மரண அடி வாங்கப்போகும் ஆட்டோமொபைல் துறை.. அடுத்து என்ன நடக்கும்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : ஏற்கனவே பலத்த அடியை வாங்கியுள்ள ஆட்டோ மொபைல் துறை, இன்னும் பலத்த அடியை பெறும் என்றும் கூறப்படுகிறது. ஆமாங்க.. ஏற்கனவே விற்பனை சரிவால், உற்பத்தியை பல நிறுவனங்கள் குறைத்துள்ளன.

இதனால் பல லட்சம் பேர் வேலை பறிபோகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அதை உறுதி செய்யும் விதமாகவே பல செய்திகள் தொடர்ந்து வெளியாகி கொண்டே வருகின்றன.

அதிலும் குறிப்பாக பல முன்னணி நிறுவனங்கள், விற்பனையிலும் சரிவை சந்தித்தையடுத்து, உற்பத்தியையும் குறைந்துள்ளன. மேலும் ஆட்டோமொபைல் துறையில் வரவிருக்கும் புதிய விதிகளால் இன்னும் பிரச்சனைகள் அதிகமாகக் கூடும் என்றும் கூறப்படுகிறது.

லட்சக்கணக்கானோர் வேலையிழக்கும் அபாயம்?

லட்சக்கணக்கானோர் வேலையிழக்கும் அபாயம்?

ஆட்டோமொபைல் துறையில் வாகனங்களின் தேவை குறைந்துள்ளதையடுத்து, ஏற்கனவே விற்பனை சரிவைக் கண்டுள்ளன. இந்த நிலையில் இனி வர விருக்கும் BS VI விதிமுறையால், வாகன உற்பத்திகள் மேலும் குறைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் பல லட்சம் பேர் வேலை பறிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் பல லட்சம் பேர் வேலை இழந்து தவிக்கும் நிலை வரலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த புதிய வாகன விதிகள், ஏற்கனவே பிரச்சனையில் உள்ள ஆட்டோமொபைல் துறையை, மேலும் உச்ச கட்ட ஆபத்திற்கே கொண்டு செல்லலாம் என்றும் கருதப்படுகிறது.

விற்பனை சரிவு எதனால்?

விற்பனை சரிவு எதனால்?

தொய்வடைந்த நிலையில் உள்ள இந்த துறை, அதிகளவு ஜி.எஸ்.டி வரி விகிதம், மழையின்மை காரணமாக உற்பத்தி குறைவால் கிராமப்புறங்களில் விற்பனை சரிவு, மந்த நிலையில் இருக்கும் பொருளாதார வளர்ச்சி, பொருளாதார மந்த நிலையால் ஊழியர்களுக்கு சம்பளம் சரியாக தர முடியாமை இது போன்ற பல காரணங்களால் வாகன விற்பனை வெகுவாக குறைந்துள்ளது. இதனால் மாத மாதம் விற்பனையாகும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகிறது என்றும் கூறப்படுகிறது.

தலைவலியாக மாறியுள்ள அதிக வாகனங்கள் இருப்பு

தலைவலியாக மாறியுள்ள அதிக வாகனங்கள் இருப்பு

இது தவிர டீலர்ஷிப் மட்டத்தில் சரக்குகளை குவித்தல் மற்றும் விற்கப்படாத BS IV ரக வாகனங்கள் இந்த துறைக்கு மற்றொரு தலைவலியாக மாறியுள்ளன. இந்த நிலையில் கிராண்ட் தோர்டன் இந்தியா (Grant Thornton ) பார்ட்னர் ஸ்ரீதர் வி கூறுகையில், பயணிகள் வாகன விற்பனை தொடர் வீழ்ச்சியை கண்டு வருவதையடுத்து, உற்பத்தி மேலும் குறைக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜி.எஸ்.டி வசூல் குறையும்

ஜி.எஸ்.டி வசூல் குறையும்

மொத்த உற்பத்தி வளர்ச்சியில் கிட்டதட்ட பாதியை வகிக்கும் ஆட்டோமொபைல் துறையில், விற்பனை சரிவு, உற்பத்தி பாதிக்கப்படும் வகையில், மொத்த ஜி.எஸ்.டி வருவாயில் 11 சதவிகிதம் பங்களிப்பு செய்யும் ஆட்டோ மொபைல் துறை முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக உள்ளது. இந்த நிலையில் இத்துறை பாதிக்கப்படும் நிலையில் ஒட்டுமொத்த துறையும் பாதிக்கும் என்றும் கருதப்படுகிறது.

