கடன் வாங்காதவர்களுக்கு எல்லாம் விவசாயக் கடன் தள்ளுபடியா..? மபியில் புதிய ரக மோசடி

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் எப்போதுமே அதிகாரம் உள்ளவர்கள், பணக்காரர்களுக்கு எப்போதுமே பிரச்னை இருந்ததில்லை. இருக்கப் போவதுமில்லை. எப்போதுமே எழை எளிய மக்களுக்குத் தான் அனைத்து பிரச்னைகளும் மான அவமானங்கள் உட்பட.

 

அதற்கு சமீபத்தைய உதாரணம் மத்திய பிரதேசம். இங்கு கடன் வாங்காம தங்கள் சொத்து பத்துக்களைவ் இத்து, அக்கம் பக்கத்தில் சொந்தக் காரர்களின் பணத்தை முதலீடு செய்து தங்கள் விவசாயத்தொழிலைச் செய்த விவசாயிகளின் பெயர்கள் கூட விவசாயக் கடன் காரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாம்.

அதான் கடன் தள்ளுபடி ஆகிறதே. என் பெயர் இருந்தால் என்ன இப்போது என அசால்டாக இருக்கவில்லை மத்தியப் பிரதேச விவசாயிகள் மாறாக மொத்த இந்தியர்களை திரும்பிப் பார்க்க வைத்தார்கள்.

ஏன் எங்கள் பெயர்கள்

ஏன் எங்கள் பெயர்கள்

கடன் வாங்காத எங்கள் பெயர்கள் எல்லாம் ஒழுங்கா கடன்காரர்கள் பட்டியலில் இருந்து நீக்கப் பட வேண்டும். அப்படி விரைவில் தீர்வு காணவில்லை என்றால், நாங்கள் (விவசாயிகள்) கூட்டாக தற்கொலை செய்து கொள்வோம் என மத்தியப் பிரதேச விவசாயிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். மத்திய பிரதேசத்தில் புதிதாக பதவியேற்றுக் கொண்டுள்ள கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ், விவசாயிகளின் கடனை முற்றிலுமாக தள்ளளுபடி செய்ய போவதாக சமீபத்தில் அறிவித்தது. பின் அது படிப்படியாக குறைந்து 2 லட்சம் ரூபாய் வரை கடன் வைத்திருப்பவர்களுக்கு முழுமையாக தள்ளுபடி செய்யப் போவதாகச் சொன்னார்கள். பின் அதிலும் 10,000 ரூபாய் கடனுக்கு 5 ரூபாய் மட்டுமே கடன் தள்ளுபடி செய்கிறார்கள். 20,000 ரூபாய் கடனுக்கு 13 ரூபாய் கடன் தள்ளுபடி செய்கிறார்கள் என பல்வேறு கிராம விவசாயிகளிடம் இருந்து புகார் வந்தது.

மக்களவைத் தேர்தலுக்குள்

மக்களவைத் தேர்தலுக்குள்

இந்த புகார்களை எல்லாம் சரி செய்து நிர்ணயிக்கப் பட்ட மொத்த கடன் தொகையையும் முழுமையாக வரும் மார் மாதத்துக்குள் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறதாம் மத்திய அரசு. அதனைத் தொடர்ந்து மத்தியப் பிரதேச அதிகாரிகளும் தங்களால் இயன்ற வரை கடன் தள்ளுபடி வேலைகளை விரைவுபடுத்தி இருக்கிறார்களாம்.

ரோஷக்காரர்கள், நேர்மையாளர்கள்
 

ரோஷக்காரர்கள், நேர்மையாளர்கள்

இந்நிலையில், அரசின் கடன் பாக்கி வைத்திருப்போர் பட்டியலில் கடன் பெறாத தங்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளதாக கூறி ஹில்கன் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் பஞ்சாயத்து அலுவலகம் முன் போராட்டம் கூட நடத்தி இருக்கிறார்கள். மேலும், சில ஆண்டுகளுக்கு முன் இறந்து போனவர்கள் பெயர் கூட கடன் பாக்கி வைத்திருப்போர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகவும் விவசாயிகள் உண்மைகளை வெளி உலகுக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

விசாரனை

விசாரனை

விவசாய கடன் பெறுவோர், விவசாய கடன் வைத்திருப்போர் என போலி பட்டியல் தயார் செய்ததாக ஏற்கனவே சிலரை மத்தியப் பிரதேச, அரசு கைது செய்து விசாரித்து வருகிறதாம். கடனே வாங்காத விவசாயிகள் பெயரில் ரூ.70,000 க்கும் அதிகமாக கடன் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. சுமார் 100 கடன் வாங்காத விவசாயிகள் பெயர்கள் போலி பட்டியலில் இடம்பெற்றுள்ளதை விவசாயிகளே கண்டு பிடித்திருக்கிறார்களாம். இன்னும் அதிகார பூர்வமாக தேடித் துருவிப் பார்த்தால் எல்லாம் கிடைக்குமாம்.

என்ன தான் புதிய திட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், அத்ல் ஊழல் செய்வது எப்படி என கண்டு பிடிக்கும் திறமை நம் இந்திய அதிகாரிகளுக்குத் தான் அதிகம் போல. இப்படி கறை படிந்த கரங்களோடு ஒரு சில அதிகாரிகள் இருக்கும் அதே அலுவலகங்களில் தான், சுடு காடுகளில் கூட தூங்கி விழித்து தன் பணிகளைச் செய்யும் அதிகாரிகளைய்ம் பார்க்க முடிகிறது. அவர்களைப் பார்த்தாவது இவர்கள் தங்களைத் திருத்திக் கொண்டால் முதலில் பாராட்டுவது நாமாகத் தானே இருப்போம்.

கடனை திருப்பி செலுத்தச் சொல்லி மிரட்டிக் கொண்டிருந்த அதிகாரிகள், இப்போது அவர்களின் கடன் தள்ளுபடி தொகையைத் திருட அலைகிறார்கள் போல..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

madhya pradesh government is using fake borrowers name to waive farm loan

madhya pradesh government is using fake borrowers name to divert farm loan waiving funds, a whole village in madhya pradesh complained this misuse of loan waiver funds to the authorities
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X