கார், பைக்குத் தான் பார்த்தா.. ஜட்டி கூடவா..?!!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி துறையின் இதயமாக விளங்கி வரும் ஆட்டோமொபைல் துறை தற்போது விற்பனை அளவுகளில் பெரிய அளவிலான சரிவைச் சந்தித்து நாட்டின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்தம், ஊழியர்கள் பணி நீக்கம், மூத்த அதிகாரிகளுக்கு விஆர்எஸ் எனப் பல மோசமான சம்பவங்களை நிகழ்த்தி வருகிறது. இதனால் செப்டம்பர் காலாண்டில் மட்டும் நாட்டில் சுமார் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழக்க நேரிடம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

வாகனங்கள் விலை அதிகமான என்பதால் விற்பனை சரிந்துள்ளது என்று ஒருபக்கம் வைத்துக்கொண்டால், மறுபுறம் விலையில் குறைவான உள்ளாடை விற்பனை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்குக் குறைந்துள்ளது.

உள்ளாடை விற்பனை குறைந்தால் என்ன..? அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா..? உண்மை தெரிந்தால் வருத்தம் மட்டுமே மிஞ்சும்..!

உள்ளாடை விற்பனை

உள்ளாடை விற்பனை

இந்தியா தற்போது பலதரப்பட்ட வர்த்தகம் மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறது, குறிப்பாக மோடியின் இந்த 2வது ஆட்சிக்காலத்தில் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி இந்தியாவிலும் ஏற்படும் அளவிற்குச் சூழ்நிலை உருவாகியுள்ளது என்றால் மிகையில்லை.

இந்த மோசமான சூழ்நிலைக்கு உதாரணம் தான் உள்ளாடை விற்பனையில் ஏற்பட்டுள்ள சரிவு.

 

ஜூன் காலாண்டு

ஜூன் காலாண்டு


இந்தியாவில் எப்போதும் இல்லாத வகையில் ஜூன் காலாண்டில் உள்ளாடை விற்பனை பெரிய அளவில் சரிவை சந்தித்துள்ளது, இதில் குறிப்பாக ஆண்கள் உள்ளாடை.

இதனால் இத்துறையில் இருக்கும் முன்னணி நிறுவனங்கள் கூடப் புதிய முதலீடு செய்ய யோசிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.

 

 

4 முன்னணி நிறுவனங்கள்
 

4 முன்னணி நிறுவனங்கள்

இந்தியாவில் இருக்கும் 4 முன்னணி உள்ளாடை தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனங்கள் கடந்த 10 வருடத்தில் இல்லாத வகையில் விற்பனை சரிவை சந்தித்துள்ளது.

ஜாக்கி பிராண்ட் உள்ளாடைகள் ஜூன் காலாண்டில் 2 சதவீதம் மட்டுமே விற்பனையில் உயர்வை கண்டுள்ளது. இது கடந்த 2008ஆம் ஆண்டில் இருந்து குறைவான அளவு. இதைத்தொடர்ந்து டாலர் இண்டஸ்ட்ரீஸ் 4 சதவீதமும், விஐபி கிளாதிங் 20 சதவீத விற்பனை சரிவையும் சந்தித்துள்ளது. லக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 0 சதவீத விற்பனை வளர்ச்சியைச் சந்தித்துள்ளது.

 

 

ஏழ்மை

ஏழ்மை

men's underwear index என்ற ஆய்வு 1970இல் முன்னாள் அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் அமைப்பின் தலைவர் அலென் கிரீன்ஸ்பான் வெளியிட்டார். இதன் படி ஒரு நாட்டில் உள்ளாடை விற்பனை குறைந்தால் நாட்டின் பொருளாதாரம் ஏழ்மையான நிலையில் இருப்பதைக் குறிக்கும் என விளக்கியுள்ளார்.

தற்போது இந்தியாவில் இதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளதால் பொருளாதார வல்லுனர்கள் மட்டும் அல்லாமல் மக்களும் உஷாராக இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

 

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Is Indian economy on poor state? Innerwear sales reveals truth

A slowdown in briefs can be revealing, according to Alan Greenspan. Innerwear sales growth fell sharply in the June quarter. Conceived by former US Federal Reserve Board chairman Greenspan in the late 1970s, the index suggests that declines in the sale of men’s underwear indicate a poor overall state of the economy, while upswings
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X