CEO ராஜினாமா செய்தார்..! வளர்ச்சி 15%, மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

DHFL - Dewan Housing Finance Limited. இந்த நிதி நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி ஹர்சில் மேத்தா இன்று பிப்ரவரி 14, 2019-ல் தன் பதவியைல் ராஜினாமா செய்திருக்கிறார்.

 

ஹர்சில் மேத்தாவின் ராஜினாமாவால் DHFL நிறுவன பங்குகளின் விலை நேர்மாறாக அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது. இன்ரு ஒரே நாளில் 15% மேல் பங்கு விலை அதிகரித்திருக்கிறது.

இன்று காலை 104 ரூபாய்க்கு வர்த்தகமாகத் தொடங்கிய DHFLiப்போது 128 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. பொதுவாக ஒரு நிறுவனத்தின் நல்ல அதிகாரிகள் வெளியேறினால் அந்த நிறுவன பங்குகளின் விலை சரியும். பங்குச் சந்தையில் இவர் ராஜினாமா செய்தால் அவர்கள் நிறுவன பங்கு விலை அதிகரிக்கிறது என்றால் எத்தனை மோசமான அதிகாரிகளாக இருப்பார்கள். இதற்கு பின்னால் என்ன பிரச்னை இருக்கிறது எனப் பார்ப்போமா..?

DHFL கதையை மூன்று பிரிவாக பிரித்துக் கொள்ளலாம். செப்டம்பர் 2018, டிசம்பர் 2018, ஜனவரி 2019. இப்போது முதல் பிரிவில் இருந்து தொடங்குவோம்

DHFL பிசினஸ்

DHFL பிசினஸ்

இந்தியாவின் மிகப்பெரிய அரசு வங்கிகளிடம் கடன் வாங்கி, அதை விட அதிக வட்டிக்கு, வங்கிகளில் கடன் நிராகரிக்கபப்ட்ட நபர்களுக்கு கொடுக்கும். கடன் கொடுக்கத் தேவையான நிதிக்காக சுமார் 97,000 கோடி ரூபாயை முதல் தொகையாக பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து கடன் வாங்கி இருக்கிறது DHFL. குறிப்பாக 50,000 கோடியை பல்வேறு இந்திய அரசு வங்கிகளிடம் கடன் வாங்கி இருக்கிறது. இந்த ஏமாற்று நிறுவனத்துக்கு அரசு வங்கிகளில் அதிகபட்சமாக எஸ்பிஐ சுமார் 11,500 கோடி ரூபாய் கடன் கொடுத்திருக்கிறது.

செப்டம்பர் 2018 பிரிவு 1

செப்டம்பர் 2018 பிரிவு 1

செப்டம்பர் மாதத்தில் இந்த DHFL நிறுவனத்தின் மீது சில புகார்கள் அரசல் புரசல்களாக பேசப்பட்டது. அப்போதே இந்த நிறுவன பங்குகளின் விலை வீழ்ச்சி காட்டியது. கடந்த செப்டம்பர் 2018 காலங்களில் திவான் ஹவுசிங் பங்குகள் சுமார் 610 ரூபாய்க்கு வர்த்தகமாகி வந்தது. இவர்களுக்கு வர வேண்டிய கடன் வரவில்லை என யாரோ கொளுத்திப் போட பங்கு விலை கிடு கிடு சரிவு கண்டது. அதன் பின் பங்கு விலை 320 ரூபாயைத் தாண்டவில்லை.

டிசம்பர் 2018 பிரிவு 2
 

டிசம்பர் 2018 பிரிவு 2

இந்த நிறுவனத்தின் மீது கடந்த டிசம்பர் 2018 வாக்கில் மற்றும் ஒரு அரசல் புரசலான புகார் எழுந்தது. DHFL முறையற்ற ரீதியில் மக்கள் பணத்தையும், சாதாரண முதலீட்டாளர்கள் பணத்தையும் நூதனமாக ஏமாற்றி ஊழல் செய்வதாக கோப்ராபோஸ்ட் என்கிற அமைப்பு ஆதாரங்களோடு வெளியிட்டது. அதையும் மறுத்துக் கொண்டிருந்தது DHFL.ஆனால் பங்கு விலை உயரவில்லை அதே 200 - 230 ரேஞ்சுகளிலேயே வர்த்தகமானது. சரியான் ஆதாரங்கள் இல்லாததால் தயக்கத்துடனேயே பேசினார்கள்.

பிப்ரவரி 2019 பிரிவு 3

பிப்ரவரி 2019 பிரிவு 3

1. DHFL நிறுவனத்தின் நிறுவனர் வாதவான் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி போலி நிறுவனங்களுக்கு 14,300 கோடி ரூபாய் கடன் கொடுத்தது, கறுப்புப் பணமாக பதுக்கி இலங்கயில் ஒரு கிரிக்கெட் டீம் வாங்கியது, வெளிநாடுகளில் பலரின் பெயரில் சொத்துக்களை வாங்கியது.

