காங்கிரஸ் சொன்னது உண்மை தான்... தோல்வியை ஒப்புக் கொண்ட மோடி அமைச்சகம்.!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நவம்பர் 8, 2016 அன்று பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்டார், இனி பழைய 500,1000 ரூபாய் செல்லாது என வெளியிட்ட அறிவிப்பு ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் அதிர்ச்சியை அளித்தது.

 

இரண்டு வருடம்

இரண்டு வருடம்

இப்போது சரியாக இரண்டு வருடங்கள் கழித்து வேளாண்மை அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், "விவசாய துறை மிகப் பெரிய பாதிப்பைச் சந்தித்துள்ளது குறிப்பாகச் சிறிய அளவில் பயிரிடும் விவசாயிகள், பணத்தின் மூலம் மட்டுமே விதை மற்றும் உரம் வாங்குவார்கள். அவர்களுக்கு எல்லாம் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பெரிய பொருளாதார பிரச்னைகளை சந்தித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள்

எதிர்க்கட்சிகள்

என்னதான் மோடி அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்பு பணம் ஒழியும் என்று கூறினாலும், அப்போதே எதிர் காட்சிகள் இதைத் தீவிரமாக எதிர்த்தனர். சிறு குறு தொழில் செய்பவர்கள், அன்றாட வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களைப் பாதிக்கும், குறிப்பாக விவசாய துறைக்கு மிகப் பெரிய ஆபத்துக்கு உள்ளாகும் எனக் காட்டு கத்து கத்தி எச்சரித்தனர்.

 உண்மை தான்
 

உண்மை தான்

எதிர்கட்சிகளில் குறிப்பாக காங்கிரஸில் பொருளாதார விவகாரங்களைக் கையாண்ட மன்மோகன் சிங், ப சிதம்பரம் போன்றவர்கள் சொன்னது சரி தான் என்பது போல மோடி அரசில் ஒரு அமைச்சகம் ஒப்புக் கொண்டிருக்கிறது. மத்திய வேளான் அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் மோடியின் பண மதிப்பு இழப்பு நடவடிக்கை காரணமாக விவசாய துறை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது. கையில் போதுமான பணம் இல்லாததால், வியாபரிகளிடமும் பொருட்களை வாங்கி வைக்க பண பற்றாக் குறையி நிலவியதால் லட்சக்கணக்கான விவசாயிகள் விதைகள், உரம், பூச்சிக் கொள்ளிகள் போன்ற அடிப்படை விவசாயப் பொருட்களைக் கூட வாங்கமுடியாமல் தவித்தாக அதில் கூறப்பட்டுள்ளது.

 நட்டம்

நட்டம்

பணமதிப்பிழப்பு அறிவிப்பின் பொது விவசாயிகள் விளைச்சலை விற்றுக்கொண்டிருந்தனர் அல்லது அடுத்து விளைச்சலுக்காகப் பயிரிட தொடங்கி இருந்த நேரம். இந்த நிலையில் அவர்கள் கையில் இருந்து நோட்டுக்கள் செல்லாது என்கிற ஒற்றை வரி அறிவிப்பால், மேற்கொண்டு எந்த வகையிலும் பயிர்களை பாதுகாக்க பொருட்களை வாங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

அரசின் விதைகள்

அரசின் விதைகள்

மேலும் அந்த அறிக்கையில் அரசின் விதைகளைக் கூட விற்க முடியாத சூழல் தான் நிலவியது என்பதை பகிரங்கமாக ஒப்புக் கொண்டார்கள் மத்திய வேளாண் அமைச்சகம். சரி சொத நிலத்தில் விவசாயம் செய்யும் பெரு விவசாயிகளுக்குத் தான் இந்த நிலை என்றால், பெரு விவசாயிகளைச் சார்ந்து இருக்கும், கூலி விவசாயிகளுக்குப் பணமே வழங்க முடியாமல் தவித்ததையும் இந்த அறிக்கை பதிவு செய்திருக்கிறது. அரசின் நியாய விலை விதைகளைக் கூட வாங்க பணமில்லை என்பதற்கு, அரசின் 13,800 டன் கோதுமை விதைகள் அரசுக் கிடங்குகளில் தேங்கிக் கிடப்பதே சாட்சி.

கூலி விவசாயிகள்

கூலி விவசாயிகள்

சொந்தமாக நிலம் வைத்திருக்கும் பெரு விவசாயிகள் நிலத்தில் வேலை பார்த்து, வரும் கூலியை வைத்து குடும்பம் நடத்தும் கூலி விவசாயிகளுக்கு கூலி கொடுக்க முடியவிலை. ஏன்...? விவசாய விளைச்சல்களை கடனுக்குத் தான் விற்று இருக்கிறோம். பொருட்களை வாங்கியவர்கள் காசு கொடுத்தால் தான் கூலி கொடுக்க முடியும். இப்படி பெரு விவசாயிகள் காத்திருக்க... கூலி விவசாயிகளும் காத்திருந்து கஞ்சி குடித்த காட்சிகளையும் விவரித்திருக்கிறது அந்த அறிக்கை.

அரசின் கரிசனம்

அரசின் கரிசனம்

இத்தனைப் பாதிப்பிற்கு பிறகு பழைய 500 மற்றும் 1000 ரூபாயைப் பயன்படுத்தி கோதுமை விதைகள் வாங்கிக் கொள்ளலாம் என அரசு அறிவிப்பை வெளியிட்டது. இதனாலும் எந்த ஒரு மாற்றமும் இல்லை.

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

தொழிலாளர் அமைச்சகம் தனது ஆய்வின் மூலம் கிடைத்த தகவல்களை வைத்து பணமதிப்பிழப்பினால் வேலைவாய்ப்பு அதிகமாகி உள்ளது எனப் பாராட்டியது நினைவிருக்கிறது தானே. லட்சக் கணக்கில் விவசாயிகளின் வேலைகளுக்கும், அவர்களின் வயிற்றுக்கும் உலை வைத்து வித்து ஆயிரக் கணக்கில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி என்ன பயன்...?

வேலை இழப்பு...?

வேலை இழப்பு...?

பணமதிப்பிழப்பு என்கிற ஒரு விஷயத்தில் எத்தனை சிறு குறு தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகள் தங்கள் வேலையை, வியாபாரத்தை இழந்துள்ளனர் என்கிற விவரத்தைத் தரவேண்டும் என ஆளும் பாஜக-வை கேட்டிருக்கிறது காங்கிரஸ். அனேகமாக கொஞ்ச நாளில் இந்த விவரத்தை ஆமோதித்து சில அறிக்கைகள் வரும் என்றே தோன்றுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Demonetisation hit farmers badly, agriculture ministry takes 2 years to admit

Demonetisation hit farmers badly, agriculture ministry takes 2 years to admit
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X