வாராக் கடனால் வங்கிகள் முடங்கும் அபாயம்.. சரியும் இந்திய பொருளாதாரம்..வசூல் செய்யப்படுமா

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : கடந்த 10 ஆண்டுகளில் மொத்தமாக 7 லட்சம் கோடி வாராக்கடன் களைக் வங்கிகள் ரத்து செய்துள்ள நிலையில், அவற்றில் 80 சதவிகித வாராக்கடன்கள் கடந்த 5 ஆண்டுகளில் ரத்து செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

 

வங்கிகளில் வாரக்கடன் அதிகரித்து வருவது வங்கிகளுக்கு மட்டுமில்லாமல் இந்திய அரசுக்கும் பெரும் தலைவலியாக மாறி வருகிறது. இதுபோன்ற வாராக் கடன்களைக் வசூல் செய்ய இந்திய ரிசர்வ் வங்கி பல விதங்களிலும் முயற்சி செய்து வருகிறது. ஆனால் வாராக் கடன்கள் இதுவரை வரவேயில்லை என்பதே உண்மை.

விஜய் மல்லையா , ஜெட் ஏர்வேர்ஸ் நிறுவனத்தின் தலைவர் நரேஷ் கோயல் உள்ளிட்ட பல பேர் கார்ப்பரேட்களின் பெயரில் கடன் வாங்குவதும், பின்னர் வங்கிகளை அலைய விடுவதும் வாடிக்கையான ஒரு விஷயமாகி வருகிறது. இதனால் இந்தியாவில் வாராக்கடன் என்பது தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்த நிலையில் வங்கிகள் தங்களது வாராக்கடனை குறைத்துக் காட்ட பல கோடி வாராக்கடன் களை ரத்து செய்து உத்தரவிட்டது தற்போது தெரியவந்துள்ளது.

டிஸ்னி இந்தியாவின் தலைவர் அபிஷேக் மஹேஸ்வரி ராஜினாமா! பைஜூ (Byju) நிறுவனத்தின் Global Head ஆக பதவி..!

அதிகபட்ச வாராக்கடன்  தள்ளுபடி

அதிகபட்ச வாராக்கடன் தள்ளுபடி

கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் மொத்தமாக 7 லட்சம் கோடி வாராக்கடங்களை வங்கிகள் ரத்து செய்துள்ளன. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் 80 சதவிகிதம் வாராக் கடன்களை கடந்த 5ஆண்டுகளில் ரத்து செய்துள்ளது. கடந்த 2016 -2017ம் ஆண்டில் 1,08,374 கோடி ரூபாய் வாராக் கடன்களை வங்கிகள் ரத்து செய்துள்ளது. இதுவே 2017 -2018- ம் ஆண்டில் 1, 61,328 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

ரூ.64,000 கோடி அபாரா வசூல்

ரூ.64,000 கோடி அபாரா வசூல்

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் 2018 -2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 6 மாத காலத்தில் வங்கிகள் 82,799 கோடி வாராக்கடனை ரத்து செய்துள்ளது. அதுவே 2018 ஆம் ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் அபாரமாக 64,000 கோடி ரூபாய் வாராக்கடனை ரத்து செய்துள்ளது.

வாராக்கடனை அடைக்க வங்கிகளுக்கு மூலதனம்
 

வாராக்கடனை அடைக்க வங்கிகளுக்கு மூலதனம்

வங்கிகளை கடன் பிரச்சனையிலிருந்து மீட்டெடுப்பதற்காகவே இந்திய அரசு பல லட்சம் கோடி ரூபாயை வங்கிகளூக்கு மூலதனமாக கொடுத்தது. ஆனால் இதை வைத்து வங்கிகள் வாராக்கடனை குறைக்க வசூல் செய்யும் செயலை செய்யாமல், வாராக்கடனை குறைத்து காட்டாவே ஆர்வம் காட்டுகின்றன. இது வங்கிகளின் அலட்சிய போக்கையே காட்டுகிறது.

வாராக்கடனை மீட்க பல்வேறு முயற்சி

வாராக்கடனை மீட்க பல்வேறு முயற்சி

10 ஆண்டுகளில் 7 லட்சம் கோடி ரூபாய் வாராக் கடன்களை வங்கிகள் ரத்து செய்துள்ளது. அதில் கடந்த 2014- ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதத்தில் இருந்து தற்போது வரை 5,55, 603 கோடி ரூபாய் வாராக் கடன்களை ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் இவ்வளவு கடன்களை ரத்து செய்தது குறித்தும் வங்கித் தரப்பில் கூறும்போது வாராக் கடன்களை மீட்டெடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறைந்த  வாராக் கடனையே மீட்டிருக்கிறது

குறைந்த வாராக் கடனையே மீட்டிருக்கிறது

வாராக்கடங்கள் தள்ளுபடி செய்யப்பட்ட போதிலும் கூட அதனை மீட்டெடுக்கும் முயற்சியும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே 15 - 20 சதவிகிதத்திற்கும் குறைவான வாராக்கடன்களை வங்கிகள் மீட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bank loans 80% bad loans worth Rs.1.5 lakh crore in last 5 years

The ruling Bharatiya Janata Party wrote off Rs 1,56,702 crore of non-performing loans during the nine-month ended December 2018, reported medias quoting the Reserve Bank of India. Meanwhile, in the last 10 years, around Rs 7,00,000 crore loans were written off, out of which 80 percent of these write-offs were taken place after April 2014.
Story first published: Saturday, April 13, 2019, 17:45 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X