பாதாளம் தொட்ட சென்செக்ஸ்..! பரபரப்பில் துடித்த நிஃப்டி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இன்று காலை சென்செக்ஸ் 39,158 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி தேய்ந்து இறக்கம் கண்டு 38,645 புள்ளிகளில் நிறைவடைந்திருக்கிறது.
கடந்த வியாழக்கிழமை மாலை சென்செக்ஸ் 39,140-க்கு நிறைவடைந்தது.

 

கடந்த வியாழக்கிழமை போலவே, இன்றும் காலை வர்த்தக நேரம் தொடங்கும் போதே சென்செக்ஸ் சுமார் 18 புள்ளிகள் கேப் அப்பில் வர்த்தகமாகத் தொடங்கியது. அடுத்தடுத்து இறக்கம் கண்டு வந்த சென்செக்ஸ், மொத்த கணிப்புகளையும் சிதைத்து 490 ஒரே நாளில் இறக்கம் கண்டிருக்கிறது.

கடந்த டிசம்பர் 21, 2018 அன்ரு தான் சென்செக்ஸ் இப்படி -1.86 சதவிகித சரிவைக் கண்டது. அதன் பிறகு இன்று தான் சென்செக்ஸ் -1.26 சதவிகிதம் சரிவு கண்டிருக்கிறது. ஆக கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு பெரிய சரிவு தான் .

பிப்ரவரி மாதத்தில் 8.61 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது - இபிஎஃப்ஓ அறிக்கை பிப்ரவரி மாதத்தில் 8.61 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது - இபிஎஃப்ஓ அறிக்கை

செய்திகள்

செய்திகள்

பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை கடந்த ஐந்து மாதங்களில் இல்லா அளவுக்கு பேரல் ஒன்றுக்கு சுமார் 73.5 டாலருக்கு விற்பனையாவது, அதனால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு குறைந்து கொண்டே வருவது, இந்தியாவில் பொருளாதார செயல்பாடுகள் குறைந்திருக்கிறது, பணவீக்கம் எதிர்பார்த்ததை விட குறைவாகவே அதிகரிக்கிறது என ஆர்பிஐ தன் கவலைகளைட் தெரிவித்தது, இன்று காலை முதலே வங்கிப் பங்குகளின் விலை தொடர்ந்து சரிந்து வர்த்தகமானது எல்லாம் இந்திய பங்குச் சந்தைகளை பதம் பார்த்துக் கொண்டிருக்கின்றன.

சென்டிமெண்ட்

சென்டிமெண்ட்

மேலே சொன்ன செய்திகள் அனைத்துமே முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் சென்டிமென்ட்களை நெகட்டிவ்வாகவே வைத்திருக்கிறது. எல்லோர் மனத்திலும் ஒரு பதற்றம் கலந்த பயத்தை பரவிட்டுக் கொண்டிருக்கிறது. பற்றாக்குறைக்கு உலகப் பொருளாதார மந்த நிலை வேறு வர்த்தகர்கள் மனதில் பயத்தை ஆழமாக விதைத்திருக்கிறது.

அடுத்த சப்போர்ட்
 

அடுத்த சப்போர்ட்

ஏப்ரல் 18, 2019 அன்று எழுதிய கட்டுரையில் 38,870 வலுவான ரெசிஸ்டென்ஸாக இருக்குமெனக் கணித்திருந்தோம். ஆனால் எல்லாம் சப்போர்ட்களையும் உடைத்து எறிந்து விட்டு இப்போது தரை தட்டி இருக்கிறது சென்செக்ஸ். ஆனால் இப்போதும் சென்செக்ஸ் தன்னுடைய 38,610 என்கிற வலுவான சப்போர்ட்டை எடுத்திருக்கிறது. அது உடைந்தால் 38,550-ம் அதற்குப் பின் 38,440 என்கிற வலுவான சப்போர்ட்டும் சென்செக்ஸை பாதுகாக்கும் என நம்பலாம். ஒருவேளை நாளையும் இதே போல இறக்கம் காணத் தொடங்கி 38,440 உடைக்கப்பட்டால் சென்செக்ஸ் 38,053 புள்ளிகள் வரைத் தொடலாம்.

கப் அண்ட் சாசர்

கப் அண்ட் சாசர்

சென்செக்ஸின் டெய்லி சார்ட்டில் மார்ச் 20, 2019 தொடங்கி ஏப்ரல் 22, 2019 வரையான ஒரு மாத காலத்துக்கு ஒரு கப் அண்ட் சாசர் பேட்டன் கண்னில் படுகிறது. தற்போதைய டாப்பில் இருந்து சாசர் ஆழம் வரை இன்று ஒரே நாளில் 495 புள்ளிகள் இறக்கம் கண்டு விட்டது. ஆக நாளையும் இறக்கம் கண்டால் அது கப்பில் இறக்கத்தை அப்படியே வெளிப்படுத்த வேண்டும். எனவே கப்பில் ஆழம் 1367 புள்ளிகளாக இருக்கிறது. ஆக சென்செக்ஸின் உச்சமான 39420 புள்ளிகளில் இருந்து 1367 புள்ளிகள் என்றால் 38,053 புள்ளிகள் தான் கண்ணில் படுகிறது. ஜாக்கிரதையாக வர்த்தகத்தை மேற்கொள்ளவும்.

