சிங்கப்பூரில் முதலீடு செய்யும் டாடா குழுமம்.. ரூ.4000 கோடி முதலீடு

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு : டாடா குழுத்தை சேர்ந்த ஆடம்பர ஹோட்டல் குழுமத்திற்கு சொந்தமான இந்தியா ஹோட்டல் கோ லிமிடெட் (IHCL) நிறுவனம் சிங்கப்பூரில் GIC Pte Ltd நிறுவனத்தில் 4000 கோடி ரூபாய் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. இந்த முதலீட்டிற்கான காலம் மூன்று ஆண்டுகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம்.

 

மொத்தத்தில் 30 சதவிகித பங்களிப்புடன் இந்திய ஹோட்டல் கோ லிமிடெட் (IHCL) நிறுவனமும், மீத முதலீடாக GIC Pte Ltd நிறுவனமும் முதலீடு செய்ய இருப்பதாகவும் இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 
சிங்கப்பூரில் முதலீடு செய்யும் டாடா குழுமம்.. ரூ.4000 கோடி முதலீடு

தேர்தல் முடிவு வரட்டும் அப்பு வெயிட் பண்ணுங்க.. கொஞ்சம் முதலீட்டை தள்ளி வைங்க தேர்தல் முடிவு வரட்டும் அப்பு வெயிட் பண்ணுங்க.. கொஞ்சம் முதலீட்டை தள்ளி வைங்க

கடந்த பிப்ரவரி 2018ல் இந்திய ஹோட்டல் கோ லிமிடெட் (IHCL) நிறுவனம் தனது வளர்ச்சி பாதையை Aspiration 2022" காட்டியது. அந்த வகையில் இதுபோன்ற முதலீடுகள் மூலம் தனது விருந்தோம்பல் வளர்ச்சியை இன்னும் அதிகரிக்க விரும்புவதாகவும், இந்த நிறுவனம் தெற்காசியாவிலேயே மிகச்சிறந்த இலாபரகமான நிறுவனமாக மாற்றுவதுதான் இதன் குறிக்கோளாகும்.

GIC Pte Ltd நிறுவனம் சிங்கப்பூர் வெளிநாட்டு இருப்புகளை நிர்வகிக்க 1981 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் அரசு நிறுவிய ஒரு அரசியலமைப்புச் நிறுவனமாகும். இது 40 நாடுகளில் சுமார் 100 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் உலகளாவிய நீண்ட கால முதலீட்டாளர் ஆகவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து இது போன்ற இந்திய நிறுவனங்கள் அன்னிய நாடுகளில் முதலீடு செய்வது அதிகரித்தே வருகிறது. ஏன் அங்கு செய்யும் வர்த்தகத்தை இந்தியாவிலேயே வர்த்தகம் செய்கின்றன என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழலாம்.

குறிப்பாக சிங்கப்பூர், பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் முதலீட்டாளர்களுக்கு ஏற்ப சூழ் நிலை நிலவி வருவதாகவும், அங்கு தொழில் நுட்பங்களும் முதலீட்டாளர்களுக்கு ஏற்ற வகையில் இருக்கிறது என்ற கருத்தும் முதலீட்டாளர் மத்தியில் நிலவி வருகிறது. இவ்வாறு முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும் வகையில் பிரிட்டன் முதலிடத்தில் இருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன.

இது குறித்து பொருளாதார நிபுணர்கள் மத்தியில் நிலவி வரும் கருத்துகளில் சில, இந்தியாவைப் பொறுத்தவரை இன்னும் முதலீட்டாளர்களுக்கு சரியான ஆதரவு இல்லை. அதோடு அவர்களுக்கு ஏற்றவாறு கொள்கைகளை வகுத்தும் தருவதில்லை. இதனால் முதலீட்டாளர்கள் அன்னிய நாடுகளை தேடியும் செல்கின்றனர்.

அதிலும் பல ஸ்டார்ப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டாலும், சரியான லோன் தொகை கிடைக்காத பட்சத்தில் அவர்கள் தொழிலில் முடங்கும் அபாயமே நிலவி வருகிறது. இதனாலேயே பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஆரம்பத்திலேயே முடங்கும் அபாயம் நிலவி வருகிறது. ஆக வரப்போகும் புதிய அரசு புதிய வர்த்தக கொள்கையை வகுக்க வேண்டும், இதன் மூலம் முதலீட்டாளர்கள் இங்கே முதலீடு செய்யும் வகையில் தொழில் கொள்கைகளை வகுக்க வேண்டும். இதனால் இந்திய பொருளாதாரமும் மேம்படும். இதனால் பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பும் கிட்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian Hotels signs $600 million investment partnership with Singapore company

Tata-group owned Indian Hotels Co Ltd, on Friday signed a strategic partnership with Singapore’s GIC Pte Ltd for an investment framework of around Rs.4,000 crore.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X