சிக்கலில் இந்தஸ்இந்த் பேங்க்.. 14.76% பங்கு வீழ்ச்சி.. என்ன காரணம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் தனியார் துறையை சேர்ந்த வங்கியான இந்தஸ்இந்த் வங்கி தற்போது கடினமாக பிரச்சனையை எதிர்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

 

ஏற்கனவே பல பிரச்சனைகளை சந்தித்து வரும் இந்த வங்கி, தற்போது கொரோனாவின் தாக்கத்தினால் மேலும் பிரச்சனையை சந்தித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதிலும் யெஸ் வங்கியின் நெருக்கடியை தொடர்ந்து, மற்றொரு தனியார் வங்கி இப்படி ஒரு நெருக்கடியை சந்தித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

 அது என்ன ELSS மியூச்சுவல் ஃபண்ட்..? வருமான வரிச் சலுகை வேறு உண்டா..? அது என்ன ELSS மியூச்சுவல் ஃபண்ட்..? வருமான வரிச் சலுகை வேறு உண்டா..?

பங்கு விலை வீழ்ச்சி

பங்கு விலை வீழ்ச்சி

ஏனெனில் யெஸ் வங்கி பிரச்சனையினால், இந்தஸ்இந்த் வங்கியில் வைப்புத் தொகையின் அளவு 10% அளவு குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்த நிலையில் இந்த வங்கி பங்கின் விலை தற்போது வரையில் 14.76% வீழ்ச்சி கண்டு, 350.80 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.

குறைந்து வரும் வைப்பு தொகை

குறைந்து வரும் வைப்பு தொகை

யெஸ் வங்கி நெருக்கடியினை கருத்தில் கொண்டு மக்கள் தங்களது வைப்பு நிதிகளை தனியார் வங்கிகளில் வைக்க கொஞ்சம் தயங்குகிறார்கள் என்பதே உண்மை. இந்தியாவின் தனியார் துறை வங்கிகள் இன்னும் கடினமான சோதனையை எதிர்கொண்டுள்ளன. மேலும் கொரோனா வைரஸின் தாக்கம் அவர்களின் வருவாயை மேலும் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.

வாராக்கடன் அதிகரிக்கும்
 

வாராக்கடன் அதிகரிக்கும்

அதிலும் தற்போதைய பூட்டுதல்கள் கடன் அட்டைகள், தனி நபர் கடன், ரியல் எஸ்டேட், சொத்து மற்றும் வாகன நிதியுதவி, வணிகத்திற்கு எதிரான நிதியுதவி வாகனக் கடன் போன்றவை பெரும் அழுத்தத்தினை காணலாம். இதனால் வாராக்கடன் அதிகரிக்க உதவும் என்றும் கூறப்படுகிறது. இதனால் அவ்வங்கியின் வருவாய் குறையும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் 2020 நிதியாண்டில் 23% அதன் வருவாய் குறையும் என்றும், இதே 2021ம் நிதியாண்டில் 65% குறையும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

கடன் செலவுகள் அதிகரிக்கும்

கடன் செலவுகள் அதிகரிக்கும்

இதற்கிடையே நடப்பு காலாண்டில் கடன் செலவுகள் 2 - 2.1% ஆக அதிகரிக்கும் என்று நிர்வாகம் சுட்டிக் காட்டியது. இது டிசம்பர் காலாண்டில் 0.6% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு இதுவரை இந்தஸ்இந்த் வங்கி இதுவரையில் அதன் சந்தை மதிப்பில் 76% இழந்துள்ளது. இது சொத்து தரத்தினால் மட்டும் அல்ல, டெபாசிட் உரிமையைப் பற்றிய வளர்ந்து வரும் அச்சங்கள் காரணமாகும்.

 மற்ற வங்கி பங்குகள்

மற்ற வங்கி பங்குகள்

இதே ஹெச் டி எஃப்சி பங்குகள் இதே காலத்தில் 34% வீழ்ச்சி கண்டுள்ளது. இதே ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்ஸிஸ் வங்கி போன்ற பிற வங்கிகளும் 50% இழந்துள்ளனர். தனியார் வங்கிகளின் இந்த ஸ்திரத்தன்மை கொரோனாவினால் மட்டும் அல்ல. ரிசர்வ் வங்கி தற்போது போராடி வரும் நிதி ஸ்திரத்தன்மையின் ஆழமான பிரச்சனையின் அறிகுறியாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

After yes bank crisis, IndusInd Bank is the worst hit right now

IndusInd Bank is the worst hit today. The bank’s stock has slumped over 14.76% so far Tuesday after it revealed, in an investor call, that its lost 10% of its deposits since yes bank crisis earlier this year.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X