சபாஷ் சாணக்கியா.. வங்கி சேவையை வீட்டுக்கு கொண்டு வரும் ஐ.ஓ.பி.. சந்தோஷத்தில் சீனியர் சிட்டிசன்ஸ்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை : ஒரு காலத்தில் வெகு தூரம் சென்று, வங்கியில் வரிசையில் நின்று, வங்கியில் பணம் போடவோ அல்லது எடுக்கவோ வெகு நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இருந்து வந்தது.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் வங்கிகள் தங்களது சேவை நாங்கள் தான் பெஸ்ட் என நிரூபிக்க போட்டி போட்டுக் கொண்டு சேவையை வழங்கி வருகின்றன.

சபாஷ் சாணக்கியா.. வங்கி சேவையை வீட்டுக்கு கொண்டு வரும் ஐ.ஓ.பி.. சந்தோஷத்தில் சீனியர் சிட்டிசன்ஸ்

அதிலும் சில வங்கிகள் கணக்கு ஓபன் செய்தல், வங்கிக்கு பணம் செலுத்துதல் என வங்கிகள் மக்களை நாடி, அவர்களது வீடு வரை வந்து வாங்கிச் சென்று வந்தன. அதோடு ஏடிஎம் சேவைகள் வாகனங்களில் மக்கள் அதிகப்படியாக இருக்கும் இடங்களுக்கு தேடி சென்றன.

ஒரு காலத்தில் பணம் எடுக்க வேண்டுமெனில் வங்கி ஏடிஎம்களை நாம் தேடி சென்ற காலம் போய் தற்போது ஏடிஎம்கள் நம்மை தேடி வருகின்றன. இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்தது. இந்த நிலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இதையெல்லாம் தாண்டி ஒரு படி மேலே சென்று விட்டது. ஆமாங்க சீனியர் சிட்டிசன்களை குறிவைத்து இந்த மொபைல் சேவைய அறிமுகப்படுத்தியுள்ளது.

குறிப்பாக சீனியர் சிட்டிசன்களுக்கு உதவும் வகையிலும் பேங்க் ஆப் வீல்ஸ் என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் தமிழ் நாடு, கேரளா, விஜயவாடா உள்ளிட்ட மாநிலங்களின், முக்கியமான 14 மாவட்டங்களில் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாம்.

இந்த பேங்க் ஆப் வீல்ஸ் வசதி சீனியர் சிட்டிசன்களுக்கு மிக உதவியாக இருக்கும் என்றும், குறிப்பாக இந்த வாகனங்களில் சிறிய ஏடிஎம்களும் இருக்குமாம். இதோடு பாஸ்புக் பிரிண்டிங்க், பணம் டெபாசிட் செய்தல் உள்ளிட்ட இன்னும் பல ஃபைனான்சியல் தொடர்பான சேவைகளும் செய்து தரப்படுமாம்.

தமிழகத்தில் குறிப்பாக சென்னை, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் முதல் கட்டமாக அமல்படுத்தப்படுகிறதாம். மோடியின் டிஜிட்டல் கனவு விரைவில் கொஞ்சம் கொஞ்சமாக நனவாகி கொண்டே என்றே கருதலாம்.

இதற்கு முன்பு ஒரு சில வங்கிகம் மட்டுமே இந்த மொபைல் ஏடிஎம் சேவையை செய்து வந்த நிலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இவ்வாறு மக்களுக்கு பயன்படும் வகையில் அறிமுகபடுத்தியிருப்பது மிக பயனுள்ளதாக இருக்கும் என்றும், குறிப்பாக கிராமப்புறங்களுக்கு இது போன்ற சேவைகளை கொண்டு சேர்த்தால் மக்கள் மிகுந்த பயனடைவார்கள் என்பதே மக்களின் கருத்தாக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IOB launches “Bank on wheels” facility for leading states

IOB on Monday announced that it has launched ‘Bank on Wheels’ facility in its lead districts in Tamil Nadu and Kerala and Vijayawada. Particularly karur, nagapattinam, Chennai, kannayakumari in tamilnadu.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X