தள்ளுபடியும் சலுகையும் அவ்வளவாக கைகொடுக்கவில்லை.. ஏதோ கொஞ்சம் விற்பனை அதிகரித்துள்ளது..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் துறையினரின் எதிர்பார்ப்பும் இந்த விழக்கால சீசனில் ஆவது விற்பனை அதிகரிக்கும் என்பதே. அதிலும் உற்பத்தி துறையில் பெருத்த அடியை வாங்கிய நிலையில் மொத்த துறையும் ஸ்தம்பித்து போயுள்ளது. இந்த நிலையில் இவர்களின் மொத்த எதிர்ப்பார்ப்பும் விழாக்கால சீசனையே நம்பியுள்ளன.

இந்த நிலையில் இவர்களின் ஒட்டுமொத்த கண்களும், இந்த விழாக் காலத்தில் விற்பனை அதிகரிக்க வேண்டும் என்பதே ஒரே நோக்கமாக கொண்டிருந்தது.

இந்த நிலையில் இந்த மொத்த எதிர்பார்ப்புக்கும் ஆப்பு வைத்தாற்போல, கடந்த ஆண்டை போல் விற்பனை இல்லாவிட்டாலும், கடந்த ஆகஸ்ட் மாதத்தினை விட செப்டம்பரில் அதிகரித்துள்ளது. அதிலும் பலமான தள்ளுபடி, சலுகை என பலவகையிலும் விற்பனையை ஊக்கப்படுத்த இந்த கார் நிறுவனங்கள் முயன்று வரும் நிலையில், இதுவரை எந்த பெரிய மாற்றமும் இருப்பதாக தெரியவில்லை.

வரி வசூலில் சொதப்பல்! கடுப்பில் நிதி அமைச்சகம்..!வரி வசூலில் சொதப்பல்! கடுப்பில் நிதி அமைச்சகம்..!

விற்பனை களைகட்டும் நேரம் இது

விற்பனை களைகட்டும் நேரம் இது

ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் நிர்வாக இயக்குனர் ஆதித்யா பூரி, கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஒர் அறிக்கையில், ஆட்டோமொபைல் துறையை பற்றி கூறுகையில், இது நன்றாக விற்பனை களைகட்டும் நேரம், ஆனால் இதுவரை அப்படி ஏதும் இருப்பதாக தெரியவில்லை. மேலும் ஆட்டோமொபைல் டீலர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படும் கடன் விகிதங்களை ஒப்பிடுகையில், வாராக்கடன்களின் அளவே அதிகம் உள்ளது. ஆட்டோமொபைல் துறையில் நீடித்து வரும் இந்த குழப்பம் இன்று நேற்றல்ல, கடந்த சில வருடங்களாக இருந்து வருகிறது என்றும் கூறியிருந்தது நினைவு கூறத்தக்கது.

மாருதி சுசூகியின் விற்பனை

மாருதி சுசூகியின் விற்பனை

குறிப்பாக கார் விற்பனையில் மிகப்பெரிய நிறுவனமான மாருதி சுசூகி நிறுவனம், கடந்த செப்டம்பர் மாதத்தில் 32.7 சதவிகிதம் விற்பனை சரிந்து, வரலாற்றில் 1,22,640 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்துள்ளது. இதுவே முந்தைய ஆண்டில் 1,62,290 யூனிட்கள் விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும் கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் சற்று அதிகரித்துள்ளது. இந்த நிலையில் விற்பனையை அதிரிக்க உற்பத்தி நிறுவனங்கள் வழங்கி வரும் தள்ளுபடிகளும் மற்றும் சலுகைகளும் சற்று விற்பனையை அதிகரிக்க உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நிச்சயம் விற்பனை அதிகரிக்கும்

நிச்சயம் விற்பனை அதிகரிக்கும்

இத்துறை சார்ந்த அதிகாரிகள் இந்த தீபாவளி சீசனில் விற்பனை அதிகரிக்கும் என்றும் எதிர்ப்பார்ப்பதாகவும், மேலும் விற்பனை அதிகரிக்க நாங்கள் பல்வேறு சலுகைகள் அளித்து வருகிறோம் என்றும், குறிப்பாக டவுன் பேமென்ட் ஆப்சனையும் அளித்து வருவதாகவும், வட்டி விகிதங்கள் குறைவு மற்றும் இ.எம்.ஐ வரி குறைப்பு என பல சலுகைகளை செய்துள்ளோம். இதனால் நாங்கள் பண்டிகை காலத்தில் விற்பனை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கிறோம் என்றும் கூறியுள்ளனர்.

ஹீரோ மோட்டோ கார்ப் என்ன சொல்கிறது!

ஹீரோ மோட்டோ கார்ப் என்ன சொல்கிறது!

