இருப்பவர்களுக்கே வேலையை காணோம்.. இதில் ஜாப் ஒர்க்கா.. போய் வேற வேலைய பாருங்கப்பு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திருப்பூர்: திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும், பஞ்சாலைகள், பின்னலாடைகள், விசைத்தறி கூடங்கள், நெசவு தொழில் என பல ஆயிரம் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது.

அதிலும் அதிகளவில் ஏற்றுமதி செய்யும் பின்னலாடை நிறுவனங்கள் திருப்பூரில் மிக அதிகம். நிறுவனங்கள் இங்கு அதிகம் என்றாலும், இது சார்ந்த தொழில்கள், நம்பியூர், குன்னத்தூர், சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், பல்லடம், காங்கயம் மற்றும் கோயமுத்தூர், ஈரோடு உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக செய்யப்பட்டு வருகிறது.

மேலும் இந்த தொழிலுக்கு தேவையான நூல் கொள்முதல், நிட்டிங், பிளிச்சிங், டையிங், வாஷிங், பிரிண்டிங், காம்பாக்டிங், எம்ப்ராய்டரி, அயர்னிங், பேக்கிங், தையல் உள்ளிட்ட சில வேலைகளை சிறு, குறு நிறுவனங்களுக்கு ஜாப்-ஆர்டர் கொடுத்து பொருட்களை திரும்ப பெறுகின்றனர்.

சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மக்களும் பாதிப்பு

சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மக்களும் பாதிப்பு

இதோடு வேலை முடிகிறதா என்றால் இல்லை? இவ்வாறு கொடுக்கப்படும் துணிகளை வாங்கி கட்டிங், சிங்கர், லேபிள் ஆகிய பணிகள் செய்து முழு உருவம் கொடுக்கின்றனர் நம் திருப்பூர் தொழிலாளர்கள். திருப்பூரில் பனியன் துணி மிகப்பிரபலம் என்றாலும், அதற்கான வேலைகளை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மற்ற மாவட்டங்களிலும் இது குறித்தான வேலையில் பல ஆயிரம் பேர் ஈடுபடுகின்றனர். இந்த நிலையில் தற்போது இவர்களும் வேலையிழக்கும் அபாயம் உள்ளது.

பின்னலாடை தொழில் வீழ்ச்சி

பின்னலாடை தொழில் வீழ்ச்சி

குறிப்பாக திருப்பூரில் உள்ள கார்பரேட் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களை நம்பி, பல ஆயிரக்கணக்கான ஜாப்-ஒர்க் நிறுவனங்கள் சுற்றுப் பகுதிகளில் இயங்கி வருகிறது. அதிலும், ஈரோடு, கோயமுத்தூர், நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களிலும் பின்னலாடை, விசைத்தறி, இன்ஜினியரிங் உட்பட பல்வேறு தொழிற்சாலைகளை நம்பி பல லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். இந்த நிலையில் பொருளாதார மந்த நிலையால் இவையாவும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் திருப்பூர் பின்னலாடை மிக வீழ்ச்சியடைந்துள்ளது.

ஜிஎஸ்டி வரியால் வலுக்கும் பிரச்சனை
 

ஜிஎஸ்டி வரியால் வலுக்கும் பிரச்சனை

முன்னதாக ஜி.எஸ்.டி. புதிய வரி நடைமுறைக்கு வராத போது சிறு, குறு நிறுவனங்கள், எந்தவித வரியும் செலுத்தாமல் தொழிலாளர்களுக்கு சம்பளம் மட்டும் கொடுத்து தொழிலை நடத்தி கொண்டிருதனர். பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள், சிறு குறு நிறுவனங்களுக்கு, ஜாப்-ஒர்க் கொடுக்கும் போது சிறு, குறு நிறுவனங்களிடையே மதிப்பீடு கேட்பார்கள். அதில், குறைவான மதிப்பீடு கொடுக்கும் சிறு, குறு நிறுவனங்களிடம் ஒப்பந்தத்தை ஏற்படுத்தி வேலைக்கான ஆர்டர் கொடுப்பது வழக்கமான ஒன்று தான். ஆனால் கட்டாயம் ஜி.எஸ்.டி கேட்பதால் பலர் ஆர்டர் எடுப்பதற்காக ஜி.எஸ்.டி கட்ட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

செலவுகள் அதிகரிப்பு

செலவுகள் அதிகரிப்பு

இந்த நிலையில் ஏற்கனவே பல்வேறு போட்டிக்கிடையே குறைந்த லாபத்தில் ஜாப் ஆர்டர் எடுத்து தொழில் செய்து வரும் சிறு குறு நிறுவனங்கள், தொழிலாளர்களுக்கு சம்பளம், கரண்ட் பில், கட்டிட வாடகை, இயந்திரங்கள் தேய்மானம் ஆகியவற்றுக்கு செலவு செய்கின்றனர். இந்த நிலையில் தற்போது ஜி.எஸ்.டியும் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே குறைந்த லாபத்தில் வேலை செய்து கொடுத்து வந்த சிறு, குறு நிறுவனங்கள் தொடர்ந்து தொழில் நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே பல ஆயிரம் சிறு குறு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், இது இன்னும் அதிகரிக்கும் நிலை நிலவி வருகிறது.

பல லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம்

பல லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம்

இதனால் இத்தொழிலினை நம்பியுள்ள ஜாப்-ஒர்க், பவர் டேபிள் அமைத்துள்ள சிறு குறு உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் திருப்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் பல லட்சம் பேர் வேலையை இழந்துள்ளதாக நாம் ஏற்கனவே கட்டுரையில் விரிவாக பார்த்தோம். இந்த நிலையில் இதே நிலை நீடித்தால் திருப்பூர் மட்டும் அல்லாது, ஈரோடு, கோயமுத்தூர், கரூர், உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சிறு குறு நிறுவனங்களும் பாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதனால் இன்னும் பல லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

No job work: most of small companies closed in Tirupur

No job work: most of small companies closed in Tirupur
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X