எஸ்கேப்பானா ஏர்ஏசியா.. ஜெட் விமானங்களை குத்தகைக்கு எடுக்க டாடா குழுமம் ஆர்வம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் முன்னதாக கடன் பிரச்சனையால் தனது சேவையை முடக்கிய நிலையில், அதன் விமானங்கள் குத்தகை அடிப்படையில் மற்ற விமான நிறுவனங்களுக்கு விடப்பட்டு வந்தன. இந்த நிலையில், ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் போயிங் 737 (B737) ரகவிமானங்களை குத்தகை எடுக்க ஏர் ஏசியா நிறுவனம் ஆர்வம் காட்டி வந்த நிலையில் தற்போது அதை விட்டுள்ளதாம்.

 

நீ இல்லாட்டி என்ன நாங்க இருக்கோமே என்று டாடா குழுமம் புதியதாக களத்தில் இறங்கியுள்ளதாம். இந்த நிலையில் முன்னர் இந்த போயிங் விமானங்களை குத்தகைக்கு எடுக்க முயற்சி செய்தது ஏன்? பின்னர் கைவிட்டதற்கு என்ன காரணம் என்று ஏர் ஏசியா இந்திய நிறுவனம் சில காரணங்களை கூறியுள்ளதாம்.

எஸ்கேப்பானா ஏர்ஏசியா.. ஜெட் விமானங்களை குத்தகைக்கு எடுக்க டாடா குழுமம் ஆர்வம்

அதில் சில, பல்வேறு வகையான சீட் கட்டமைப்பு, பராமரிப்பு வேலைகள் செய்யப்பட வேண்டிய தேவை உள்ளது. இதனால் புதிய பல சிக்கல்கள் உள்ளது. அதோடு இந்த விமானங்களின் சீட்களில் கட்டமைப்பு வித்தியாசமாக உள்ளது, ஆக இதை பாராமரிக்க தனிப்பட்ட திறன் கொண்ட ஆட்கள் தேவை, ஆக இது போன்ற பல காரணங்களால் இந்த திட்டத்தை தொடர விரும்பவில்லை எனவும் அந்த நிறுவன வட்டாரத்தில் கூறபப்டுகிறதாம்.

இந்த நிலையில் கடன் பிரச்சனையால் கடந்த ஏப்ரல் 17ம் தேதி தனது விமான சேவையை நிறுத்திய ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின், போட்டி நிறுவனங்களான ஸ்பைஸ் ஜெட் மற்றும் விஸ்டாரா நிறுவனங்கள் சில விமானங்களை குத்தகைக்கு ஏற்கனவே எடுத்துக் கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.

2020-ல் சென்செக்ஸ் 45,000 புள்ளிகளை தொடும்.. மார்கன் ஸ்டான்லி அறிக்கை

குறிப்பாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் 20 B737 ரக போயிங் விமானங்களையும், விஸ்டாரா 4 விமானங்களையும் எடுத்துக் கொண்டன.

இதில் பெங்களூரு தலைமையிடமாக கொண்டுள்ள ஏர் ஆசியா இந்தியா நிறுவனம் தான் முதன் முறையாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானங்களை குத்தகைக்கு எடுக்க ஆர்வம் காட்டியது. இந்த நிலையில் ஒழுங்குமுறை ஒப்புதலுக்காக சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் (DGCA) க்கு விண்ணப்பித்தது குறிப்பிடத்தக்கது. அதே நேரம் அதற்கான அனுமதியும் கிடைத்து தற்போது பின் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

எனினும் இந்த நிறுவனம் A320 விமானங்கள் சேர்ப்பதன் விரிவாக்கத் திட்டத்தைத் தொடர இந்த விமான நிறுவனம் தயாராக உள்ளதாம். அதிலும் அடுத்த 18 மாதங்களில்,தற்போதைய 21 A320 விமானங்களை அதன் அளவை இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளதாம் இந்த நிறுவனம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tata group wants to continue with Jet Airways' grounded Boeing 737s

Air Asia India has dropped its plan to lease Boeing-737 (B737) aircraft of grounded Jet Airways., but this same time Tata group wants to continue with this airlines.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X