ரூ.6000 பென்சன் பெற தகுதியான விவசாயிகளைப் பற்றி தகவல் கொடுங்க - மத்திய அரசு உத்தரவு

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: லோக்சபா தேர்தலில் அளித்த விவசாயிகளுக்கு பயன்படும் பென்சன் பிஎம் கிஷான் சம்மன் நிதித்திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான முறைப்படியான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன்மூலம் நாடு முழுவதும் கூடுதலாக சுமார் 2.5 கோடி விவசாயிகள் பயனடைவார்கள் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரையிலும் 14.01 லட்சம் விவசாயிகள் 2 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையை பெற்றுள்ளனர். 2.75 கோடி விவசாயிகளுக்கு இரண்டு தவணைகளும் வழங்கப்பட்டு விட்டது.

 

கடந்த பிப்ரவரி மாதத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் 12 கோடி விவசாயிகள் மட்டுமே பயனடையும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டிருந்தது. இதன்படி ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்க முடிவெடுக்கப்பட்டு, ஏற்கனவே 2 தவணைகளும் வழங்கப்பட்டு விட்டது குறிப்பிட்டத்தக்கது,

ஏற்கனவே 2 ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு மட்டுமே உதவித் தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில், பாஜக தனது லோக்சபா தேர்தல் அறிக்கையில் நாடு முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று அறிவித்தது. தற்போது தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்த உடனே பிரதமர் மோடியும் முதன் முதலில் இந்தத் திட்டத்தில் தான் கையெழுத்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

6000 ரூபாய் உதவித் தொகை

6000 ரூபாய் உதவித் தொகை

பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் உன்னத நோக்கத்தில், அவர்களின் வருமானத்திற்கும் உத்தரவாதம் அளிக்கும் வகையில் ஆண்டு தோறும் ரூ.6000 உதவித் தொகை வழங்க மத்திய அரச முடிவுசெய்தது. இதற்கான நடைமுறை வழிகாட்டுதல் விதிமுறைகளை மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டது.

2 ஏக்கர் இருக்கணும்

2 ஏக்கர் இருக்கணும்

மத்திய வேளாண் அமைச்சகம் கூறிய வழிகாட்டுதலின் படி பயிர்செய்யும் வகையில் அதிகபட்சமாக 2 ஏக்கர் விவசாய நிலம் வைத்திருக்கும் கணவன், மனைவி மற்றும் மைனர் வாரிசு ஆகியோர் மட்டுமே இத்திட்டத்தின் படி பயன்பெற முடியும் என்றும் விதிமுறை வகுக்கப்பட்டது. இதன்படி நாடு முழுவதும் சுமார் 12 கோடி விவசாயிகளுக்கு ஆண்டொன்றுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்குவதென்று மத்திய வேளாண் அமைச்சகம் முடிவு செய்தது.

பிஎம்-கிஷான் சம்மான்
 

பிஎம்-கிஷான் சம்மான்

விவசாயிகளுக்கு வழங்கும் உதவித்திட்டத்திற்கு பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டம் (Pradhan Mantri Kisan Samman Siddhi-PM-KISAN) என்று பெயரிடப்பட்டு இதற்கான முறைப்படி அறிவிப்பையும் நிதியமைச்சராக இருந்த பியூஷ் கோயல் கடந்த பிப்ரவரி மாதத்தில் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் வெளியிட்டார். இதற்காக சுமார் ரூ.75 ஆயிரம் கோடி செலவிடப்படும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது.

3.03 கோடி விவசாயிகள்

3.03 கோடி விவசாயிகள்

இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்தபடி, முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தில் முறைப்படி தொடங்கிவைத்தார். நாடு முழுவதும் சுமார் 3.66 கோடி விவசாயிகள் பயனாளிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். இது வரையிலும் சுமார் 3.03 கோடி விவசாயிகளுக்கு முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 14.01 லட்சம் விவசாயிகள்

தமிழகத்தில் 14.01 லட்சம் விவசாயிகள்

தமிழகத்தில் இதுவரையிலும் 14.01 லட்சம் விவசாயிகள் 2 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையை பெற்றுள்ளனர். பின்னர் 2.75 கோடி விவசாயிகளுக்கு இரண்டு தவணைகளும் வழங்கப்பட்டு விட்டது. இத்திட்டத்திற்காக இது வரையிலும் சுமார் ஐயாயிரத்து 215 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் விஸ்தரிப்பு

நாடு முழுவதும் விஸ்தரிப்பு

விவசாயிகளுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனை நன்கு உணர்ந்த பிரதமர் மோடியும் நாடு முழுவதும் இத்திட்டத்தை விரிவுபடுத்த முன்வந்தார். இதை பாஜக தேர்தல் அறிக்கையிலும் சேர்த்ததோடு, தனது பிரச்சாரத்திலும் குறிப்பிட்டார். தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்தால் நாடு முழுவதும் இத்திட்டத்தை விரிவுபடுத்தப்போவதாகவும் வாக்குறுதியளித்தார்.

மோடியின் முதல் கையெழுத்து

மோடியின் முதல் கையெழுத்து

மோடி சொன்னபடி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தது. மோடியே மீண்டும் பிரமராக பொறப்பேற்றார். இரண்டாம் முறையாக பதவியில் அமர்ந்த உடனே, தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடியே, விவசாயிகளுக்கு வழங்கும் 2000 ரூபாய் உதவித் தொகையை நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு வதுங்குவதற்கான திட்டத்தில் தான் முதல் கையெழுத்திட்டுள்ளார்.

அமைச்சரவை ஒப்புதல்

அமைச்சரவை ஒப்புதல்

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான திட்டத்திற்கு நிதி உதவி வழங்குவதற்கும் மத்திய கேபினட் அமைச்சரவை கடந்த மாதம் 31ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. இதன்மூலம் நடப்பு 2019-20ஆம் நிதியாண்டில் நாடு முழுவதும் உள்ள சுமார் 14.5 கோடி விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்றும் இதற்காக மத்திய அரசுக்கு கூடுதலாக சுமார் 87 ஆயிரத்து 217 கோடி ரூபாய் செலவாகும் என்று கேபினட் அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

மாநிலங்களுக்கு சுற்றறிக்கை

மாநிலங்களுக்கு சுற்றறிக்கை

மத்திய கேபினட் அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை அடுத்து, மத்திய வேளான் அமைச்சகம், அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் மத்திய அரசு ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, தங்கள் மாநிலங்களில் உள்ள பயனாளிகளை அடையாளம் கண்டு, அவர்களைப் பற்றிய தகவல்களை மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்பி வைக்கும் படி, அதில் குறிப்பிட்டுள்ளது.

100 சதவிகிதம் சரியானது

100 சதவிகிதம் சரியானது

மாநில அரசுகளும் பயனாளிகளைப் பற்றிய விவரங்களை சேகரித்து, அதனை பிஎம்-கிஷான் சம்மான் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. இந்த தரவுகளும் மாநில அரசுகள் வைத்துள்ள பயனாளிகளின் தரவுகளும் ஒத்துபோனதாக வேளாண் அமைச்சக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவித்தனர். அதோடு மாநில அரசுகளும் யூனியன் பிரதேச அரசுகளும் துரிதமாக இத்திட்டத்திற்கு பயனாளிகளை தேர்வு செய்து எங்களுக்க அனுப்பினால், பயனாளிகள் 100 சதவிகிதம் பயன்பெற முடியும் என்றும் வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

PM KISAN Samman benefits to 14.5 Crore Farmers

The Central Govt has also asked state governments to use
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X