மார்ச் மாத ஜிஎஸ்ஆர் 1 ரிட்டன் தாக்கலுக்கான தேதி ஏப்ரல் 13ஆம் தேதி வரை நீட்டிப்பு

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: சரக்கு மற்றும் சேவை வரியின் மார்ச் மாத விற்பனைக்கான ஜிஎஸ்டிஆர்-1 படிவத்தை தாக்கல் செய்வதற்கான காலக் கெடுவை ஏப்ரல் 13ஆம் தேதி வரையிலும் நீட்டிப்பு செய்து மத்திய மறைமுக வரிகள் ஆணையம் அறிவித்துள்ளது.

 

தொழில் துறையினர் மற்றும் வர்த்தகர்கள் அவ்வப்போது வைக்கும் கோரிக்கைக்கு ஏற்ப ஜிஎஸ்டிஆர் படிவங்களை தாக்கல் செய்வதற்கான காலக் கெடுவை நீட்டிப்பதும் உண்டு. அதே போல் தற்போதும் ஜிஎஸ்டிஆர்-1 படிவங்களை தாக்கல் செய்வதில் தொழில் நுட்ப கோளாறுகள் இருப்பதாக அனைத்து தொழில் நிறுவனங்களும் புகார் தெரிவித்ததால், மத்திய அரசு ஜிஎஸ்டிஆர்-1 தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை வரும் ஏப்ரல் 13ஆம் தேதி வரையிலும் நீட்டிப்பு செய்துள்ளது.

வரி பிடித்தம் (TDS) செய்வதற்கான ஜிஎஸ்டிஆர்-7 படிவத்தை தாக்கல் செய்வதற்கான கால வரம்பும் ஏப்ரல் 12ஆம் தேதி வரையிலும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக ஜிஎஸ்டிஆர்-1 படிவத்தை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஏப்ரல் 11ஆம் வரை மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் ஜிடிபி கணக்கீடுகளில் தவறு இருக்கிறது..! IMF-ன் கீதா கோபிநாத் அதிரடி..! இந்தியாவின் ஜிடிபி கணக்கீடுகளில் தவறு இருக்கிறது..! IMF-ன் கீதா கோபிநாத் அதிரடி..!

ஆரம்பமே சரியில்லை

ஆரம்பமே சரியில்லை

கடந்த 2017ஆம் ஆண்டில் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்தே மாதாந்திர ரிட்டன் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மத்திய மறைமுக வரிகள் ஆணையம் அடிக்கடி நீட்டிப்பு செய்து வந்துள்ளது. ஜிஎஸ்டி இணையதளத்தில் ஏற்பட்ட சிற்சில தொழில்நுட்பக் குறைபாடுகள் மற்றும் தொழில் துறையினரும் வர்த்தகர்களும் ஜிஎஸ்டி வரி முறையை புரிந்துகொள்வதில் ஏற்பட்ட சிரமங்களாலும் ஜிஎஸ்டிஆர் படிவங்களை தாக்கல் செய்வதில் கால தாமதமும் குளறுபடிகளும் ஏற்பட்டன.

அதிகரிக்கும் புதிய ஜிஎஸ்டி பதிவுகள்

அதிகரிக்கும் புதிய ஜிஎஸ்டி பதிவுகள்

மத்திய மறைமுக வரிகள் ஆணையமும் (CBIT) அவ்வப்போது ஜிஎஸ்டி இணையதளத்தையும ஜிஎஸ்டிஆர் படிவங்களையும் மேம்படுத்தி வருகிறது. மேலும் மாதந்தோறும் அதிகரித்து வரும் புதிய ஜிஎஸ்டி பதிவு மற்றும் ரிட்டன்களையும் விரைவாக பதிவேற்றம் செய்வதற்கு ஏற்ப ஜிஎஸ்டி இணையதளத்தின் வேகத்தை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனாலும் அவ்வப்போது ஜிஎஸ்டிஆர் படிவங்களை தாக்கல் செய்வது கால தாமதமாவதும் உண்டு.

