JW Marriott: 2 வாழைப் பழம் 442 ரூபாய் பில்..? கடுப்பான விஸ்வரூபம் ஒமர் பாய்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சண்டிகர்: கமல் ஹாசனின் சர்ச்சைக்குரிய பல படங்களில் விஸ்வரூபமும் ஒன்று. அந்த படத்தில் ஒமர் குரேஷி வேடத்தில் நடத்திருப்பார் பாலிவுட் நடிகர் ராகுல் போஸ். இவர் Shaurya, Dil Dhadakne Do போன்ற பல நல்ல படங்களில் நடித்து மக்கள் கவனத்தை ஈர்த்தவர்.

இவர் நடிப்பைப் பாராட்டி டைம், மேக்ஸிம் போன்ற புகழ் பெற்ற ஆங்கில பத்திரிகைகளே இவரை கொண்டாடி இருக்கின்றன. நம்மூர் சத்தியராஜ் போல கொடுக்கும் பாத்திரத்தை சிறப்பாக செய்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சரி JW Marriott விஷயத்துக்கு வருவோம்.

JW Marriott என்று சொன்னதும் பலருக்கு தெரிந்திருக்கும், தெரியாதவர்கள் குழம்ப வேண்டாம். நம் தேனாம்பேட்டை கனரா வங்கிக்கு அருகில் Courtyard by Marriott என ஒரு பெரிய ஹோட்டல் இருக்குமே... அதே ஹோட்டல் தான்.

JW Marriott

JW Marriott

சில நாட்களுக்கு முன், நம் விஸ்வரூபம் ஒமர் பாய் சண்டிகரில் உள்ள ஜே டபிள்யூ மாரியட் (JW Marriott) ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கி இருக்கிறார். தினமும் ஜிம்மில் சில மணி நேரங்களை செலவிட்டு உடற்பயிற்சி செய்வது பல நடிகர்களின் வழக்கமாகிவிட்டது. அப்படித் தான் இவரும். JW Marriott ஜிம்மில் சில மணி நேர பயிற்சிக்குப் பின், இரண்டு வாழைப் பழங்களை ஆர்டர் செய்திருக்கிறார்.

அதிர்ச்சி

நம் விஸ்வரூபம் ஒமர் பாய் தங்கி இருந்த அறைக்கு வாழைப்பழத்தைக் கொண்டு வந்து கொடுக்கிறார்கள். அதோடு வழக்கம் போல வாழை பழத்துக்கான பில்லும் வருகிறது. இரண்டு வாழை பழத்துக்கு எவ்வளவு கொடுக்கலாம். ஐந்து நட்சத்திர விடுதி என்றால் அதிக பட்சம் ஒரு 50 ரூபாய் வாங்கலாமா அல்லது 100 ரூபாய் வாங்கலாமா..? நம் JW Marriott 442 ரூபாய் 50 பைசா என பில் போட்டுக் கொடுத்திருக்கிறது. அதை தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவாக பகிர்ந்திருக்கிறார்.

ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி

இதில் கொடுமையான விஷயம் என்ன தெரியுமா..? இரண்டு வாழைப் பழத்தை, JW Marriott வாழை பழமாக பில் போடவில்லை. Fruit Platter என்கிற பெயரில் போட்டு 375 ரூபாய்க்கு 18 சதவிகித ஜிஎஸ்டி 67.5 ரூபாய் என மொத்தம் 442.5 ரூபாய் பகல் கொள்ளை அடித்திருக்கிறார்கள். வாழைப்பழத்துக்கு ஜிஎஸ்டி கிடையாது எனச் சொல்கிறது க்ளியர் டாக்ஸ் என்கிற வரி சார் வலைதளம்.

கருத்துக்கள்

கருத்துக்கள்

விஸ்வரூபம் ஒமர் பாயின், JW Marriott வீடியோவைப் பார்த்து பலரும் தங்கள் கோபத்தையும், நியாயத்தையும் முன் வைத்திருக்கிறார்கள். ஒரு சிலர் JW Marriott செய்தது தவறு. இப்படி பகல் கொள்ளை அடிக்கக் கூடாது எனச் சொல்லி இருக்கிறார்கள். வேறு சிலரோ JW Marriott போன்ற விலை உயர்ந்த விடுதிகளில் தங்கினால் இவ்வளவு விலை கொடுத்து 2 வாழைப்பழத்தை வாங்கத் தான் வேண்டும். அவ்வளவு விலை கொடுக்க முடியவில்லை என்றால் வேறு விடுதிக்கு நாம் தான் மாற வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: banana gst ஜிஎஸ்டி
English summary

JW Marriott charge rs 442 for 2 banana as fruit platter

JW Marriott charge rs 442 for 2 banana as fruit platter
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X