பாரதிய ஜனதா கட்சிக்கு ரூ.800 கோடி நிதி.. டாடா குழுமம் மட்டும் ரூ.356 கோடி பங்களிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : மக்களை தேர்தலுக்கு முன்னதாக கடந்த நிதியாண்டில் பாஜக 800 கோடி ரூபாய்க்கு மேல் நிதி திரட்டியதாக கூறப்படுகிறது. இதில் டாடா குழுமம் மட்டும் தனித்து 356 கோடி ரூபாய் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதில் வேடிக்கை என்னவெனில் எதிர்கட்சியான காங்கிரஸ் வெறும் 146 கோடி ரூபாய் மட்டுமே இந்த காலத்தில் நிதி திரட்டியதாக கூறப்படுகிறது.

இது குறித்து இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிக்கையில், காங்கிரஸூக்கு அதிகபட்ச நிதியாக 55 கோடி ரூபாய் மட்டும் கிடைத்துள்ளது என்றும், ஆனால் இதுவே பாஜகவுக்கு 346 கோடி ரூபாய் கிடைத்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

நிதி திரட்டல்
 

நிதி திரட்டல்

இந்த இரு கட்சிகளுக்கும் நிதிகள் அளிக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் வழங்கிய நிதியில் வேறுபாடு உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிலும் கடந்த 2018 - 2019ம் நிதியாண்டில் காங்கிரஸ் திரட்டிய நிதியானது 146 கோடி ரூபாய் என்ற நிலையில், 98 கோடி ரூபாய் தேர்தல் அறக்கட்டளைகள் மூலமாக வந்தது என்றும், இதன்படி பாஜகவுக்கு 470 கோடி ரூபாய் பெற்றுள்ளது என்றும் கூறப்படுகிறது.

யார் யார் எவ்வளவு நிதி?

யார் யார் எவ்வளவு நிதி?

முக்கியமாக பாரதி ஏர்டெல், டி.எல்.எஃப், ஹீரோ குழுமத்தால் 67 கோடி ரூபாய் நிதி பாஜாகவுக்கும், இதே காலத்தில் காங்கிரஸூக்கு 39 கோடி ரூபாய் நிதியும் தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதே ஆதித்யா பிர்லா பொதுத்தேர்தல் அறக்கட்டளையானது 28 கோடி ரூபாய்க்கும் மேல் பாஜாஜவுக்கு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. எனினும் காங்கிரஸூக்கு வெறும் 2 கோடி ரூபாய் மட்டுமே அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

அறக்கட்டளை மூலம் நிதி

அறக்கட்டளை மூலம் நிதி

இதே டிரையம்ப் தேர்தல் அறக்கட்டளை பாஜகாவுக்கு 5 கோடி ரூபாயும், ஹார்மனி குழுமம் 10 கோடி ரூபாயும், ஜான் ஹித் தேர்தல் அறக்கட்டளையும், புதிய ஜன நாயக தேர்தல் அறக்கட்டளையும் தலா 2.5 கோடி ரூபாய் நிதியும் பாஜகவுக்கு வழங்கியுள்ளன. பிக் டிக்கெட் பங்களிப்பாளர்களில் பாஜகவுக்கு ஹீரோ குழு 12 கோடி ரூபாய்க்கு மேல். இதே ஐ.டி.சி 23 கோடி ரூபாய்க்கு மேலும், நிர்மா 5 கோடி ரூபாயும், பிரகதி குழுமம் 3 கோடி ரூபாயும், மைக்ரோ லேப்ஸ் 15 கோடி ரூபாயும், பிஜி ஷிர்கே கட்டுமான நிறுவனம் 15 கோடி ரூபாயும், ஆதி எண்டர் பிரைசஸ் 10 கோடி ரூபாயும் நிதி கொடுத்துள்ளன.

பத்திரங்கள் மூலம் நிதி எவ்வளவு?
 

பத்திரங்கள் மூலம் நிதி எவ்வளவு?

எனினும் பாஜக மற்றும் காங்கிரஸ் இரண்டுமே தாக்கல் செய்த பங்களிப்பு அறிக்கைகளில், தேர்தல் பத்திரங்கள் மூலம் திரட்டப்பட்ட நிதி புள்ளிவிவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த நிதி இன்னும் கணிசமாக அதிகரிக்க கூடும் என்றும் கூறப்படுகிறது. இந்த பத்திரங்கள் மூலம், அதிகப்படியான நிதி திரட்டப்பட்டிருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சீரான நிதி திரட்டல்

சீரான நிதி திரட்டல்

இந்த நிலையில் கடந்த 2013 முதல் 2019ம் நிதியாண்டு வரை இந்த நிதி திரட்டலானது சீரான போக்குடன் உள்ளதாகவும், கடந்த 2017 - 2018ல் பாஜக 1,027 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அதன் ஆண்டறிக்கையின் படி 758 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதே காலத்தில் காங்கிரஸ் வெறும் 26 கோடி ரூபாய் நிதி மட்டுமே திரட்டியதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bharatiya janata party got donation around Rs.800cr in last financial year

Bharatiya janata party got donation around Rs.800cr in last financial year. Particularly Tata group donated Rs.356 cr.
Story first published: Wednesday, November 13, 2019, 19:12 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X