Budget 2019 : முத்ரா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ரூ.1 லட்சம் கடன்.. அதிரடியான சில அறிவிப்புகள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : பட்ஜெட் தாக்கலில் முக்கிய பல அம்சங்களில் பெண்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் கடன் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார் நிர்மலா சீதாராமன்.

 

பொது வாழ்க்கையில் பெண்களின் பங்களிப்பு கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு தற்போது அதிகரித்துள்ளது. அதற்கு எடுத்துக்காட்டு பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளதை தேர்தல் முடிவுகளும் காட்டுகின்றன. அதோடு பெண்கள் பங்களிப்பு மட்டுமின்றி பெண்கள் தலைமையேற்கவும் தொடங்கி விட்டனர் என்றும் கூறி இருந்தார் நிர்மலா சீதாராமன்.

 
Budget 2019 : முத்ரா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ரூ.1 லட்சம் கடன்.. அதிரடியான சில அறிவிப்புகள்!

குறிப்பாக சுய உதவிக்குழு பெண்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் கடன் பெற அனுமதி வழங்கப்படும் என்றும் கூறியிருந்தது கவனிக்கதக்கது.

அதோடு புதிதாக தொழிலாளர் முன்னேற்றத்துக்கான சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும்

என்றும், தேசத்தின் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க அதிரடியான பல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும் தனியார் மற்றும் அரசு பங்களிப்புடன் மகளிர் மேம்பாட்டு திட்டங்களை மேற்கொள்ள தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மனிதர்களே மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் நிலையை ஒழிப்பதற்காக தொழில்நுட்ப வசதிகள் ரோபோடிகை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அரசுத்துறை உட்பட அனைத்து துறைகளிலும் டிஜிட்டலில் பணம் செலுத்தும் வசதிகள் உள்ளன.

அதோடு மின்சாரம் வீணடிக்கப்படுவதை தவிர்க்க 35 கோடி எல்இடி பல்புகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு வழங்கப்பட்ட இலவச எல்இடி பல்புகளால் ரூ.18,341 கோடி மிச்சப்படுத்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வங்கிகளில் வாராக்கடன் கடந்தாண்டில் ஒரு லட்சம் கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. எனினும் வங்கிகள் மேலும் சிறப்பாக செயல்பட, பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.70,000 கோடி முதலீட்டு மூலதனம் தரப்படும் என்றும், அதேசமயம் பொதுத்துறை வங்கிகளின் நிர்வாக சீரமைப்புக்கான நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும் வங்கிசாரா நிதி நிறுவனங்களை ஊக்குவிக்க தேவையான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளார் நிர்மலா சீதாராமன்.

இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் வீட்டுக்கடன் நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதுவே பொதுத்துறை நிறுவனங்களில், அரசின் பங்கு குறைந்தபட்சம் 51 சதவிகிதமாக நீடிக்கும் என்றும், அதேசமயம் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம் ரூ.1.05 லட்சம் கோடி நிதி திரட்டவும் திட்டமிடப்பட்டுள்ளதாகபும் கூறப்பட்டுள்ளது.

Non-resident Indians இந்தியா வந்த உடனேயே ஆதார் அட்டை வழங்கப்படும் என்றும், இதற்காக அவர்கள் 180 நாள் காத்திருக்க தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

உலகத்தரத்தில் 74 புதிய சுற்றுலா மையங்கள் ஏற்படுத்தப்படும் என்றும், அதோடு அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.100 லட்சம் கோடிகளை அரசு முதலீடு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடன் பிரச்சனையில் சிக்கித் தவிக்கும், ஏர் இந்தியா பங்குகளை விற்பதற்கான நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதோடு பார்வையற்றோரும் தெரிந்துகொள்ளும் வகையில் 1,2,5,10,20 ரூபாய் நாணயங்கள் புதிதாக வெளியிடப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Budget 2019: Rs 1 lakh loan under Mudra scheme for women entrepreneurs

Budget 2019: Rs 1 lakh loan under Mudra scheme for women entrepreneurs
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X