வருத்தத்தில் வங்கிகள்.. மோசமான கடன்கள் அதிகரிக்கலாம்.. இஎம்ஐ தள்ளி வைப்பு தான் காரணமா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்கத்தினால், லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் வேலையின்றி, அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வீட்டில் முடங்கிக் கிடக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது.

 

இதன் காரணமாக மக்கள் மத்தியில் வங்கியில் செலுத்த வேண்டிய இஎம்ஐகளுக்கு கால அவகாசம் வேண்டும் என கோரிக்கையாக வைக்கப்பட்டது. இதன் காரணமாக ரிசர்வ் வங்கியும் வங்கிகளுக்கு 3 மாத இஎம்ஐ தள்ளி வைக்க அனுமதி கொடுத்தது.

இதண் பின்னர் இரண்டாவது முறையாக சில தினங்களுக்கு முன்பு இஎம்ஐ மேலும் 3 மாதங்களுக்கு தள்ளி வைக்க அனுமதி கொடுத்துள்ளது.

வாரக்கடன் அளவு அதிகரிக்கும்

வாரக்கடன் அளவு அதிகரிக்கும்

இதன் காரணமாக வங்கிகளின் வாரக்கடன் மதிப்பும் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதிலும் சில வங்கிகளில் இஎம்ஐ தள்ளி வைப்பால் 25 - 30 சதவீதம் கடன் இந்த ஆப்சனை தேர்தெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சிறு நிதி நிறுவனங்களின் வாராக்கடன் அளவும் அதிகரிக்கும் என்றும், இதனால் வங்கிகள் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மோசமான நிதி அழுத்தத்திற்கு தள்ளப்படலாம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இஎம்ஐ தள்ளி வைப்பு

இஎம்ஐ தள்ளி வைப்பு

ஒரு புறம் இந்த நடவடிக்கையால் நிறுவனங்கள் அழுத்தத்தில் இருந்து விடுபட்டாலும், நடப்பு நிதியாண்டில் இரண்டாம் பாதியில் வாராக்கடன் அளவு கணிசமான அளவு அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக இஎம்ஐ தள்ளி வைப்பு காரணமாக ஆட்டோமொபைல் பைனான்ஸ், எம்எஸ்எம்இக்கள், கார்ப்பரேட்டுகள் மற்றும் சில்லறை கடன்கள் என பல கடன்களும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஐசிஐசிஐ வங்கியில் மோசமான கடன்
 

ஐசிஐசிஐ வங்கியில் மோசமான கடன்

இதனால் எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, கோட்டக் மகேந்திரா வங்கி, ஆக்ஸிஸ் வங்கி போன்றவை பெரிய அழுத்தினை கண்டுள்ளன. இந்த இஎம்ஐ தள்ளி வைப்பின் கீழ் 30 சதவீத கடன்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஐசிஐசிஐ வங்கியில், சில்லறைக் கடன்களில் அதிகளவில் இஎம்ஐ தள்ளி வைப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக கிராமப்புற வர்த்தக வாகனம் மற்றும் இருசக்கர வாகன வாடிக்கையாளர்கள் இந்த அவகாசத்தினை பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கோட்டக் மகேந்திரா வங்கி

கோட்டக் மகேந்திரா வங்கி

இதே கோட்டக் மகேந்திராவைப் பொறுத்த வரையில், சில்லறை பிரிவில் உள்ள கடன் தள்ளி வைப்பானது, மற்ற கடன்களை விட அதிகம் என்றும் கூறப்படுகிறது. ஆக செப்டம்பர் வரையில் இந்த கடன்களில் பிரச்சனை இல்லை என்பதால், அடுத்த மூன்று மாதங்கள் வரை வங்கிகளுக்கு சிக்கல் இல்லை. ஆனால் செப்டம்பர் மாதத்திற்கு பிறகு வாராக்கடன்களின் விகிதம் தற்போதைய மட்டத்தில் இருந்து சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் வரை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வரவேற்கதக்க நடவடிக்கை

வரவேற்கதக்க நடவடிக்கை

இது குறித்து எஸ்பிஐ வங்கியின் தலைவர் ரஜ்னிஷ் குமார், ஆர்பிஐ இந்த நடவடிக்கையை வரவேற்பதாக கூறியுள்ளார். ஆர்பிஐ இந்த இஎம்ஐ நடவடிக்கையானது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட ஒரு முடிவு தான். இது மக்களுக்கு உதவிகரமானதாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். விமான போக்குவரத்து, சுற்றுலா, விருந்தோம்பல், போக்குவரத்து மற்றும் ஸ்டார்டப்கள் போன்ற துறைகள் பணி நீக்கங்களையும் கண்டிருப்பதால், அதிகமான மக்கள் தடைக்கால வசதியைத் தேர்வு செய்வார்கள் என்றும் வங்கிகள் எதிர்பார்க்கின்றன.

பெரும் சவால் தான்

பெரும் சவால் தான்

இதனால் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை வங்கிகள் பெரும் சவாலை எதிர்கொள்ளலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதே சில தனியார் வங்கிகளும் கூட சில சவால்களை சந்திப்பதாக கூறப்படுகிறது. இதனால் வங்கித் துறையானது மேற்கொண்டு அழுத்ததினைக் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Banks are worried, due to bad loans may increase in second half of FY21

According to the data provided by different banks, nearly 25 – 30% of their outstanding loans have come under moratorium.
Story first published: Saturday, May 23, 2020, 18:54 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X