உற்பத்தி குறைப்பு கட்டாயம் தேவை

உற்பத்தி குறைப்பு கட்டாயம் தேவை

நீண்டகால விற்பனை சரிவால், டீலர்ஷிப் ஷோரூம்களில் வாகனங்கள் குவிந்து கிடக்கிறது. இதனால் உற்பத்தி குறைப்பு கட்டாயம் தேவை என்றும் India Ratings & Research (Fitch Group) நிறுவனத்தின் மூத்த ஆய்வாளர் ரிச்சா புலானி ஐ.ஏஎன்.எஸ்ஸிடம் கூறியுள்ளார். எனினும் இந்த உற்பத்தி குறைப்பு குறுகிய கால அளவில் டீலர்களை பாதுகாத்தாலும், இது முழு வாகன விநியோக சங்கிலியையும் பாதிக்கும் என்றும் ஸ்ரீதர் கூறியுள்ளார்.

பயணிகள் வாகனம் விற்பனை குறைந்தது

பயணிகள் வாகனம் விற்பனை குறைந்தது

சமீபத்தில் பயணிகள் வாகனம், வணிக வாகனம், மூன்று மற்றும் இரு சக்கர வாகனங்கள் உற்பத்தியாளர்கள், உள்நாட்டு விற்பனையில் ஒரு பெரிய சரிவைக் கண்டுள்ளது என்றும் கூறியுள்ளன. இந்த நிலையில் இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் (SIAM) உள் நாட்டு பயணிகள் கார் விற்பனை, கடந்த ஜூன் மாதத்தில் 24.07 சதவிகிதம் குறைந்து, 1,39,628 ஆக குறைந்துள்ளதாக கூறியுள்ளது.

ஒட்டு மொத்த வாகன விற்பனையும் வீழ்ச்சி

ஒட்டு மொத்த வாகன விற்பனையும் வீழ்ச்சி

இதே வணிகப்பிரிவில், வணிக வாகன உள்நாட்டு விற்பனையானது 12.27 சதவிகிதம் குறைந்து, 70,771 ஆக குறைந்துள்ளது என்றும் கூறியுள்ளது. மேலும் மொத்த இரு சக்கர வாகன விற்பனையும், ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மொபட்கள் உள்ளிட்ட மொத்த இரு சக்கர வாகனங்களின் விற்பனை 11.69 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு 1,649,477 யூனிட்களாக குறைந்துள்ளன. இந்த நிலையில் மொத்தத்தில் இந்திய ஆட்டோமொபைல் துறையின் ஒட்டு மொத்த விற்பனை 2019ம் ஆண்டு ஜூன் மாதத்தில் 12.34 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு, 1,997,952 யூனிட்கள் குறைந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

ஒட்டுமொத்த வாகன உற்பத்தியும் குறைந்தது

ஒட்டுமொத்த வாகன உற்பத்தியும் குறைந்தது

விற்பனை மந்தநிலை காரணமாக, உள்நாட்டு பயணிகள் கார்களின் உற்பத்தி 22.26 சதவிகிதம் குறைந்து, 2,158,167 யூனிட்களிலிருந்து, 1,69,594 யூனிட்களாக குறைந்துள்ளது. இதே போல் வர்த்தக வாகன உற்பத்தியும் கடந்த மாதத்தில் 23.39 சதவிகிதம் குறைந்து 69,496 ஆக குறைந்துள்ளது, மேலும் ஒட்டுமொத்த இருசக்கர வாகனங்களின் உற்பத்தியும் 11.70 சதவிகிதம் குறைந்து 1,915,195 ஆக குறைந்துள்ளது. ஆக மொத்தத்தில் இந்திய ஆட்டோமொபைல் மொத்த உற்பத்தி கடந்த ஜூன் மாதத்தில் 12.98 சதவிகிதம் குறைந்து, 2,336,138 யூனிட்களாக குறைந்துள்ளது.

உற்பத்தி கட்டுப்பாடுகள் இருக்கும்

உற்பத்தி கட்டுப்பாடுகள் இருக்கும்

உற்பத்தி அலகுகளில் இறுக்கமான கட்டுப்பாடுகள் தொடரும் என்றும், வரவிருக்கும் பண்டிகை காலங்களுக்கு பின்பும் போதுமான அளவு இருப்பு இருக்கும் நிலையில், உற்பத்தியாளர்கள் உற்பத்தியை கட்டுக்குள் வைத்திருப்பார்கள் என்றும் A.T. Kearneyன் முதல்வர் ராகுல் மிஸ்ரா கூறியுள்ளார். மேலும் BS VI விதிமுறையால் வாகனங்களின் தேவை இன்னும் குறையலாம் என்ற நிலையில் அடுத்த சில மாதங்களுக்கு இந்த உற்பத்தி கட்டுப்பாடுகள் நீடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்கிறார் மிஸ்ரா.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Auto industry may cut further production

Auto industry may cut further production
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X