Cheque பயன்படுத்தி ஜன் தன் கணக்குகள் வழியாக 55 லட்சம் ரூபாய் திருடிய முன்னாள் அரசு வங்கி ஊழியர்.!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: செக்குகளை (காசோலைகளை) ஒருவரால் திருத்தி எழுதி பணத்தை எடுக்க முடியுமா என பொதுவாக வங்கி ஊழியர்களைக் கேட்டால் முடியாது என்பார்கள்.

ஆனால் முடியும், நான் ஒரு 55 லட்சம் ரூபாய் வரை அப்படி எழுதிய செக்குகளைத் திருடி, அவைகளை அழித்து, எனக்குத் தேவையான விவரங்களை நிரப்பி ஜன் தன் திட்டத்தின் கீழ் புதிதாக வங்கிக் கணக்கு தொடங்கியவர்களின் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தி சம்பாதித்திருக்கிறேன் என வாக்குமுலம் கொடுத்திருக்கிறது ஒரு சென்னை கொள்ளை கும்பல்.

எப்படித் திருடினார்கள், இந்த நெட்வொர்க் எப்படி இயங்குகிறது. நாம் எப்படி நம் செக்குகளி (காசோலைகளை) இவர்களைப் போன்ற மோசடி கும்பல்களில் இருந்து தப்பிப்பது..?

 பாகிஸ்தானோடு போருக்கு போகலாம், ஆனால் ஒரு மாதத்துக்கான கச்சா எண்ணெய் இருக்கா..! RAW கேள்வி..! பாகிஸ்தானோடு போருக்கு போகலாம், ஆனால் ஒரு மாதத்துக்கான கச்சா எண்ணெய் இருக்கா..! RAW கேள்வி..!

கும்பல் விவரம்

கும்பல் விவரம்

கர்நாடக சட்டமன்றத்தின் வேலை செய்து ஓய்வு பெற்ற ஊழியர் ஸ்ரீபத் ஜிஎஸ், அவரின் ரெளடி மகன் ஆனந்த தீர்த்தா, வெங்கடேஷ், ஹரீஷ், பிரதாப், பிரசாந்த், நவீன், ராஜீவ் செட்டி என ஒரு பெரிய கும்பலே இதில் இறங்கி திட்டமிட்டு செயல்பட்டிருக்கிறார்கள்.

இப்படி செயல்படுவார்கள்

இப்படி செயல்படுவார்கள்

ஒரு நிறுவனத்தின் இருந்து ஒரு காசோலை எழுதிவிடுகிறார்கள் என்றால், அந்த நிறுவனத்தின் காசோலைகளை வங்கிக்குக் கொண்டு செல்லும் உதவியாளர்களைப் பின் தொடர்ந்து, காசோலைகளைத் திருடிக் கொள்வார்கள்.

தகவல்கள் அழிப்பு

தகவல்கள் அழிப்பு

ஒவ்வொரு காசோலைகளிலும் யாருக்கு பணம் சென்று சேர வேண்டும் என்கிற பெயரை எழுதி இருப்பார்கள். அதோடு காசோலைகளில் இடது மேல் ஓரத்தில் Account Payee எனவும் குறிப்பிட்டிருப்பார்கள். இவைகளை எல்லாம் அழித்து, சொல்லி இருக்கும் தொகைகளையும் அழித்து இவர்களுக்கு தோதான பெயர்களையும் விவரங்களையும் நிரப்புவார்கள்.

வங்கிக்கு உள்ளே ஒரு ஆள்

வங்கிக்கு உள்ளே ஒரு ஆள்

அதோடு அவர்கள் திருடிய காசோலையில் குறிப்பிட்டிருக்கும் வங்கிக் கணக்குகளில் எவ்வளவு தொகை மீதமிருக்கிறது என்பதையும் அறிந்து கொள்வார்கள். அதன் பின் ஒருவர் மட்டும் சம்பந்தப்பட்ட வங்கிக்கு உள்ளேயே வைத்திருக்கு சோர்ஸ் மூலமாக காசோலையில் குறிப்பிட்டிருக்கும் வங்கிக் கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறதோ அந்த தொகையை அப்படியே எழுதி விடுவார்கள்.

இப்படித் தான் கிடைக்கும்

இப்படித் தான் கிடைக்கும்

ஆக இப்போது காசோலையில் தங்களுக்கு தேவையான (எடுக்க முடிந்த) தொகை, கொள்ளையர்களுக்கு வசதியான வங்கிக் கணக்கு, தேதி, எல்லாம் போட்ட பின் காசோலையை வங்கியிடமே கொடுத்து தங்களுக்கு வசதியான வங்கிக் கணக்கில் பணத்தை பெற்றுவிடுவார்கள்.

