அதிர வைக்கும் ஏடிஎம் திருட்டுகள்.. எப்படி எல்லாம் பணத்தை திருடுறாங்கய்யா.. எச்சரிக்கையா இருங்க.!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொல்கத்தா : ஜாதவ்பூர் பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர், கடந்த மூன்று நாட்களில் தங்களது வங்கிக் கணக்குகளில் இருந்து பெரும் தொகையை இழந்துள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

 

தொழில்நுட்பம் வளர்ந்து வரும் அதே காலகட்டத்தில், இது போன்ற மோசடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

நாளூக்கு நாள் அதிகரித்து வரும் இதுபோன்ற மோசடிகளில் இருந்து, மக்கள் எப்படித் தான் தங்களை பாதுகாத்து கொள்வது, ஏற்கனவே வங்கிகள் மேல் நம்பிக்கையை இழந்து வரும் மக்கள், இதுபோன்ற மோசடிகளால் மேலும் தங்களது நம்பிக்கையை இழந்து வருகின்றனர்.

ஏடிஎம் மூலம் திருட்டு

ஏடிஎம் மூலம் திருட்டு

கொல்கத்தாவின் தெற்குபகுதியில் உள்ள ஜாதவ்பூரில் சுகந்தா சேதுவைச் சுற்றியுள்ள தனியார் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் ஏடிஎம்-களை பயன்படுத்துவபவர்களிடம் இருந்து பெரும்பாலான புகார்கள் வந்தன என்றும் போலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர். மேலும் டெல்லி, குர்கான் மற்றும் நொய்டாவில் இந்த பிரச்சனையின் பின்னணியில் உள்ளவர்கள் ஏடிஎம்-களை பயன்படுத்தியிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிப்பதாகவும் கூறப்படுகிறது.

போலி ஏடிஎம் மூலம் திருட்டு

போலி ஏடிஎம் மூலம் திருட்டு

இதில் வேடிக்கை என்னவெனில் டெபிட் கார்டுகள் உரிமையாளர்கள் வசம் இருந்தாலும், இப்படி ஒரு பிரச்சனை நிகழ்ந்துள்ளது என்றும் மூத்த போலீஸ் அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் இவ்வாறு மோசடி நடந்தது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், பல லட்சம் ரூபாய் மோசடி செய்து பெறப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த மோசடியால் ஏடிஎம் பயனாளர்கள் மத்தியில் ஒரு பயம் நிலவி வருகிறது. இதனால் ஏடிஎம் உபயோகம் குறையலாம் என்றும் கருதப்படுகிறது.

தொடர்ச்சியான புகார்கள்
 

தொடர்ச்சியான புகார்கள்

மேலும் இது குறித்து போலீசார் கூறுகையில், இது குறித்து தொடர்ச்சியாக நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். மோசடி செய்தவர்கள் தாங்கள் முன்பு சேகரித்த பழைய தரவுகளை பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. கடந்த சனிக்கிழமையன்று ஜாதவ்பூர் காவல் நிலையத்தில் 9 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்னும் சில புகார்கள் ஞாயிற்றுகிழமையன்று பெறப்பட்டன. இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமையோடு சேர்த்து மொத்தம் 32 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சம்பள கணக்குகளை குறிவைக்கும் மோசடியாளர்கள்

சம்பள கணக்குகளை குறிவைக்கும் மோசடியாளர்கள்

இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் இவ்வாறு மோசடி செய்யப்பட்ட கணக்குகளில் பெரும்பாலும் சம்பள கணக்குகள் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இது குறித்து வங்கி ஊழியர் ஒருவர் கூறுகையில், தனது வங்கிக் கணக்கிலிருந்து சனிக்கிழமையன்று மூன்று முறை 10,000 ரூபாய் பணம் எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார். அதேசமயம் தனது வங்கி டெபிட்கார்டு தனது கையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பல ஆயிரம் மோசடி

பல ஆயிரம் மோசடி

இதே பரூன் ஹால்டர் தங்கள் குடும்பத்தில் யாரும் எந்தவிதமான பணப் பரிவர்த்தனையும் செய்யவில்லை. எனினும் எனது மனைவியின் வங்கிக் கணக்கில் இருந்து பல ஆயிரம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் பருன் நாங்கள் இதுவரை நாங்கள் எங்கள் வங்கிக் கணக்குகள் அல்லது டெபிட் கார்டுகள் மூலம் எந்த விவரங்களையும் யாருடனும் பகிர்ந்து கொள்ள வில்லை. இருப்பினும் நாங்கள் எங்கள் பணத்தை இழந்துவிட்டோம் என்றும் பரூன் தெரிவித்துள்ளார்.

ஸ்கிம்மிங் மூலம் திருட்டு

ஸ்கிம்மிங் மூலம் திருட்டு

இது குறித்து வாடிக்கையாளர்கள் அவரவர் வங்கி கணக்குகள் உள்ள வங்கிகளிலும் புகார் அளித்துள்ளதாக போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர். கடந்த மாதம் மேற்கு வங்கத்தில், இரண்டு பங்காளதேஷை சேர்ந்தவர்கள் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான வங்கி கணக்கு வைத்திருப்பவர்களிடமிருந்து ஏடிஎம் ஸ்கிம்மிங் மூலம் சில கோடி ரூபாய் திருடியதாக கைது செய்யப்பட்டனர்.

தகவல்களை திருடும் கும்பல்

தகவல்களை திருடும் கும்பல்

இந்த நிலையில் கடந்த நவம்பர் 15 முதல் 17 வரையில் சுமார் 1.19 கோடி ரூபாய் ஏமாற்றப்பட்டதாக திரிபுராவில் முதன் எச்சரிக்கை ஒலி அடிக்கப்பட்டது. ஏற்கனவே இந்த ஏடிஎம் மோசடி தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் இரண்டு ருமேனியர்களை நகர போலீசார் கைது செய்தனர் என்றும் கூறப்பட்டது. இந்த ருமேனியர்கள் ரகசிய கேமராக்கள் மற்றும் ஸ்கிம்மர்களை பயன்படுத்தி ஏடிஎம்களில் இருந்து தரவை திருடும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

போலி கார்டு மூலம் திருட்டு

போலி கார்டு மூலம் திருட்டு

இவ்வாறு திருடப்பட்ட ரகசியங்களை வைத்து, இந்த திருட்டு கும்பல் ஏடிஎம் கார்டுகளின் குளோன்களை தயாரித்து வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து மோசடியாக பணத்தை எடுக்க பயன்படுத்துவார்கள் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Around 30 peoples complaints that a withdrawn their bank accounts by fraudsters

Over 30 peoples complaints that a withdrawn their bank accounts by fraudsters. And maximum peoples are salary account holders in the list.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X