இந்தியாவில் நாளுக்கு நாள் இணைய வழியில் செய்யப்படும் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது கிரிப்டோகரன்சி பெயரில் செய்யப்படும் மோசடிகளும் அதிகரித்துள்ளது.
இப்படி உத்தரப் பிரதேசத்தின் பரேலி பகுதியில் 2 லட்சம் ரூபாய் ஆன்லைன் மோசடி வழக்கில் விசாரணை துவங்கிய நிலையில், தோண்டத் தோண்ட வியப்பு அளிக்கும் வகையில் இது 3000 கோடி ரூபாய் மோசடியாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.
எத்தனை நாள் வேண்டுமானாலும் விடுமுறை எடுத்துக்கலாம்.. திக்குமுக்காட வைக்கும் ஐடி நிறுவனம்!

2 லட்சம் ரூபாய் மோசடி
பரேலியில் சட்ட அமலாக்கத் துறை வேலைவாய்ப்புப் பெயரில் 2 லட்சம் ரூபாய் மோசடி செய்ததைக் கண்காணித்து வந்த போது, இந்த மோசடியில் mail trail பணிகள் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

ரூ. 3,000 கோடி மோசடி
இந்த மோசடி வழியாகச் சுமார் ரூ. 3,000 கோடி அளவிலான தொகையை ஏமாற்றிப் பினான்ஸ், ஸ்மார்ட் கான்ட், ஓகே காயின் போன்ற கிரிப்டோகரன்சி வாலெட்டுகளைப் பயன்படுத்திச் சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்குப் பணம் கொண்டு செல்லப்பட்டு உள்ளது.

உத்தரப்பிரதேசம்
இந்த 3000 கோடி ரூபாய் மோசடி தொடர்பாக உத்தரப்பிரதேசத்தின் சைபர் கிரைம் துறையினர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒருவரை இணைய மோசடி வழக்கில் பரேலியில் கைது செய்தனர். மன்சுருல் இஸ்லாம் பெயர் கொண்ட இவர் பரேலியைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் அக்டோபர் 2021 இல் 2.1 லட்சம் ரூபாய் தொகையை மோசடி செய்தார்.

100க்கு 200
குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் ஒரு இணைப்பை கிளிக் செய்து, 100 ரூபாய்க்குத் தன்னை வேலைக்குப் பதிவு செய்யும்படி கூறினார். பின்னர் அந்தப் பெண்ணுக்கு ரூ.100 முதலீடு செய்ததற்கு ஈடாக ரூ.200 வழங்கப்பட்டது. இந்தப் பரிமாற்றம் டிஜிட்டல் இ-வாலட் மூலம் உருவாக்கப்பட்டு அதன் மூலம் நடத்தப்பட்டு உள்ளது.

2 லட்சம் அபேஸ்
சில நாட்களாக, அந்தப் பெண் தொடர்ந்து பணத்தை முதலீடு செய்து வந்துள்ளார், இறுதியில் ரூ.2 லட்சத்துக்கும் அதிகமாகத் தொகை ஏமாற்றப்பட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என உ.பி சைபர் கிரைம் காவல் கண்காணிப்பாளர் (SP) திரிவேணி சிங் கூறினார்.

பல்க் எஸ்எம்எஸ்
இந்த மோசடி செய்பவர்கள் ஒரு நாளில் இந்தியா முழுவதும் லட்சக்கணக்கானோருக்கு பல்க் எஸ்எம்எஸ்/வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பியதாகவும், மேலும் பலர் இந்த மோசடிக்கு இரையானதாகவும் சிங் கூறினார்.

லாக்டவுன் டார்கெட்
இந்தியாவில் கொரோனா தொற்று கட்டுப்படுத்த லாக்டவுன் அறிவிக்கப்பட்ட போது மக்கள் வீட்டில் இருந்து வேலை தேடும் போது அல்லது தங்கள் வேலையை இழந்துவிட்டு புதியதைத் தேடும் போது இந்த இணைப்பு வாயிலாக மோசடி தொடங்கியது.

யுபிஐ ஐடி
இப்படி இணைப்பு வாயிலாக மோசடி செய்து சேகரித்த பணத்தை மூன்று வெவ்வேறு யுபிஐ ஐடிகளுக்கு மாற்றப்பட்டுப் பினான்ஸ், ஸ்மார்ட் கான்ட், ஓகே காயின், பிட்பை போன்றவற்றில் முதலீடு செய்து கிரிப்டோகரன்சியாக மாற்றப்பட்டது வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு உள்ளது.

பெரும் தலைகள்
கூடுதலாக, பல்வேறு அறக்கட்டளைகள், நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இந்த 3 முக்கிய யூபிஐ கணக்குகளுக்குப் பணத்தை அனுப்பியுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால் பணச் சலவையாகவும் இருக்கக் கூடும்.

கிரிப்டோகரன்சி வேலெட்
இதுவரை நடந்த விசாரணையில் சுமார் 256 கிரிப்டோகரன்சி வேலெட்களைப் பயன்படுத்தி ரூ. 1,413 கோடியை பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதில் இந்தியாவில் ஆறு வேலெட்கள் மட்டுமே உள்ளது மற்ற வேலெட்கள் சீனா, மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸில் உருவாக்கப்பட்டன.

46 நிறுவனங்கள் தொடர்பு
இதுதவிர, சுமார் 46 நிறுவனங்கள், அறக்கட்டளைகள் மற்றும் நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் மூலம் ரூ.1,500 கோடிக்கு மேல் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் 12 போலி நிறுவனங்கள் அடக்கம்.

பணம் திரும்பக் கிடைக்குமா..?!
ஹைப்ரிட் ஃபைனான்ஸ் (ஹைஃபை) பிளாக்செயினின் தலைமை பிளாக்செயின் தொழில்நுட்ப வல்லனுர் ரோஹாஸ் நாக்பால் கூறுகையில், எக்ஸ்சேஞ்ச் கட்டுப்பாட்டில் இருந்து பணம் வெளியேறும் தருணத்தில், அதைக் கண்காணிப்பது கடினம் எனத் தெரிவித்துள்ளார். இதனால் பணத்தை இழந்தவர்களுக்குப் பணம் கிடைப்பது என்பது போராட்டம் தான்.