பழைய உப்புமாவா.. இருக்கட்டுமே காசு கொடுக்கிறோமில்ல.. விரும்பி உண்ணும் பிரிட்டிஸ் பெரியவர்கள்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லண்டன் : இன்று நம்மில் பலர் ஷாப்பிங் செய்யும் போது பெரும்பாலும் பொருட்களை வாங்கும் போது காலாவதி தேதி பார்த்து தான் வாங்குகிறோம். ஏனெனில் காலாவதியான பொருட்களை உண்டு அதனால் எதுவும் பிரச்சனை வந்துவிடுமோ என்ற கவலை இருக்கிறது. ஆனால் லண்டனில் உள்ள பெரியவர்கள் காலாவாதியான பொருட்களைத்தான் விரும்பி சாப்பிடுகிறார்கள் என்று ஒர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாம்.

ஆமாங்க.. 2000 பெரியவர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில் பலர் பாலாடைக்கட்டி காலாவதி தேதி முடிவடைந்து இருந்தாலும், தேதி முடிவடைந்த பின்னரும் கூட 10 நாட்களுக்கு விரும்பி உண்ணுகிறார்களாம். அதே ரொட்டி துண்டுகள் காலாவதி தேதிக்கும் பின்னரும் கூட 5 நாட்கள் கழித்தும் உண்ணப்படுகிறதாம். இதே மீன்கள் 3 நாட்களுக்கு பின்னர் வரை உண்ணப்படுகிறதாம்.

பழைய உப்புமாவா.. இருக்கட்டுமே காசு கொடுக்கிறோமில்ல.. விரும்பி உண்ணும் பிரிட்டிஸ் பெரியவர்கள்

இதே போல வென்ணெயையும் 10 நாட்களுக்கு பின்பும் கூட உபயோகப் படுத்துகிறார்களாம். இங்கிலாந்தில் இன்றளவிலும் கூட பாதிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இவ்வாறு காலாவதி தேதி முடிவடைந்தாலும் கூட உணவு பொருட்களை வீணடிப்பதில்லையாம் பார்த்துக்கோங்க.

அதிர வைக்கும் தில்லாலங்கடி.. ரூ.351 கோடிக்கு ஸ்டெராய்டு ஊக்க மருந்துகளை விற்ற ஒஸ்தி கடத்தல்காரர்! அதிர வைக்கும் தில்லாலங்கடி.. ரூ.351 கோடிக்கு ஸ்டெராய்டு ஊக்க மருந்துகளை விற்ற ஒஸ்தி கடத்தல்காரர்!

இதற்கு காரணம் அதிகளவு உணவு பொருட்கள் வீணாகிறது என்ற கவலை ஒரு புறம் இருந்தாலும், செலவும் அதிகம் ஆகிறது என்ற கவலையும் இருக்கிறதாம்.

அதே சமயம் இந்த ஆய்வில், இங்கிலாந்தில் மூன்றில் ஒரு பங்கு வீடுகளில் இவ்வாறு காலாவதியாகும் பொருட்களை, தூக்கி எறிந்து விடுவது தெரிய வந்துள்ளது.

அதிலும் மற்ற பொருட்களை விட பால் ரொட்டி தான் அதிகளவில் வீணாவது கண்டறியப்பட்டுள்ளதாம். குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 490 மில்லியன் பின்ட்ஸ் (லிட்டர் அளவு போன்றது). அளவு பால் வீணாகிறாதாம். ஒரு பின்ட்ஸ் என்பது கிட்டதட்ட 0.47 லிட்டராகும்.

மேலும் இந்த ஆய்வில் 35% பேர் தங்களுக்கு உணவு பொருட்கள் அவசியம் என்றால் மட்டுமே வாங்குகிறார்களாம். 29% தங்களுக்கு எது நல்லது, எது நீண்ட ஆயிளைக் கொண்ட பொருட்கள் என்று பார்த்து பார்த்து பொருட்களை வாங்குகிறார்களாம்.

உணவுப்பொருட்கள் இவ்வாறு வீணாவதை தடுப்பதில் எவ்வளவு தான் நடவடிக்கைகள் எடுத்தாலும், 10ல் 6 பேர் உணவு பொருட்களை எப்படியேனும் வீணடிக்கிறார்களாம். இதை அவர்களே ஒப்புக்கொள்ளவும் செய்கிறார்களாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: british food உணவு
English summary

most of british adults happy to eat out of date food to stop waste

Most of British adults are happy to eat out of date food, a study has found.Researchers who polled some of adults found that people would comfortably eat cheese 10 days after its “best before” date also bread five days past its best and fish three days after it’s out of date.
Story first published: Friday, June 7, 2019, 15:02 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X