எனவே இப்போது நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். கடன் வாங்கிச் சொந்த வீடா? வாடகை வீடா? எது சிறந்தது?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bank Home Loan EMI vs Monthly Rent: Which is better? It May Surprise You?

Bank Home Loan EMI vs Monthly Rent: Which is better? It May Surprise You?
Story first published: Wednesday, October 31, 2018, 19:04 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X