குறிப்பாக முதல் தடவை கார் வாங்குபவர்களின் எண்ணிக்கையானது அதிகரிக்கும் என்றும், இதற்காக பல சலுகைகளை நாங்கள் அளித்து வருகிறோம் என்றும், குறிப்பாக டவுன் பேமென்ட் ஆப்சனை வழங்கி வருகிறோம் என்றும், ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் தலைமை விற்பனை அதிகாரி சன்சய் பான் கூறியுள்ளார். மேலும் இதனால் நாங்கள் விற்பனையை அதிகரிக்க முடியும் என்றும், அதிலும் இந்த தீபாவளி சீசனில் விற்பனை அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார்.

விற்பனை நிச்சயம் அதிகரிக்கும்

விற்பனை நிச்சயம் அதிகரிக்கும்

கடுமையான மந்த நிலை மற்றும் நொறுங்கிய விற்பனை எண்களின் பின்னணியில், மாத தரவுகள் மிக முக்கியமான ஒன்றாகும். இதன்படி கடந்த ஆகஸ்ட் மாத விற்பனையுடன் ஒப்பிடும்போது 15.25% விற்பனை அதிகரித்துள்ளது. இது வாங்குபவர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் பெரும் தள்ளுபடியை வழங்குவதின் அடிப்படையில் மாருதி சந்தையை வழி நடத்தியது. பணப்புழக்கத்தை மேம்படுத்துவதோடு, வாகனத்திற்காக உரிமையாளர் செலவைத் குறைப்பதற்கான முயற்சிகளையும் நாங்கள் மேற்கண்டுள்ளோம் என்றும், இது நிச்சயம் விற்பனையை அதிகரிக்க உதவும் என்றும் மாருதி சுசூகியின் இயக்குனர் ஷாஷாங் ஸ்ரீ வாஸ்தவா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மற்ற நிறுவனங்கள் எப்படி?

மற்ற நிறுவனங்கள் எப்படி?

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், கடந்த ஆண்டு செப்டம்பர் 2018ல் 64,598 வாகனங்கள் விற்பனையும், இதே செப்டம்பர் 2019ல் 32,376 வாகனங்கள் விற்பனையும், இதே ஆகஸ்ட் 2019ல் வெறும் 7,316 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்திருந்தது கவனிக்கதக்கது. இது கிட்டதட்ட ஆகஸ்ட் மாதத்தோடு ஒப்பிடும்போது 342% அதிகமாகும். இதே ஹூண்டாய் நிறுவனம் ஆகஸ்ட் 2019ல் 38,205 வாகனங்கள் விற்பனை செய்துள்ள நிலையில், செப்டம்பர் 2019ல் 57,705 வாகனங்கள் விற்பனை செய்துள்ளன என்றும், இது சுமார் 51% அதிகம் என்றும் கூறப்படுகிறது. இதுவே கடந்த ஆண்டு செப்டம்பர் 2018ல் 62,757 வாகனங்கள் விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பரில் விற்பனை அதிகரித்துள்ளது

செப்டம்பரில் விற்பனை அதிகரித்துள்ளது

இதே ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கடந்த ஆகஸ்டில் 5,43,406 வாகனங்களுக்கு, இதே செப்டம்பரில் 6,12,204 வாகனங்களும் விற்பனை செய்துள்ளன. இதே செப்டம்பர் 2018ல் 7,69,138 வாகனங்கள் விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. மாருதி சுசூகியை பொறுத்தவரை கடந்த ஆகஸ்டில் 1,06,413 வாகனங்களையும், இதே செப்டம்பரில் 1,22,640 வாகனங்களும் விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது முந்தைய செப்டம்பர் 2018ல் 1,62,290 வாகனங்களை விற்ப்னை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிறுவனங்கள் சரிவில் இருந்து மீளவில்லை

இந்த நிறுவனங்கள் சரிவில் இருந்து மீளவில்லை

இதே டொயோட்டோ நிறுவனம், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 11,544 வாகனங்கள் விற்பனை செய்திருந்த நிலையில், செப்டம்பரில் 10,911 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதே கடந்த ஆண்டு செப்டம்பரில் 2018ல் 13,078 வாகனங்கள் விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதே எம்&எம் ஆகஸ்டில் 48,321 வாகனங்களும், இதே செப்டம்பரில் 43,343 வாகனங்களும் விற்பனை செய்துள்ளன. இது செப்டம்பர் 2018ல் 55,022 வாகனங்களும் விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Automobile crisis: Car sales continuously going to down in September despite heavy discounts and offers

Automobile crisis continuously going to down in September despite heavy discounts and offers, but small changes in is there.
Story first published: Wednesday, October 2, 2019, 15:23 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X