2. பாஜகவுக்கு போலி நிறுவனங்கள் மூலம் சுமார் 19.5 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்தது.

3. இன்சைடர் டிரேடிங் (நிறுவன உயர் அதிகாரிகளுக்கு மட்டும் தெர்நித ரகசியங்களை பகிர்ந்து பங்கு விலை ஏற்றத்தில் காசு பார்பப்து) மூலம் 1,000 கோடி ஏமாற்றியது. என வரிசையாக ஆதாரத்தோடு நிரூபித்தது கோப்ராபோஸ்ட் என்கிற அமைப்பு.

அள்ளிக் கொடுத்தார்

அள்ளிக் கொடுத்தார்

ஒரே முகவரியில் உள்ள 34 போலி நிறுவனங்களுக்கு சுமார் 14,300 கோடி ரூபாயை எந்த ஒரு பிணை அல்லது ஒழுங்கான விசாரணை கூட இல்லாமல் கடன்களை ஒரே தவணையில் கொடுத்திருக்கிறது. பொதுவாக பிசினஸ் கடன்களுக்கு பல்வேறு தவணைகளாக வேலை நடப்பதை உறுதி செய்து கொண்டு தான் நிதி நிறுவனங்கள் வழங்கும். ஆனால் இங்கு எல்லா போலி நிறுவனங்களுக்கு ஒரே தவணை தான்.

வாராக் கடன்

வாராக் கடன்

மேலே சொன்ன பெரும்பாலான நிறுவனங்களுக்கு கடன் கொடுத்த அடுத்த நான்காவது மாதமே நேரடியாக வாராக் கடன்களாக அறிவிக்கப்படுகிறது. ஒரு தவணையைக் கூட ஒழுங்காக கட்டவில்லை அந்தப் போலி நிறுவனங்கள். குறிப்பாக ஷிவ சேனா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஹிதேந்திரா ஜெயின் இயக்குநராக இருக்கும் சஹானா குழும நிறுவனங்கள்.

முக்கிய நிறுவனங்கள்

முக்கிய நிறுவனங்கள்

தேர்தல் நெருங்கும் நேரத்தில் குஜராத்தைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்களின் திட்டங்களை முழுமையாக விசாரிக்காமல் சுமார் 1,160 கோடி ரூபாய் கடன் கொடுத்திருக்கிறார்கள். அதே போல் கர்நாடகத்தைச் சேர்ந்த சில நிறுவனங்களுக்கும் பிசினஸைப் பற்றி முறையாக விசாரிக்காமல் 1,300 கோடி கடன் வழங்கி இருக்கிறார்களாம். அதோடு கெலாக்ஸி, சிலிகான், ஹெமிஸ்பியர் ஆகிய மூன்று நிறுவனங்கள் தான் வாதவானின் கடன் ஊழலுக்கு உடந்தையாக இருந்தவைகளாம்.

நன்கொடை

நன்கொடை

நிறுவனச் சட்டம் (Companies Act) 2013-ன் படி லாபத்தில் இயங்கும் நிறுவனங்கள் மட்டும் தான் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்க வேண்டும். அதுவும் நிறுவனம் ஈட்டிய மொத்த நிகர லாபத்தில் (Net Profit) அதிகபட்சமாக 7.5% மட்டுமே வழங்க வேண்டும் என தெளிவாக சொல்லி இருக்கிறார்கள். ஆனால் RKW Developers, Skill Realtors and Darshan Developers ஆகிய நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த போதும் பாஜகவுக்கு நன்கொடை கொடுத்திருக்கிறார்கள்.

நட்டம்

நட்டம்

செப்டம்பர் 2018 காலத்தில் வந்த ஒரு புரளியால் 610 ரூபாய்க்கு வர்த்தகமாகி வந்த பங்குகளின் விலை 300-க்கு வந்தது. அதன் பின் கோப்ராபோஸ்ட் வெளியிட்ட அறிக்கைகளுக்குப் பின் 300-ல் இருந்து நேரடியாக 100 ரூபாய்க்கு இறங்கி வர்த்தகமாகிக் கொண்டிருந்தது. இப்போது தான், ஹர்சில் மேத்தாவின் ராஜினாமாவுக்குப் பின் இத்தனை விலை உயர்வைப் பார்க்க முடிகிறது. 105 ரூபாயில் இருந்து சுமார் 128 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

dhfl ceo resigned and dhfl share price increased 15 percent

dhfl ceo resigned and dhfl share price increased 15 percent
Story first published: Thursday, February 14, 2019, 15:49 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X