பருத்தி உற்பத்தி குறைவின் காரணமாக விலை அதிகரிப்பு..தமிழக நூற்பாலைகள் இறக்குமதி செய்ய திட்டம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொச்சின் : நாட்டில் பருத்தி உற்பத்தி குறைந்ததை அடுத்து விலை சற்று அதிகமாகவே வர்த்தகமாகி வருகிறது. இந்த நிலையில் தமிழ் நாட்டை சேர்ந்த நூற்பாலைகள் அவர்களின் நூற்பாலை உற்பத்திக்காக , சர்வதேச அளவில் இறக்குமதி செய்யுமளவிற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

 

இருப்பினும் சர்வதேச சந்தையில் பருத்தி விலை ஏற்ற இறக்க விலைகளை தமிழ் நாட்டை சேர்ந்த நூற்பாலைகள் கண்கானித்து வருகின்றன. இதனால் சரியான ஒரு மென்மையான விலையை எதிர்பார்த்து காத்திருக்கின்றன.

பருத்தி உற்பத்தி பகுதிகளில் சரியான மழை இல்லாத காரணத்தினால் பருத்தி விளைச்சல் குறைந்தே காணப்படுகிறது. இதனால் பருத்தி உற்பத்தி குறைந்து, பற்றாக்குறையே நிலவி வருகிறது என்று கோயமுத்தூர் பருத்தி சங்கத்தின் தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

வெள்ளி ஏற்றுமதி சரிவுக்கு காரணம் நீரவ் மோடியும் மெகுல் சோக்சியும் நாட்டை விட்டு ஓடிப்போனதால்தானாம்

மார்கெட்டிங்க் பருவத்தில் 320 லட்சம் பேல்களாக கணிப்பு

மார்கெட்டிங்க் பருவத்தில் 320 லட்சம் பேல்களாக கணிப்பு

இந்திய பருத்தி அசோசியேஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பருத்தி 360 - 370 லட்சம் பேல்கள் இருக்கும் என்ற கணிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போதைய மார்கெட்டிங் பருவத்தில் சுமார் 320 லட்சம் பேல்களை மட்டும் கொண்டு இருக்கும் என்றும் இந்த கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது இந்த கணிப்பு அக்டோபர் 2018 முதல் வரப்போகும் செப்டம்பர் மாதம் வரையிலான காலம் வரை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மழை பற்றாக்குறை காரணமாக உற்பத்தி குறையும்

மழை பற்றாக்குறை காரணமாக உற்பத்தி குறையும்

இதோடு அல்லாமல் பஞ்சாப், ஹரியானா, ராஜாஸ்தான் குஜராத், மத்தியபிரதேசம் மற்றும் தமிழ் நாடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஆண்டு பருவ மழை பற்றாக்குறை காரணமாக பருத்தி உற்பத்தியை பாதித்துள்ளன. இதனால் பருத்தி உற்பத்தி குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

விலை குறைந்த பருத்தி இறக்குமதி செய்யவே ஆர்வம்
 

விலை குறைந்த பருத்தி இறக்குமதி செய்யவே ஆர்வம்

இதனால் பருத்தியின் விலை அதிகரித்தே வர்த்தகமாகி வருகிறது. இதுகுறித்து ராதகிருஷ்ணன் கூறுகையில் ஒரு கேண்டியின் விலை (356 கிலோ மதிப்புள்ள கேண்டி) 47,000 - 48,000 ரூபாய் வரை அதிகரித்தே வர்த்தகமாகி வருகிறது. இதனால் நூற்பாலைகள் மிக குறைவான விலையில் இறக்குமதி செய்யவே ஆர்வம் காட்டி வருகின்றன.

பற்றாக்குறையால் விலை அதிகரிக்கும்

பற்றாக்குறையால் விலை அதிகரிக்கும்

இந்த இந்திய நூற்பாலைகள், சர்வதேச சந்தையில் விலை எப்போது வீழ்ச்சியடையும் என காத்துக் கொண்டிருக்கிண்றன. அப்படி விலை குறையும் பட்சத்தில் மொத்தமாக வாங்கி குவித்து வைத்துக் கொள்ளும். இதே நேரத்தில் இந்திய உற்பத்தியாளர்கள் சந்தையில் நிலவி வரும் பற்றாக்குறை காரணமாக பருத்தி விலை அதிகரிக்கும் என்பதை கருத்தில் கொண்டு, பயிரிடுகின்றனர். மேலும் பருத்தி இறக்குமதிக்காக மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான அமெரிக்கா, கிழக்கு ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளையே சார்ந்துள்ளது என்றும் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

வழக்கமான துறைமுகம் தூத்துக்குடியே

வழக்கமான துறைமுகம் தூத்துக்குடியே

பருத்தி இறக்குமதியாளர்கள் கொச்சின் துறைமுகத்தை பருத்தி இறக்குமதிக்கு கேட்ட போது, தென் இந்தியாவின் வழக்கமான துறைமுகமாக தூத்துக் குடி விளங்குகிறது. சில நேரங்களில் சர்வதேச வர்த்தகர்கள் கொழும்பு துறைமுகத்தை ஒரு மையாமாகப் பயன்படுத்தி கொள்கலனில் பருத்தியை கொண்டு வருகின்றனர்.

கொச்சின் வழியாக இறக்குமதி செய்ய ஆய்வு

கொச்சின் வழியாக இறக்குமதி செய்ய ஆய்வு

தமிழகத்தில் நூற்பாலைகள் கோயமுத்தூர், ஈரோடு சேலம் மாவட்டளவில் அதிகம் உள்ளன. இதனால் தென்னிந்தியாவில் கொச்சி வழியாக மேற்கு ஆப்பிரிக்க மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க பருத்திக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்புகளை வாங்குபவர்கள் ஆராய்கின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: cotton பருத்தி
English summary

A cotton prices surge, tamilnadu spinning mills turn to import

The surging rates of cotton, in combination with a shortage, have forced Tamil Nadu-based spinning mills to look at imports to meet their production requirements.
Story first published: Tuesday, April 23, 2019, 15:36 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X