நிஃப்டி 50

நிஃப்டி 50

அதே போல் நிஃப்டி50 இண்டெக்ஸ் காலை 11,727 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,594 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. கடந்த வியாழக்கிழமை வர்த்தக நேர முடிவில் நிஃப்டி50 11,752 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

ரெசிஸ்டென்ஸ்

ரெசிஸ்டென்ஸ்

சென்செக்ஸுகு சொன்னது தான் இங்கு நிஃப்டிக்கும் இப்போது வரை நிஃப்டி50 இண்டெக்ஸை ஏற்றத்தில் கொண்டு போக இதுவரை எந்த ஒரு செய்தியும் இல்லை. ஒருவேலை தப்பித் தவறி ஏற்றம் கண்டால் 11,660 மற்றும் 11,730 ஆகிய புள்ளிகள் முதல் நிலை ரெசிஸ்டென்ஸ்களாக இருக்கும். அதையும் கடந்தல் 11,761 வலுவான ரெசிஸ்டென்ஸாக இருக்கும்.

சென்செக்ஸ் & பி.ஸ்.இ

சென்செக்ஸ் & பி.ஸ்.இ

இன்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 23 பங்குகள் இறக்கத்திலும், 07 பங்குகள் ஏற்றத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,697 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 714 பங்குகள் ஏற்றத்திலும், 1,799 பங்குகள் இறக்கத்திலும், 184 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்த 2,697 பங்குகளில் 44 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 93 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 40 பங்குகள் இறக்கத்திலும், 10 பங்குகள் ஏற்றத்திலும் வர்த்தகமாயின.

செக்டோரியல் இண்டெக்ஸ்

செக்டோரியல் இண்டெக்ஸ்

ஐடி துறை சார்ந்த நிறுவனப் பங்குகள் மட்டுமே ஏற்றத்தில் வர்த்தகமாயின. மற்ற அனைத்து துறை சார்ந்த பங்குகளும் இறக்கத்தில் தான் வர்த்தகமாயின. இன்று வர்த்தக நேரத்தில் ரிலையன்ஸ், டாடா மோட்டார்ஸ், யெஸ் பேங்க், ஹெச் டி எஃப் சி பேங்க், எஸ்பிஐ போன்ற பங்குகள் அதிக வால்யூம்களில் வர்த்தகமாயின.

ஏற்ற & இறக்கப் பங்குகள்

ஏற்ற & இறக்கப் பங்குகள்

விப்ரோ, பார்தி ஏர்டெல், டெக் மஹிந்திரா, இன்ஃபோசிஸ், டிசிஎஸ் போன்ற பங்குகள் சராசரியாக 0.5 சதவிகித விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின. யெஸ் பேங்க், இந்தியாபுல்ஸ் ஹவுசிங், பாரத் பெட்ரோலியம், இண்டஸ் இந்து பேங்க், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் போன்ற நிறுவனப் பங்குகள் சுமார் 4.5 சதவிகித விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.

உலக சந்தைகள்

உலக சந்தைகள்

ஏப்ரல் 18, 2019-ல் அமெரிக்க சந்தையான நாஸ்டாக் விலை -0.02% வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது. அதோடு இன்று ஐரோப்பிய சந்தைகளில் லண்டன் தவிர அனைத்தும் ஏற்றத்தில் வர்த்தகமாயின. லண்டனின் எஃப்.டி.எஃப்.இ -0.15%, பிரான்சின் சி ஏ சி 0.31% , ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் 0.57% வர்த்தகமாகி வருகின்றன.

ஆசியச் சந்தைகள்

ஆசியச் சந்தைகள்

ஆசிய பங்குச் சந்தைகளில் தாய்லாந்தின் எஸ் இ டி காம்போசைட், இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட், சீனாவின் ஷாங்காய் காம்போசைட் மற்றும் ஹாங்காங்கின் ஹேங்செங் என 4 சந்தைகள் மட்டுமே இறக்கத்தில் வர்த்தகமாயின. மற்ற அனைத்துச் சந்தைகளும் ஏற்றத்தில் தான் வர்த்தகமாயின. அதிகபட்சமாக சிங்கப்பூரின் ஸ்ட்ரைட் டைம்ஸ் 0.30% ஏற்றத்தில் தான் வர்த்தகமாயின.

டாலர் Vs ரூபாய்

டாலர் Vs ரூபாய்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 69.67 ரூபாய்க்கு வர்த்தகமாகி நிறைவடைந்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக இறங்கிக் கொண்டு வருகிறது. பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல் விலைக்கு 73.64 டாலராக உயர்ந்திருக்கின்றது. நேற்றைய விலையை விட இன்று அதிகம் தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

sensex tanks again and proved that it does not have enough power to go up

sensex tanks again and proved that it does not have enough power to go up
Story first published: Monday, April 22, 2019, 18:31 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X