Saravana Bhavan ராஜகோபாலின் வாழ்நாளில் தொழிலாளர்களுக்கு இவ்வளவு செய்திருக்கிறாரா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மயிலாப்பூர், சென்னை: 1990-களின் மத்தியில் நியூயார்க் டைம்ஸ் சார்பாக Rollo Romig என்பவர் மயிலாப்பூர் Saravana Bhavan-ஐ சுற்றிப் பார்க்க வருகிறார்.

Saravana Bhavan உணவகம், Saravana Bhavan-ன் மொரு மொரு தோசை, பஞ்சு இட்லி, உளுந்து வாசம் தூக்கும் வடை என ஐட்டங்களைத் தயாரிக்கும் பிரம்மாண்ட சமையல் அறை போன்றவைகளை எல்லாம் பார்வை இடுகிறார்.

அதோடு, வெளிநாடுகளில், தங்க பான் கேக்காக பார்க்கப்படும் Saravana Bhavan-ன் தோசைக்கான மாவை எப்படி தயாரிக்கிறார்கள் என்றும் கேட்டு அறிந்து கொண்டிருக்கிறார். எல்லாம் முடித்துக் கொண்டு புறப்படும் போது Saravana Bhavan-ல் வேலை பார்ப்பவரோடு பேச்சு கொடுக்கிறார்.

முதலாளி

முதலாளி

1. உங்க முதலாளி எப்படி..? என ரோலோ கேட்கிறார்
"அவுக நம்ம ஐயா (அப்பா) மாதிரிங்க, நம்ம குடும்பத்துல ஒருத்தவுக. நமக்கு என்ன சங்கடம்ன்னாலும் அவர் கிட்ட தைரியமா சொல்லலாம். அதுக்கு மேல அவுக பாத்துப்பாக" என திருநெல்வேலி மணத்தில் பேசுகிறார் ஒரு ஊழியர்.
2. அவர் சொந்த ஊருக்கு போக தனியா விடுமுறை பணம்...
முடிப்பதற்குள் ஊழியர் பேசத் தொடங்குகிறார் "ஆமாங்க, அண்ணாச்சி பெறந்த ஊர் தூத்துக்குடி பக்கம் புன்னையாடிங்குற கிராமம் தான். ஒவ்வொரு வருஷமும் அண்ணாச்சியோட சொந்த ஊருக்கு போக வர கம்பெனிலருந்து காசு கொடுப்பாக" என்கிறார்.

 மரியாதை

மரியாதை

3. உங்கள் முதலாளியின் ஊரில் அவருக்கான மரியாதை எப்படி..?
"என்னங்க இப்புடி கேட்டுப்புட்டீங்க..? நான் புன்னையாடிக்கு போறப்ப எல்லாம், ஊர் சனங்க அண்ணாச்சி மேல வெச்சிருக்குற அன்பையும் மரியாதையையும் கண் முன்ன பாக்க முடியுமுங்க" என்கிறார் ஊழியர்.
4. உங்களுக்கு நிறைய சலுகைகள் தருவதாகச் சொல்கிறார்களே..? என ரோலோ கேட்கிறார்.
"ஆமாங்க. எங்களுக்கு ஒரு செல்போன், ஒரு பைக்கு, பைக்குக்கு பெட்ரோல் போட காசு, தினமும் பேப்பர் (தினசரி) வாங்க தனி படிக் காசுன்னு எல்லாம் தருவாக. இத்தனை நாள் முடி வெட்டுறதுக்கு கூட காசு கொடுத்துக்கிட்டு இருந்தாக. இப்ப தான் சில மாசம் முன்ன தான் அத நிறுத்துனாக" என்கிறார் மற்றொரு ஊழியர்.

 குறைந்திருக்கா

குறைந்திருக்கா

5. இதுவரை உங்களுக்கான சலுகைகள் குறைந்திருக்கிறதா..?
"நிச்சயமா இல்லிய்ங்க. நாங்க இங்க பல வருஷமா வேலை பாத்துக்கிட்டு இருக்கோம். ஒவ்வொரு வருஷமும் ஏதுனா சலுகை அதிகரிச்சிக்கிட்டேத் தான் இருக்கும். இன்னும் சொல்லப் போனா ஓட்டுறதுக்கு வண்டி, வண்டில போட பெட்ரோல், அதோடு வண்டி ரிப்பேர் ஆன கூடா சரி செஞ்சிக் கொடுக்க மெக்கானிக் எல்லாம் எங்களுக்காக வச்சிருக்காரு பெரியவர் (ராஜகோபால்)" என்கிறார் ஒரு மதுரைக் கார ஊழியர்.

 

 

 காசு அப்படியே இருக்கும்

காசு அப்படியே இருக்கும்

6. நிருபர் கேள்வி கேட்பதற்கு முன்பே...
எங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் கூட "சரவண பவன்ல வேலை பாக்குறவிய்ங்களுக்கு எல்லாம் என்ன தாண்டா செலவு இருக்கும்..? எல்லாத்தையும் உங்க கம்பெனியே பாத்துக்குறாய்ங்க, ஒரு நல்லது கெட்டதுக்கும் உங்க முதலாளி பணம் தர்றார், அன்றாட செலவுகளுக்கும் படிக் காசு தந்திடுறாய்ங்க... வாங்குற சம்பளத்த பூராவும், பேங்குல வட்டிக்கு போட்டு வெச்சிக்குவீய்ங்களோ..?" என்று கிண்டலா ஓட்டுவாய்ங்க என்கிறார் இன்னொரு சரவண பவன் ஊழியர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

saravana bhavan rajagopal well taken care of his employees

saravana bhavan rajagopal well taken care of his employees
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X