பிக் அப் - டிராப்.. ஸ்வக்கி நிறுவனத்தின் புதிய சேவை, மக்கள் மகிழ்ச்சி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உணவு டெலிவரி துறையில் நாட்டின் முன்னணி நிறுவனமான விளங்கும் ஸ்விக்கி கூடுதல் சேவையாக இந்திய நகரங்களில் பிக் அப் - டிராப் சேவையை அளிக்கப்போகிறது. முதற்கட்டமாகப் பெங்களூரில் இச்சேவை அறிமுகம் செய்யப்பட்டு உள்ள நிலையில் 2020ஆம் ஆண்டுக்குள் நாட்டின் 300 முக்கிய நகரங்களில் இச்சேவையை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

பெருநகரங்கள்

பெருநகரங்கள்

மக்கள் தொகை மிகவும் அதிகமாக இருக்கும் பெருநகரங்களில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வது என்பது எளிய காரியமில்லை. இப்படி இருக்கையில் நகரங்களுக்குள் பார்சல் டெலிவிரி செய்யும் சேவையை ஸ்விக்கி நிறுவனம் ஸ்விக்கி கோ என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.

இப்புதிய சேவையை இனிவரும் நாட்களில் ஸ்விக்கி உணவு டெலிவரி செயலியிலேயே தெரியும்.

 

ஸ்விக்கி கோ

ஸ்விக்கி கோ

ஸ்விக்கி கோ மூலம் வீட்டில் மறந்து வைத்த சாவி, சலவை துணி, சாப்பாட்டு டப்பா, முக்கியமான ஆவணங்கள், பர்ஸ், அல்லது முக்கியமான பொருட்களை எவ்விதமான தடையும் இன்றிப் பெர முடியும்.

Swiggy Stores

Swiggy Stores

இது ஒருபக்கம் இருக்க இந்நிறுவனத்தின் மளிகை பொருட்கள், மருந்து பொருட்கள் ஆகியவற்றை டெலவரி செய்யும் Swiggy Stores சேவையைப் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இதன் மூலம் பெங்களூரு ஸ்விக்கி வாசிகள் இனி Swiggy Stores மற்றும் ஸ்விக்கி கோ சேவை ஆகிய இரு சேவைகளையும் பெற உள்ளனர்.

300 நகரங்கள்

300 நகரங்கள்

இந்த இரு சேவைகளையும் 2020ஆம் ஆண்டின் இறுதிக்குள் நாட்டின் 300 நகரங்களுக்குள் விரிவாக்கம் செய்வதை இலக்காகக் கொண்டு உள்ளது ஸ்விக்கி நிர்வாகம்.

வர்த்தகமும், வருமானமும்

வர்த்தகமும், வருமானமும்

இவ்விரு சேவைகளின் மூலம் ஸ்விக்கி நிறுவனத்தில் டெவிவரி பார்ட்னர்களுக்குக் கூடுதல் வர்த்தகமும், வருமானமும் கிடைக்க உள்ளது. ஆனால் இவை அனைத்திற்கும் ஓரே அளவிலான வருமான அளவீடா அல்லது வருமானத்தில் மாறுபாடு இருக்குமா என்ற சந்தேகம் உள்ளது.

வேலைவாய்ப்புகள்

வேலைவாய்ப்புகள்

அனைத்திற்கும் தாண்டி ஸ்விக்கி நிறுவனத்தின் இப்புதிய சேவைகளின் மூலம் இந்தியாவில் இன்னும் பல லேவைவாய்ப்புகளை ஸ்விக்கி உருவாக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Swiggy launches pick-up and drop service 'Swiggy Go' in Bengaluru

Food ordering and delivery platform Swiggy on Wednesday said it has launched pick-up and drop service 'Swiggy Go' in Bengaluru, and plans to expand it to over 300 cities by 2020.
Story first published: Thursday, September 5, 2019, 11:08 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X