ஏப்ரல் 13ஆம் தேதி வரை அவகாசம்
 

ஏப்ரல் 13ஆம் தேதி வரை அவகாசம்

தொழில் துறையினர் மற்றும் வர்த்தகர்கள் அவ்வப்போது வைக்கும் கோரிக்கைக்கு ஏற்ப ஜிஎஸ்டிஆர் படிவங்களை தாக்கல் செய்வதற்கான காலக் கெடுவை நீட்டிப்பதும் உண்டு. அதே போல் தற்போதும் ஜிஎஸ்டிஆர்-1 படிவங்களை தாக்கல் செய்வதில் தொழில் நுட்ப கோளாறுகள் இருப்பதாக அனைத்து தொழில் நிறுவனங்களும் புகார் தெரிவித்ததால், மத்திய அரசு ஜிஎஸ்டிஆர்-1 தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை வரும் ஏப்ரல் 13ஆம் தேதி வரையிலும் நீட்டிப்பு செய்துள்ளது.

ஜிஎஸ்டிஆர்-1

ஜிஎஸ்டிஆர்-1

இது குறித்து மத்திய மறைமுக வரிகள் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலையில் அமல்படுத்தப்பட்ட புதிய ஜிஎஸ்டி விதிமுறைகளின் படி, நிறுவனங்களும் வர்த்தகர்களும் தங்களின் 2019ஆம் ஆண்டு மார்ச் மாத விற்பனைக்கான மாதாந்திர ஜிஎஸ்டிஆர்-1 படிவங்களை வரும் ஏப்ரல் 13ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு அறிவித்துள்ளது.

ஜிஎஸ்டிஆர்-7

ஜிஎஸ்டிஆர்-7

தொழில் நிறுவனங்கள் ஒப்பந்ததாரர்களுக்கு பிடித்தம் செய்த வருமான வரிக்கான (Tax Deduction ad source) ஜிஎஸ்டிஆர்-7 படிவத்தையும் வரும் ஏப்ரல் 12ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு அறிவித்துள்ளது.

தொழில் துறையினர் ரொம்ப பிசி

தொழில் துறையினர் ரொம்ப பிசி

தற்போது கடந்த 2018-19ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை தயார் செய்வதில் அனைத்து நிறுவனங்கள் மற்றும் வர்த்தகர்கள் தீவிரமாக ஈடுபட்டிருப்பதால், அவர்களின் சிரமங்களை புரிந்துகொண்டு மாதாந்திர ஜிஎஸ்டிஆர் படிவங்களை தாக்கல் செய்வதற்கு போதிய கால அவகாசம் வழங்கியுள்ளதாக தெரிகிறது.

பிளான் பி

பிளான் பி

இது குறித்து விளக்கமளித்த ஏஎம்ஆர்ஜி அன்ட் அசோஸியேட்ஸ் நிறவனத்தின் இணை உரிமையாளர் ரஜத் மோகன் கூறுகையில், ஜிஎஸ்டி வரிமுறை அமல்படுத்தப்பட்டதில் இருந்தே தினந்தோறும் தொழில்நுட்ப கோளாறுகளை சந்தித்து வருகிறது. முதலில் தொழில்நுட்பக் கோளாறுகளை சரி செய்வது தொழில் துறையினரும் வர்த்தகர்களும் சிரமம் இல்லாமல் ஜிஎஸ்டிஆர் படிவங்களை பதிவேற்றம் செய்வதற்கு ஜிஎஸ்டி கவுன்சில் "பிளான் பி" திட்டத்தை செயல்படுத்த முன்வரவேண்டும் என்று ஆதங்கப்பட்டார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: cbic gst ஜிஎஸ்டி
English summary

Govt extend March GSTR-1 filing date to April 13

The central government Wednesday extended the last date for filing the final sales return form GSTR-1 for March 2019 by two days till April 13 and due date for filing TDS return GSTR-7 for March has also extended till April 12.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X