சென்னை டு கர்நாடகா

சென்னை டு கர்நாடகா

சென்னையில் திருடிய செக்குகளை கர்நாடகத்தில் வைத்து தங்களுக்கு வசதியான வங்கிகளுக்கு நேரடியாக டெபாசிட் செய்து கொள்கிறார்கள். இப்படி வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்து கொள்ள ஜன் தன் திட்டத்தில் முதல் முறை வங்கிக் கணக்கைத் தொடங்கியவர்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவர்களுக்கும் வங்கியைப் பற்றி அதிகம் தெரியாததால் சொல்வதற்கு எல்லாம் சரி என்கிறார்கள்.

கணக்குதாரர்களுகு கமிஷன்

கணக்குதாரர்களுகு கமிஷன்

ஜன் தன் திட்டத்தின் வங்கிக் கணக்கு தொடங்கியவர்களுக்கு, ஒவ்வொரு அப்பாவி வங்கிக் கணக்குதாரர்களுக்கும் ஒரு 10,000 - 20,000 ரூபாய் வரை கமிஷன் தொகையையும் கொடுத்துவிடுகிறார்களாம். ஆகையால் அவர்களைக் கூப்பிட்டு விசாரித்தாலும் ஏதோ நண்பரின் பணம் என்று சொன்னார்கள் என அப்பாவிகளாகச் சொல்கிறார்கள் ஜன் தன் கணக்குதாரர்கள்.

பெங்களூரில் புகார்

பெங்களூரில் புகார்

பெங்களூரூ விதான் சவுதா பகுதியில் இயங்கும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் முதன்மை மேலாளர் அசோக் ராம மூர்த்தி விதான் சவுதா காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்திருக்கிறார்.அந்த புகாரில் ஸ்ரீபத் என்பவர் ஒரு காசோலை கொடுத்தார் ஆனால் அது கொஞ்சம் திருத்தி எழுதப்பட்டது போல இருக்கிறது, அதோடு 57,750 ரூபாய்க்கு எழுதப்பட்ட செக்குகள், 5,77,500 ரூபாய்க்கு மாற்றி எழுதப்பட்டிருக்கிறது. எனவும் புகாரில் குறிப்பிட்டிருக்கிறார்.

விசாரனை

விசாரனை

ஸ்ரீபத்தை விசாரித்த விதான் சவுதா காவலர்கள் அவரின் மகன் ஆனந்த் தான் அப்படி ஒரு செக்கை கொடுத்த தன் வங்கிக் கணக்கில் மாற்றச் சொன்னது தெரிய வந்தது. அதற்கு 30,000 ரூபாய் கமிஷனாக கொடுத்த்தையும் விசாரணையில் ஒப்பு கொண்டார் ஸ்ரீபத். ஆனால் அதற்குள் இனி ஏழை எளிய மக்களின் ஜன் தன் கணக்குகளில் பணத்தைப் போட்டு எடுத்துக்கொள்ளத் தொடங்கி இருந்தார்கள் திருடர்கள்.

தொடர்ந்த விசாரணை

தொடர்ந்த விசாரணை

ஸ்ரீபத்தின் மகன் ஆனந்தை விசாரித்த போது தான் வெங்கடேஷ், நவீன், பிரசாந்த், பிரசாத் என ஒரு பெரிய டீமே சேர்ந்து செயல்பட்டது தெரிய வந்திருக்கிறது.

வலை

வலை

ஆனந்திடம் மீண்டும் ஒரு 35 லட்சம் ரூபாய் செக் மோசடிக்காக அனுகி இருக்கிறார்கள். வெங்கடேஷின் கேங்க். ஆனந்தும் போலீஸாரின் ஏற்பாடு படி ஒரு ஜன் தன் வங்கிக் கணக்கை கண்டு பிடித்து புதிய காசோலைகளை டெபாசிட் செய்ய இருந்தார்கள்.

பிடிபட்டார்கள்

பிடிபட்டார்கள்

அப்படி ஆனந்தும் ஒரு போலி வங்கிக் கணக்கோடு சந்திக்கும் போது மொத்த திருட்டு கும்பலையும் பிடித்திருக்கிறார்கள் காவலர்கள். அந்த திருடர்கள் கூட்டத்தில் வங்கி நடவடிக்கைகளை நுணுக்கமாக அறிந்த காசோலைகலை அசால்டாக மாற்றக்கூடிய அறிவுள்ள முன்னாள் அரசு வங்கி ஊழியர் நவீன் மட்டும் இன்னும் பிடிபடவில்லையாம்.

கவனமாக இருங்கள்

கவனமாக இருங்கள்

1. ஒரு காசோலை எழுதி ஐந்து நாட்களுக்குள் பணம் நம் கணக்கில் இருந்து சரியாகக் கழிந்திருக்கிறதா என்பதை நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.
2. கூடுமான வரை ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தலாம்.
3. மாதம் ஒரு முறை வங்கிக் கணக்குகளையும், எழுதிய செக்குகளையும் சரி பார்க்க வேண்டும். என வங்கியும், காவலர்களும் மக்களுக்கு அறிவுருத்தி இருக்கிறார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

jandhan bank accounts used to do cheque forgery in chennai

jandhan bank accounts used to do cheque forgery in chennai
Story first published: Monday, March 11, 2019, 14:20 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X