என்னங்க 15 சதவிதம் பேர் கூட GST சமர்பிக்கலயா..? புதிய இந்தியா பொறந்தா மாதிரித்தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி, இந்தியா: GST வரிப் படிவம் 9, 9A,9C போன்ற படிவங்களைத் தாக்கல் செய்ய கடைசி தேதி ஆகஸ்ட் 31, 2019. இந்த மூன்று படிவங்களையும் சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் அரசிடம் முறையாக சமர்பிக்க வேண்டி இருக்கிறது.

 

ஆனால் இதுவரை ஒட்டு மொத்தமாக சுமார் 15 சதவிகிதம் பேர் தான் GST 9, 9A,9C ரக படிவங்களை முறையாக நிரப்பி சமர்பித்திருக்கிறார்களாம்.

ஏன் இந்த தேக்கம். புதிய இந்தியாவைக் கொண்டு வரும், இந்த புதிய வரித் திட்டத்தை முழுமையாக புரிந்து கொண்டு செயல்பட ஏன் திணறுகிறார்கள்...? வாங்க பாப்போம்.

Mutual funds வழியாக infrastructure பங்குகளில் மட்டும் முதலீடு செய்ய முடியுமா? அட இது நல்லா இருக்கே!

எத்தனை பேர்

எத்தனை பேர்

சில தினங்களுக்கு முன் தான் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வரி வாரியத்தின் (Central Board of Indirect Taxes and customs CBIC) தலைவர் ப்ரனாப் கே தாஸ், இந்தியாவின் அனைத்து முதன்மை வரி ஆணையர்களுக்கும் ஒரு கடிதம் அனுப்புகிறார். அதில் ஆகஸ்ட் 03, 2019 நிலவரப்படி, GST படிவம் எண் 9-ஐ வெறும் 14.85 லட்சம் பேர் மட்டுமே சமர்பித்திருப்பதாகவும், GST படிவம் எண் 9A-வை 4.33 லட்சம் பேர் மட்டுமே சமர்பித்து இருக்கிறார்களாம்.

12 லட்சம்

12 லட்சம்

GST படிவம் 9C-ஐ 11,334 பேர் மட்டுமே சமர்பித்து இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார்கள். இந்த GST படிவம் 9C-யை மட்டும் சுமார் 12 லட்சம் பேர் சமர்பிக்க வேண்டுமாம். ஆனால் இதுவரை 12,000 பேர் கூட சமர்பிக்கவில்லை. அதாவது ஒரு சதவிகித ஆட்கள் கூட தங்கள் GST படிவங்களைப் பூர்த்தி செய்து சமர்பிக்கவில்லை எனச் சொல்கிறது அரசு கணக்கு. இதற்கு சிக்கலான படிவங்கள் மற்றும் சமர்பிக்கும் முறைகள், சமர்பிக்க மிக அதிகமான தரவுகள் தேவைப்படுவது என சிக்கல்களை அடுக்குகிறார்கள் GST படிவம் நிரப்ப வேண்டிய வியாபாரிகள்.

அரசு தரப்பு
 

அரசு தரப்பு

GST படிவங்களைச் சமர்பிக்கும் கடைசி தேதி நெருங்கி வருவதால், GST சமர்பிக்க வேண்டியவர்களுக்கு உதவும் படி, அனைத்து பிராந்திய மறைமுக வரி அதிகாரிகளுக்குச் சொல்லி இருக்கிறார் சிபிஐசி தலைவர். அதோடு ஆணையரகங்களில் GST சமர்பிக்க வேண்டியவர்களுக்கு போதுமான வகுப்புகளை நடத்தி, அவர்களை GST படிவங்களை முறையாக சமர்பிக்க வைக்கும் படிச் சொல்லி இருக்கிறார் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வரி வாரியத் தலைவர் ப்ரனாப் கே தாஸ்.

சிக்கல்கள்

சிக்கல்கள்

பட்டயக் கணக்காளர்களோ "GST படிவங்களைச் சமர்பிக்க சிக்கலான மற்றும் அதிக அளவிலான தரவுகள் தேவைப்படுகின்றன. உதாரணமாக எட்டு இலக்க ஹெச் எஸ் என் கோட்கள். ஆனால் சட்டப்படி நான்கு இலக்க ஹெச் எஸ் என் கோட்கள் இருந்தாலே போதுமானது. தற்போது HSN-wise purchase summary தேவைப்படுகிறது. ஆனால் இந்த தரவுகள் மாதாந்திர ஜிஎஸ்டி தாக்கலில் தேவைப்படவில்லை. இப்படி ஏற்கனவே சமர்பித்த மாதாந்திர GST விவரங்கள் போக, தற்போது ஏகப்பட்ட கூடுதல் விவரங்கள் இருந்தால் தான் GST சமர்பிக்க முடியும் என்கிற நிலை உருவாகி இருக்கிறது" என புலம்புகிறார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

not even 15 percent filers filed gst annual returns cbic in action

not even 15 percent filers filed gst annual returns cbic in action
Story first published: Saturday, August 10, 2019, 14:28 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X