டெல்லி : ஜன் தன் வங்கித் திட்டம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, அனைவருக்கும் வங்கிக் கணக்கு தொடங்கும் வகையில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் படி கோடிக்கணக்கில் வங்கிக் கணக்குகள் இலவசமாக தொடங்கப்பட்டன. இதனை மோடி தலைமையிலான மத்திய அரசு அறிமுகம் செய்து வைத்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது இதன் டெபாசிட் தொகை 1 லட்சம் கோடி ரூபாயை நெருங்க உள்ளது. கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி நிலவரப்படி வங்கி கணக்கில் டெபாசிட் 97,665.66 கோடி ரூபாய் இருந்துள்ளது. இதுவரை 35.39 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த மார்ச் 27ஆம் தேதி நிலவரப்படி, டெபாசிட் தொகை மட்டும் 96,107.35 கோடி ரூபாயாகும். இதற்கு முந்தைய வார நிலவரப்படி, 95,382.14 கோடி ரூபாய் இருந்தது. இதில் 27.89 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு ரூபே டெபிட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

ஏப்ரல் 11, 2018 தேதி கணக்கின்படி வங்கிக் கணக்குதாரர்களின் எண்ணிக்கை 31.45 கோடியாக அதிகரித்துள்ளது.கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி வரை 80,545.70 கோடி ரூபாய் ஜன் தன் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சகத்தின் தகவல் தெரிவித்துள்ளது.
வீபத்துக் காப்பீடு ரூ.2லட்சம்
கடந்த ஆகஸ்ட் 28, 2014ல் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முக்கிய நோக்கமே அனைத்து குடும்பத்தினரும் வங்கி வசதிகளை பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, விபத்து காப்பீட்டு தொகையை 1 லட்சம் ரூபாயில் இருந்து 2 லட்சம் ரூபாயாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இது ஆகஸ்ட் 28, 2018க்கு பிறகு திறக்கப்பட்ட வங்கி கணக்குகளுக்கு பொருந்தும் என ஏற்கனவே மத்திய அரசு அறிவித்திருந்தது.
ஏன் மக்கள் வரிப்பணத்தை வீணாக்குகீறார்கள்..ஏன் வங்கி தேவையில்லாமல் செலவு செய்கிறது..விஜய் மல்லையா
பணம் எடுக்கும் வரம்பு அதிகரிப்பு
இந்த நிலையில் அதிகபட்சம் பணம் எடுக்கும் வரம்பு 10,000 ரூபாய் என இரட்டிப்பாக்கப் பட்டுள்ளது. இந்த திட்டம் ஒவ்வொரு இல்லத்திற்கும் என்பதில் இருந்து, ஒவ்வொரு இளைஞர்களுக்கும் வங்கிக் கணக்கு என்று கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதில் கவனிக்க தக்க விஷயம் என்னவெனில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமான ஜன் தன் வங்கி கணக்குகளை பெண்கள் வைத்துள்ளனர்.
கிராமப்புறங்களில் 50% கணக்குகள்
இதில் 50 சதவிகித வங்கிக் கணக்குகள் கிராமப்புற மற்றும் பாதி - நகர்ப்புற பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் சேமிப்பு, கிரெடிட், காப்பீடு, ஓய்வூதியம், குறைந்தபட்ச வருமானம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதோடு அரசின் நலத்திட்ட உதவிகளை பெறும் வண்ணமும் இந்த ஜன் தன் வங்கிக் கணக்கில் வசதி அளிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications