உபேர் ஈட்ஸ்ல ஆர்டர் பண்ணா குட்டி விமானத்தில் உணவு வீட்டுக்கு வரும்

உபேர் ஈட்ஸ் நிறுவனம் தற்போது அதிக அளவில் வாடிக்கையாளர்களை கவர்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சான்டியாகோ: பிரபல உணவு சேவை நிறுவனமான உபேர் ஈட்ஸ் வாடிக்கையாளர்களுக்கு குட்டி விமானம் மூலம் உணவுகளை சப்ளை செய்வதற்கு திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக அமெரிக்காவின் சான்டியாகோ நகரத்தில் சோதனை முயற்சியாக தனது திட்டத்தை செயல்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது.

 

இதற்காக உபேர் ஈட்ஸ் நிறுவனம், அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள சாண்டியாகோ பல்கலைகக்கழகம் மற்றும் மெக்டொனால்ட்ஸ் உணவு நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து இதற்கான பரிசோதனை முயற்சியில் ஈடுபட்டு வெற்றியும் பெற்றுள்ளது.

இயந்திரத் தனமான உலகமாக மாறிவிட்ட தற்போதைய சூழலில் வீட்டில் சமைத்து சாப்பிடும் பழக்கத்தையே பெரும்பாலானவர்கள் விரைவிலேயே மறந்துவிடும் நிலை ஏற்படும் போலிருக்கிறது. கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் வாரத்தில் ஆறு நாட்களும் வீட்டில் சமைத்து சாப்பிட்டுவிட்டு, அதைய பொட்டலமாக கட்டிக்கொண்டு அலுவலகத்திற்கு கொண்டு சென்ற காலம் இருந்தது.

ஐயா மகா ஜனங்களே, Punjab National Bank-க்கு மொத்த வாராக் கடன் ரூ.25,000 கோடிங்க.. மன்னிச்சுக்குங்க! ஐயா மகா ஜனங்களே, Punjab National Bank-க்கு மொத்த வாராக் கடன் ரூ.25,000 கோடிங்க.. மன்னிச்சுக்குங்க!

சண்டே சமையலுக்கு லீவ்

சண்டே சமையலுக்கு லீவ்

வாரத்தின் ஓய்வு நாளான ஞாயிற்றுக் கிழமை மட்டும் ஒரு மாறுதலுக்காக வீட்டில் சமையலறைக்கு விடுமுறை அளித்துவிட்டு, மனைவி மற்றும் குழந்தைகளுடன் அருகில் உள்ள ஹோட்டலுக்கு சென்று விரும்பியதை தேர்ந்தெடுத்து சாப்பிட்டு வந்தனர். இதனால் ஞாயிறன்று முழு ஓய்வு எடுத்துவிட்டு, மீண்டும் திங்கள் கிழமை முதல் ஓட ஆரம்பித்த காலம் இருந்தது.

ஹோட்டல் டெலிவரி

ஹோட்டல் டெலிவரி

வேலைக்கு செல்பவர்கள் வீட்டில் சமைப்பதை படிப்படியாக குறைத்துவிட்டு தங்களுக்கு தேவையானதை ஹோட்டலில் இருந்து ஆர்டர் செய்து சாப்பிட்டு வந்தனர். ஹோட்டல்களும் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக தனியாக ஆட்களை நியமித்து குறித்த நேரத்தில் உணவுகளை டெலிவரி செய்து வந்தனர். இருந்தாலும் சில நேரங்களில் ஆட்கள் பற்றாக்குறையால் வாடிக்கையாளர்களுக்கு தேவையான உணவுகளை டெலிவரி செய்வதில் கால தாமதம் ஏற்பட்டது.

உணவு டெலிவரி ஆப்
 

உணவு டெலிவரி ஆப்

இதை சரியாக பயன்படுத்திக்கொண்ட பல நிறுவனங்களும் தங்களின் பாக்கெட்டை நிரப்பு ஆரம்பித்து விட்டன. அதுவும் எல்லாமே நவீனமயமாகிவிட்ட இந்தக் காலத்தில் மக்கள் தங்களுக்கு தேவையானதை கையிலுள்ள ஸ்மார்ட் ஃபோன்களில் மூலமாகவே பூர்த்தி செய்துகொள்கின்றனர்.

உணவு டெலிவரி தொழில்

உணவு டெலிவரி தொழில்

மக்களின் இந்த சோம்பேறித் தனத்தையும் தேவையையும், ஹோட்டல்களின் சிரமங்களையும் தங்களின் மூலதனமாக வைத்துக்கொண்டு பல நிறுவனங்கள் உணவு சப்ளை செய்யும் தொழிலில் இறங்கி அதில் கொள்ளை லாபமும் பார்க்க ஆரம்பித்து விட்டன. இந்நிறுவனங்களும் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் தினசரி பல்வேறு சலுகைகளையும் அளித்து கொள்ளை லாபம் பார்க்க ஆரம்பித்துவிட்டன.

இருசக்கர வாகனங்களில் டெலிவரி

இருசக்கர வாகனங்களில் டெலிவரி

தற்போது வாடிக்கையாளர்களுக்கு உணவு டெலிவரி செய்வதற்கு உபேர் ஈட்ஸ், ஸ்விக்கி, சோமாட்டோ, ஃபுட் பாண்டா என பல நிறுவனங்கள் வந்து விட்டன. இவை அனைத்துமே வாடிக்கையாளர்களை கவர்வதற்காக போட்டி போட்டு சலுகைகளை வாரி வழங்கி வருகின்றன. வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும் உணவுகளை முதலில் இருசக்கர வாகனங்களில் கொண்டு சென்ற சப்ளை செய்து வந்தனர்.

உபேர் ஈட்ஸ்

உபேர் ஈட்ஸ்

இரு சக்கர வாகனங்களில் கொண்டு செல்வது காலதாமதம் ஏற்படுகிறது என்பதால், கார்களிலும் கொண்டு சென்று வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்தவந்தனர். இந்த வகையில் வாடிக்கையாளர்களின் தேவையை விரைவாக பூர்த்தி செய்வதில் உபேர் ஈட்ஸ் நிறுவனம் முன்னணியில் உள்ளது.

விமானம் மூலம் டெலிவரி

விமானம் மூலம் டெலிவரி

உபேர் ஈட்ஸ் நிறுவனம் தற்போது அதிக அளவில் வாடிக்கையாளர்களை கவர்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதுவரையிலும் இருசக்கர வாகனங்களிலும் கார்களிலும் உணவுகளை டெலிவரி செய்துவந்ததை மாற்றி இனிமேல் ஆளில்லா விமானங்களில் மூலமாக உணவுகளை டெலிவரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

பரிசோதனை வெற்றி

பரிசோதனை வெற்றி

இதற்காக உபேர் ஈட்ஸ் நிறுவனம், அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள சாண்டியாகோ பல்கலைகக்கழகம் மற்றும் மெக்டொனால்ட்ஸ் உணவு நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து இதற்கான பரிசோதனை முயற்சியில் ஈடுபட்டு வெற்றியும் பெற்றுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்த உணவுகளை ஆளில்லாத ட்ரோன் விமானத்தில் வைத்து அனுப்பிவைத்தால், குறிப்பிட்ட இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் சென்று சேர்க்கும்.

உபேர் பேச்சுவார்த்தை

உபேர் பேச்சுவார்த்தை

அதை உணவு டெலிவரி செய்யும் ஆட்கள் எடுத்துச் சென்று வாடிக்கையாளர்களின் கைகளில் கொண்டு சேர்ப்பார்கள். தற்போது இந்த சோதனை வெற்றி பெற்றதை அடுத்து விரைவில் முழு சேவையும் தொடங்கப்படும் என்றும், இதற்காக பல்வேறு உணவகங்களுடனும், மொபைல் நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக உபேர் ஈட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Uber Eats ready to supply food by Drone in San Diego

Uber Eats will start delivering food with drones in San Diego this summer, aiming to test out ways to connect a payload to customers in a dense urban environment where there’s no easy way to fly to their front door.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X