ஆர்.பி.ஐயின் இந்த அதிரடி முடிவுக்கு இது தான் காரணமா.. பிஎம்சி வாடிக்கையாளர்களின் கதி!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இனி பி.எம்.சி வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கில் இருந்து, ஒரு நாளைக்கு 1000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்ற அதிரடி அறிவிப்பை ரிசர்வ் வங்கி முன்னர் அறிவித்திருந்தது.

இது பஞ்சாப் மற்றும் மஹாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு என்று, கடந்த செவ்வாய்கிழமையன்று அதிரடியாக ஒரு குண்டையும் போட்டது ஆர்.பி.ஐ.

மேலும் இந்த தடையானது ஒரு நாள் இரு நாள் அல்ல, அடுத்த ஆறு மாதத்திற்கு என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஈபிஎப் மீதான வட்டி 8.65% ஆக உயர்வு.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!ஈபிஎப் மீதான வட்டி 8.65% ஆக உயர்வு.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!

ஆர்.பி.ஐயின் விதிமுறைகளை மீறிய பி.எம்.சி

ஆர்.பி.ஐயின் விதிமுறைகளை மீறிய பி.எம்.சி

சரி அப்படி என்ன பிரச்சனை? ஏன் ரிசர்வ் வங்கி இப்படி ஒரு அதிரடியான முடிவை எடுத்துள்ளது என்று கேட்கிறீர்களா? இதற்கு முக்கிய காரணம் வாராக்கடன் அதிகரிப்பு என்று ஒரு புறம் காரணம் என்று கூறப்பட்டாலும், ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை இவ்வங்கி மீறியதாகவும் கூறப்படுகிறது. இதனால் தான் இப்படி ஒரு அதிரடியான அறிவிப்பை வெளியிட்டதாகவும் ஆர்.பி.ஐ தரப்பில் கூறப்படுகிறது.

வாராக்கடன் அதிகரிப்பு

வாராக்கடன் அதிகரிப்பு

பி.எம்.சி வங்கியின் வாராக்கடன் அதிகரித்துள்ளது, மேலும் இவ்வங்கியின் சொத்தின் தரம் குறைந்திருப்பதும் இதற்கு ஒரு காரணம் என்றும், குறிப்பாக மொத்த வாராக்கடன் கடந்த ஆண்டில் 3.76 சதவிகிதம் அதிகரித்திருப்பதாகவும், இது முந்தைய ஆண்டில் 1.99 சதவிகிதமாக மட்டுமே இருந்ததாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில் மொத்த வாராக்கடன் மதிப்பு 2.19 சதவிகிதம் ஒரே வருடத்தில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது கடந்த 2017 - 2018ல் 148 கோடி ரூபாயாக இருந்த வாராக்கடன் மதிப்பானது, 2018 - 2019ல் 315.24 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வருவாய் இவ்வளவு தான்

வருவாய் இவ்வளவு தான்

எனினும் கடந்த 2019ம் நிதியாண்டில் இந்த வங்கியானது நிகரலாபம் 99.69 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இதே இதற்கு முந்தைய ஆண்டில் 100.90 கோடி ரூபாயாக அதிகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வங்கியின் வருவாயானது 10.89 சதவிகிதம் அதிகரித்து 1,297.98 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது முந்தைய ஆண்டில் 1,170.49 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

விரைவில் தவறுகளை சரி செய்வோம்

விரைவில் தவறுகளை சரி செய்வோம்

இதே நேரத்தில் டெபாசிட் தொகையானது, கடந்த மார்ச் 31,2019-வுடன் முடிவடைந்த நிதியாண்டில் 16.89 சதவிகிதம் அதிகரித்து, 11,617.34 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இத்தகைய நிலையிலேயே ரிசர்வ் வங்கி இப்படி ஒரு முடிவினை அறிவித்துள்ளது. பி.எம்.சி வங்கியின் எம்.டி ஜாய் தாமஸ் இது குறித்து கூறுகையில், ரிசர்வ் வங்கியின் உத்தரவில் இருந்து விரைவில் நாங்கள் மீண்டு வருவோம் என்றும், எங்கள் குறைகளை களைந்து, விரைவில் அதை சரி செய்வோம் என்றும் நாங்கள் நம்புகிறோம் என்றும் கூறியுள்ளார்.

தவறுக்கு வருந்துகிறோம்

தவறுக்கு வருந்துகிறோம்

ரிசர்வ் வங்கியின் விதிகளை மீறியதற்கு நாங்கள் வருந்துகிறோம், இதன் காரணமாக எங்கள் வாடிக்கையாளர்கள் ஆறு மாதங்களுக்கு சிரமங்களை சந்திக்க நேரிடும், இதற்கு ஒரு எம்.டியாக நான் பொறுப்பேற்கிறேன், இதன் மூலம் 6 மாதங்களுக்கு முன்பே நாங்கள் எங்களது குறைபாடுகளை சரி செய்வோம் என்றும், இதே போல அனைத்து வைப்பு நிதி வைத்திருப்பவர்களுக்கும் நாங்கள் உறுதியளிக்கிறோம் என்றும் தாமஸ் கூறியுள்ளார்.

இதுதவிர ஆர்.பி.ஐயின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பின்பு, பஞ்சாப் மற்றும் மஹாராஷ்டிராவில் நடக்கும் முக்கிய வணிக பரிவர்த்தனைகள், மும்பை மேற்கொள்ளும் என்றும் தாமஸ் கூறியுளார்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI says PMC bank's Non- performing asset increased to Rs.315 cr to FY19

RBI says PMC bank's Non- performing asset increased to Rs.315cr, but its total deposits increased 16.89% to Rs 11,617.34cr during the financial year 2019.
Story first published: Wednesday, September 25, 2019, 11:05 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X