டாடா குழுமத்தை ஆட்டிப்படைத்து வரும் மந்தநிலை.. டாடா மோட்டார்ஸில் VRS.. டாடா ஸ்டீலில் பணி நீக்கம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : கடந்த ஒரு வருடமாகவே ஆட்டோமொபைல் துறையை ஆட்டிப்படைத்து வரும் மந்த நிலையால், பல ஆயிரம் ஊழியர்கள் வேலையை இழந்துள்ளனர்.

எனினும் ஆட்டோமொபைல் துறையில் இன்னும் பிரச்சனை முடிந்தவாறாக இல்லை. இதன் எதிரொலிதான் இந்த வி.ஆர்.எஸ் திட்டம். நாட்டின் முன்னணி வாகன உற்பத்தியாளரான டாடா குழுமத்தினை சேர்ந்த டாடா மோட்டார்ஸ், தன்னார்வ ஓய்வூதிய திட்டத்தினை செயல்படுத்தி வருவதாக இதை பற்றி அறிந்தவர்கள் கூறியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

டாடா குழுமத்தை ஆட்டிப்படைத்து வரும் மந்தநிலை.. டாடா மோட்டார்ஸில் VRS.. டாடா ஸ்டீலில் பணி நீக்கம்..!

நாட்டின் மிகப்பெரிய வாகன உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ், உள்நாட்டு சந்தையில் நீண்டகாலமாக நீடித்து வரும் மந்த நிலையின் தாக்கத்தால் இப்படி ஒரு திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆண்டு டாடா மோட்டார்ஸின் பணியாளர் செலவுகள், இதற்கு முந்தைய காலங்களை விட மிகவும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

டாடாவின் இந்த நடவடிக்கை ஹூரோ மோட்டோகார்ப் லிமிடெட் மற்றும் டொயேட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் பிரைவேட் லிமிடெட் போன்ற பிற வாகன உற்பத்தியாளர்களையும் பின் தொடரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிதியாண்டில் இது போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்த வாய்ப்புகள் உள்ளன என்றும் கருதப்படுகின்றன.

டாடாவின் துயரங்கள் கடுமையான உமிழ்வுத் தரங்கள் பற்றிய விதிகள் ஏப்ரல் முதல் நடைமுறைக்கு கொண்டு வரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்துறையில் மிகப்பெரிய பணியாளர்களில் ஒருவரையும் கொண்டுள்ளன.

அந்தோ பரிதாபத்தில் ஸ்டீல் துறை.. டாடா ஸ்டீல் மீண்டும் 1000 பேரை பணி நீக்கம் செய்கிறது..!அந்தோ பரிதாபத்தில் ஸ்டீல் துறை.. டாடா ஸ்டீல் மீண்டும் 1000 பேரை பணி நீக்கம் செய்கிறது..!

இந்த நிலையில் செப்டம்பர் காலாண்டில் நிகர விற்பனையின் சதவிகிதமாக பணியாளர் செலவு முந்தைய ஆண்டின் 5.9 சதவிகிதமாக இருந்தது. எனினும் நடப்பு ஆண்டில் இது 10.7 சதவிகிதமாக உயர்ந்தது. டாடா மோட்டார்ஸின் வாகன விற்பனை முந்தைய ஆண்டை விட 44 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது. இதனால் இதன் நிகர இழப்பு 1,281.97 கோடி ரூபாயாக சரிந்தது. இதுவே முந்தைய ஆண்டில் 109.14 கோடி ரூபாயாக லாபம் கண்டது குறிப்பிடத்தக்கது.

இதே நாட்டில் மிகப்பெரிய பயணிகள் வாகன உற்பத்தியாளரான மாருதி சுசூகி இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிகர விற்பனையின் சதவிகிதமாக பணியாளர் செலவுகள் 4.9 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதே முந்தைய ஆண்டு 3.5 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் கடந்த சில ஆண்டுகளாக தனது பணியாளர் செலவைக் குறைக்க செலவைக் குறைக்க முயற்சித்து வருகிறது. மேலும் 2017ம் ஆண்டில் இதேபோன்ற சலுகையை அளித்தது டாடா மோட்டார்ஸ். இதன் மூலம் நிரந்தர ஊழியர்களில் பெரும்பாலோர் இந்த தொகுப்பிலிருந்து விலகி இருந்தனர்.

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் காலாண்டில் கனரக மற்றும் நடுத்தர வர்த்தக வாகனங்களின் விற்பனையில் டாடா மோட்டார்ஸ் 59 சதவிகிதம் சரிந்தது. அதே நேரத்தில் மொத்த வாகன விற்பனையும் 41.2 சதவிகிதம் குறைந்துள்ளது. இந்த நிலையில் பி.எஸ் 6 விதிமுறைகளை அறிமுகப்படுத்திய பின்னர், கனரக மற்றும் நடுத்தர வணிக வாகனங்களின் தேவை மேலும் சுருங்கக்கூடும். இது அடுத்த நிதியாண்டில் அதிக சவால்களை ஏற்படுத்தும் என்றும் கருதப்படுகிறது. இது வாகனங்களின் விலையை விலை உயர்ந்ததாக மாற்றும் என்றும் கருதப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Automobile sector crisis: Tata motors to offer VRS to 1600 employees from across all locations

Tata motors to offer VRS to 1600 employees from across all locations. Tata Motors employee cost-cutting plans are more aggressive than the previous times.
Story first published: Thursday, November 28, 2019, 12:56 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X