மாத சம்பளக்காரர்கள் கண்ணீர்.. 34 லட்சம் பேர் வேலையை இழந்தனர்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா முதல் அலையில் இருந்து முழுவதுமாக வெளியேறுவதற்குள் 2வது அலை இந்தியாவைத் தாக்கியது. இதனால் தொற்று எண்ணிக்கையும், கொரோனா மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கையும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது.

 

இந்தச் சூழ்நிலையில் ஏற்கனவே மோசமாக இருந்த சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் 2வது அலையில் தொற்று அளவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் விதிக்கப்பட்ட லாக்டவுன் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மூலம் தற்போது MSME நிறுவனங்கள் தாக்குப் பிடிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.

இதன் எதிரொலியாக ஏப்ரல் மாதம் மட்டும் சுமார் 73.5 லட்சம் பேர் தங்களது வேலைவாய்ப்பை இழந்துள்ளதாக CMIE அமைப்பு தெரிவித்துள்ளது. இதோடு நாட்டின் வேலைவாய்ப்பின்மை அளவீடு 6.5 சதவீதத்தில் இருந்து 7.97 சதவீதமாக உயர்ந்துள்ளது.

 கொரோனா முதல் அலை

கொரோனா முதல் அலை

கொரோனா முதல் அலையின் பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டு வருவதற்குள் 2வது அலையின் பாதிப்பு மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ள இந்தச் சூழ்நிலையில், MSME பிரிவில் இருக்கும் நிறுவனங்கள் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. அதிலும் மிகக் குறிப்பாக 2ஆம், 3ஆம் தர நகரங்களில் இருக்கும் சிறு குறு நிறுவனங்கள் மிகவும் மோசமான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.

 40.07 கோடி வேலைவாய்ப்புகள்

40.07 கோடி வேலைவாய்ப்புகள்

டிசம்பர் 2020ல் இந்தியாவில் சுமார் வகைப்படுத்தப்பட்ட மற்றும் வகைப்படுத்தப்படாத துறையில் 38.87 கோடி பேர் பணியில் இருந்தனர், இது ஜனவரியில் 40.07 கோடியாகவும், பிப்ரவரியில் 39.821 கோடியாகவும், மார்ச் மாதத்தில் 39.814 கோடியாகவும், ஏப்ரல் மாதத்தில் 39.079 கோடியாகக் குறைந்துள்ளது.

 மோசமான ஏப்ரல் மாதம்
 

மோசமான ஏப்ரல் மாதம்

இதேபோல் ஏப்ரல் மாதத்தில் மட்டும், மாத சம்பளத்தில் இருக்கும் 34 லட்சம் பேர் தங்களது வேலையை இழந்துள்ளனர். இதில் கிராமம் மற்றும் ஊரகப் பகுதிகளில் 28.4 லட்சம் பேரும், நகரங்களில் 5.6 லட்சம் பேரும் தங்களது வேலையை இழந்துள்ளனர்.

 34 லட்சம் மாத சம்பளக்காரர்கள்

34 லட்சம் மாத சம்பளக்காரர்கள்

ஆக, ஏப்ரல் மாதத்தில் வேலையை இழந்த 73.5 லட்சம் பேரில், சுமார் 34 லட்சம் மாத சம்பளக்காரர்கள் தங்களது வேலைவாய்ப்பை இழந்து தவித்து வருகின்றனர். மீதமுள்ள 39.5 லட்சம் பேர் வகைப்படுத்தாத துறையில் இருக்கும் ஊழியர்கள்.

 லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்வு

லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்வு

முதல் கொரோனா அலையில் வகைப்படுத்தாத துறையில் அதிகளவிலானோர் வேலைவாய்ப்பை இழந்தாலும், லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்வு அளிக்கப்பட்ட உள்ள இப்பிரிவில் வேலைவாய்ப்பு எண்ணிக்கை அதிகரித்தது.

 மாத சம்பளக்காரர்கள்

மாத சம்பளக்காரர்கள்

ஆனால் தற்போது மாத சம்பளக்காரர்கள், அதாவது வருமான வரி செலுத்தும் நிரந்தர ஊழியர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளது நாட்டின் வர்த்தகச் சந்தைக்கும் வேலைவாய்ப்பு சந்தைக்கும் மிகப்பெரிய ஆபத்தாக விளங்கும் என எதிர்பார்க்கப்ப ஆனால் தற்போது மாத சம்பளக்காரர்கள், அதாவது வருமான வரி செலுத்தும் நிரந்தர ஊழியர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளது நாட்டின் வர்த்தகச் சந்தைக்கும் வேலைவாய்ப்பு சந்தைக்கும் மிகப்பெரிய ஆபத்தாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.டுகிறது.

 MSME பிரிவு

MSME பிரிவு

வேலைவாய்ப்பு ஒரு பக்கம் சரிந்து வரும் நிலையில், நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் MSME பிரிவில் அதிகளவிலான நிறுவனங்கள் வர்த்தகப் பாதிப்பு மற்றும் கடன் நெருக்கடி ஆகியவற்றின் காரணமாக மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது. இதனால் இவர்கள் திரும்பி வராத நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

34 lakh salaried Indians lost their jobs in April: Covid-19 Second wave in India

34 lakh salaried Indians lost their jobs in April: Covid-19 Second wave in India
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X