என்னாது ஒரு விவசாயிக்கு 2000 ரூபாயா.. ஒரு விவசாய குடும்பத்துக்கு தாம்ப்பா 2000!!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பியுஷ் கோயல் தன் இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி கிஷான் சம்மன் நிதி என்கிற பிரமாண்ட திட்டத்தை அறிவித்தார், அதன் படி 2 ஹெக்டேருக்குக் கீழ் உழவு நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் 3 தவனைகளாக கொடுக்கப்படும் என்றார்கள்.

 

அந்த திட்டத்தி கீழ் முதல் தவணை நிதி கொடுக்கக் கூட மத்திய அரசில் இருந்து பட்டியல் கேட்டு மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் மாநில விவசாயத் துறை அமைச்சக செயலர்களுக்கு கடிதங்கள் பறந்துவிட்டன.

முதல் தவணைக்கான 20,000 கோடி ரூபாய் கூட தயார், பட்டியல் வந்தது வழங்கத் தொடங்கி ஓட்டை அள்ளி விட வேண்டியது தான் எனத் தயாரக இருக்கிறார்கள்.

புதிய அறிவிப்புகள்

புதிய அறிவிப்புகள்

பிரதமரின் புதிய Pradhan Mantri Kisan Samman Nidhi திட்டத்தி கீழ் எந்த மாதிரியான விவசாயிகளுக்கு எல்லாம் கொடுப்பார்கள், எப்படி பயனாளர்களை தேர்வு செய்கிறார்கள் என்கிற விவரங்கள் இப்போது தான் படிப்படியாக வெளியே வரத் தொடங்கி இருக்கிறது. ஆனால் பயனர்களைத் தேர்வு செய்வதில் தொடர்ந்து புதிய திடுக்கிடும் அறிவிப்புக்களை அறிவித்துக் கொண்டே இருக்கிறது மத்திய அரசு. அதோடு விவசாயப் பெருமக்களுக்கும் இந்த திட்டத்தின் கீழ் பயனடைய சில கேள்விகளும் இருக்கின்றன.

Question 1

Question 1

ஒரு குடும்பத்தில் அப்பா, அம்மா மற்றும் 18 வயதுக்குட்பட்ட மகன், மகள் என குடும்ப குறிப்பிட்டிருக்கிறார்கள். அப்படி என்றால் 18 வயதுக்கு மேல் அப்பா அம்மா உடன் இருக்கிறவர்கள் என ஒரு விவசாயக் குடும்பமே மொத்தமாக 2 ஹெக்டேருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இந்த Pradhan Mantri Kisan Samman Nidhi திட்டத்தின் கீழ் பயணாளர்களாக சேர்க்கப்படுவார்களாம்..? அப்படி என்றால் 18 வயது நிறைவடைந்து அப்பா அம்மா உடன் இருந்தால் இந்த திட்டத்தின் கீழ் பயன் அடைய முடியாதா..?

Question 2
 

Question 2

கூட்டுக் குடும்பமாக வாழ்பவர்களுக்கு பிரதான் மந்திரி கிஷான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் எப்படி பயனாளர்களாக சேர்த்துக் கொள்வார்கள். இதர்கு அரசிடம் ஏதாவது கணக்கீடு முறைகள் இருக்கிறதா..?

Question 3

Question 3

அப்பா, அம்மா உடன் மகனோ மகளோ அவர்களுடைய குடும்பத்தோடு இருக்கும் விவசாயக் குடும்பங்களுக்கும் இந்த 2 ஹெக்டேர் நிலம் தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுமா..?

Question 4

Question 4

அப்பா, அம்மாவை தனியா விட்டு விட்டு, தன் பங்கு சொத்தை (நிலத்தை) வாங்கிக் கொண்டு தனியாக உழவு வேலைச் செய்யும் தனி நபர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் பயனாளர்களாக சேர்க்கப்படுவார்களா..?

Question 5

Question 5

மாத சம்பளம் வாங்கும் ஒரு நடுத்தரக் குடும்பம் ஒரு ஏக்கர் விவசாய நிலத்தை சொந்த ஊரில் விட்டு விட்டு, வேலைக்காக பெரு நகரங்களில் தங்கி இருப்பவர்கள் கூட இந்த திட்டத்தின் கீழ் சேர்க்கப்படுவார்களா..?

இப்படி எத்தனையோ கேள்விகள் விவசயிகளுக்கு வந்து கொண்டு தான் இருக்கிறது. அரசு விவசாயிகளின் சந்தேகத்தைத் தீர்த்து, முறையாக விதிகளை வெளியிட்டால் தான் சரியான பயனாளர்களுக்கு பணம் சென்று சேரும் இல்லை என்றால் தவறான சில அதிகாரிகள் வாய்ப்பு போய்விடும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

under Pradhan Mantri Kisan Samman Nidhi a farmer family will get 2000 rupees not an individual farmer

under Pradhan Mantri Kisan Samman Nidhi a farmer family will get 2000 rupees not an individual farmer
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X