கேள்விக்குறியாகும் லட்சுமி விலாஸ் வங்கி - Clix கேப்பிடல் கூட்டணி..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லட்சுமி விலாஸ் வங்கியின் நிர்வாகக் குழுவில் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் சமீபத்தில் இவ்வங்கியின் சிஇஓவாக நியமிக்கப்பட்ட எஸ் சுந்தர் மற்றும் மீண்டும் நியமிக்கப்பட்ட 6 இயக்குனர்களின் நியமனத்தைப் பங்குதாரர்கள் 100 சதவீதம் எதிர்ப்பு தெரிவித்து வாக்கு அளித்தனர்.

 

இதன் வாயிலாக லட்சுமி விலாஸ் வங்கி தற்போது இந்த 94 வருடப் பழமையான வங்கி சிஇஓ மற்றும் ப்ரோமோட்டர் இல்லாமல் இயங்குகிறது. இவ்வங்கியின் நிர்வாகத்தை மறுசீரமைப்பு செய்யவும் புதிய சிஇஓ நியமிக்கவும் ரிசர்வ் வங்கி களத்தில் இறங்கியுள்ளது. தற்காலிகமாக ரிசர்வ் வங்கி, லட்சுமி விலாஸ் வங்கியின் நிர்வாகத்தை மீட்டா மக்கான், சக்தி சின்ஹா மற்றும் சதீஷ் குமார் கார்லா ஆகியிருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

லட்சுமி விலாஸ் வங்கியில் தற்போது வெடித்துள்ள பிரச்சனையின் காரணமாக இவ்வங்கி உடனான Clix Capital நிறுவனத்தின் கூட்டணி என்னவாகும்..?

லட்சுமி விலாஸ் வங்கி நிர்வாகத்தில் தடுமாற்றம்.. சிஇஓ நீக்கம்.. ரிசர்வ் வங்கி தலையீடு..!லட்சுமி விலாஸ் வங்கி நிர்வாகத்தில் தடுமாற்றம்.. சிஇஓ நீக்கம்.. ரிசர்வ் வங்கி தலையீடு..!

Clix கேப்பிடல்

Clix கேப்பிடல்

நிதி சேவை துறையில் வர்த்தக வளர்ச்சிக்காகவும், வாடிக்கையாளர் எண்ணிக்கை வளர்ச்சிக்காகவும் லட்சுமி விலாஸ் வங்கி டெல்லியை சேர்ந்த Clix கேப்பிடல் நிறுவனத்துடன் இணைத்திடப் பேச்சுவார்த்தை நடந்தது.

இந்த வர்த்தக இணைப்பால் இரு தரப்பிற்கும் பல்வேறு சாதகமான வர்த்தக வளர்ச்சி இருப்பதாகக் கருத்து நிலவி வந்தது.

 

கொரோனா

கொரோனா

லட்சுமி விலாஸ் வங்கி மற்றும் Clix கேப்பிடல் சர்வீஸ், Clix பைனான்ஸ் ஆகிய கூட்டணி நிறுவனங்கள் மத்தியில் முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்து non-binding letter of intent ஒப்பந்தம் கையெழுத்தாகி வர்த்தக இணைப்பிற்காகத் தயாராகி வந்தது.

ஆனால் இந்த இணைப்பு மற்றும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகள் அனைத்தும் கொரோனா லாக்டவுன் ஆகியவற்றின் காரகணமாகக் காலதாமதம் ஆனது.

 

லட்சுமி விலாஸ் வங்கி
 

லட்சுமி விலாஸ் வங்கி

லட்சுமி விலாஸ் வங்கி தற்போது பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து வந்தாலும், 3 பேர் கொண்ட நிர்வாகம் வங்கியை எவ்விதமான பாதிப்பும் இல்லாமல் நடத்த கடைப்பட்டுள்ளது. மேலும் வங்கி நிர்வாகம் Clix கேப்பிடல் உடனான வர்த்தக இணைப்பை எந்த நேரத்திலும் கைவிட முடிவு செய்யவில்லை, இணைப்புத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்த முயற்சிகள் எடுக்கப்படும் எனச் சக்தி சின்ஹா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

முக்கிய முடிவு

முக்கிய முடிவு

இதையடுத்து டெல்லி தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் Clix கேப்பிடல் அடுத்தச் சில நாட்களுக்கு லட்சுமி விலாஸ் வங்கியின் நிர்வாகத்தில் எடுக்கப்படும் மாற்றங்களைக் கண்காணித்து அதன் பின்பு வர்த்தக இணைப்பு குறித்து முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

இந்தியாபுல்ஸ்

இந்தியாபுல்ஸ்

சமீபத்தில் லட்சுமி விலாஸ் வங்கியைக் கைப்பற்ற இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் முயற்சி செய்த போது ரிசர்வ் வங்கி மறுப்புத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது Clix கேப்பிடல் உடனான வர்த்தக இணைப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Big question on Lakshmi Vilas Bank merger Plan with Clix Capital

Big question on Lakshmi Vilas Bank merger Plan with Clix Capital
Story first published: Monday, September 28, 2020, 15:49 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X