ரூ. 4 லட்சத்துக்கு வாங்கியது இன்று ரூ.7000 கோடி.. பிஸ்லெரியின் வரலாறு பற்றி தெரிஞ்சுக்கோங்க!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரபலமான தண்ணீர் நிறுவனமான பிஸ்லெரியை டாடா நுகர்வோர் நிறுவனம் 7,000 கோடி ரூபாய்க்கு வாங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிறுவனத்தின் மதிப்பு குறைந்த காலகட்டத்தில் இந்தளவுக்கு வளர்ந்து விடவில்லை. ரமேஷ் செளஹான் இந்த பிராண்டை வாங்கும் போது இதன் மதிப்பு 4 லட்சம் ரூபாய் தான். ஆனால் இன்று பல ஆயிரம் கோடியாக மாறியுள்ளது.

இதே ஓரிரு வருடங்களில் இந்தளவுக்கு பிரம்மாண்ட வெற்றியாக மாறவில்லை. அதெல்லாம் சரி பிஸ்லெரி எங்கு ஆரம்பிக்கப்பட்டது? இதன் உரிமையாளார் யார்? ரமேஷ் செளஹான் யார்?

பிரபல தண்ணீர் நிறுவன பங்குகளை வாங்கும் டாடா குழுமம்.. என்ன விலை தெரியுமா? பிரபல தண்ணீர் நிறுவன பங்குகளை வாங்கும் டாடா குழுமம்.. என்ன விலை தெரியுமா?

பிஸ்லெரி நிறுவன வரலாறு?

பிஸ்லெரி நிறுவன வரலாறு?

பிஸ்லெரி ஒரு இத்தாலி நிறுவனமாகும். 1965ம் ஆண்டு பெலிஸ் பிஸ்லெரியால் நிறுவப்பட்ட ஒரு நிறுவனமாகும். இதனை 1969 செளஹான் தலைமையிலான ஏற்றுமதி நிறுவனமான பார்லே எக்ஸ்போர்ட்ஸ் வாங்கியது. அப்போது செளஹானுக்கு வயது 28 தான். செளஹான் தனது போர்ட்போலியோவில் பிராண்டட் சோடாவை சேர்க்க நினைத்தார். எனினும் இந்தளவுக்கு மிகப்பெரிய குடி நீர் பிராண்டாக வளரும் என அவர் அப்போது நினைதிருக்க வாய்ப்பில்லை. எனினும் அப்போது பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் என்பதையும் கடைசியில் சேர்க்க நினைத்தார்.

 சோடா & தண்ணீர்

சோடா & தண்ணீர்

தனது போர்ட்போலியோவில் பல பிரபலமான பிராண்டுகள் என்பது இருந்தாலும், சோடா என்பது இல்லை என்ற நிலையில் தான் பாட்டிலில் சோடாவை விற்பனை செய்ய நினைத்தார்.

செளஹான் ஆரம்பத்தில் இரண்டு வகையாக கண்ணாடி பாட்டில்களையும் அறிமுகம் செய்தார். அது பப்ளி மற்றும் ஸ்டில் என இரண்டு வகைகளில் அறிமுகம் செய்யப்பட்டது.

சோடா தேவை அதிகம்
 

சோடா தேவை அதிகம்

2008ம் ஆண்டில் BT அளித்த பேட்டியில் அவர்கள் ஏற்கனவே தங்களது போர்போர்ட்போலியோவில் கோல்ட் ஸ்பாட் உள்ளிட்ட பலவும் இருந்ததாகவும், எனினும் சோடா இல்லை என்றும் கூறியிருந்தார். 60 மற்றும் 70களின் முற்பகுதியில் பைவ் ஸ்டார் ஹோட்டல்களில் சோடாவிற்கு நல்ல தேவை இருந்தது. அந்த சமயத்தில் தான் பிஸ்லெரி சோடாவும் மிக பிரபலமானது.

தண்ணீரின் பக்கம் திரும்பிய கவனம்

தண்ணீரின் பக்கம் திரும்பிய கவனம்

ஆனால் அந்த சமயத்தில் தண்ணீர் வணிகத்தினை பற்றி பெரிதாக யோசிக்கவில்லை என்றும் கூறியிருந்தார். 1993ம் ஆண்டில் தனது குளிர் பானங்கள் உள்ளிட்ட பலவற்றை கோகோ கோலாவுக்கு 186 கோடி ரூபய்க்கு விற்பனை செய்ய நினைத்தபோது தான், அவரின் கவனம் தண்ணீரின் பக்கம் திரும்பியது.

டிரான்ஸ்போர்ட் பிரச்சனை

டிரான்ஸ்போர்ட் பிரச்சனை

ஆரம்பத்தில் விலை குறைந்த தண்ணீரை எடுத்து செல்ல டிரான்ஸ்போர்ட்டர்கள் கூட பெரியளவில் ஆர்வம் காட்டவில்லையாம். ஏனெனில் இது கனமான ஒன்று. அதேசமயம் குறைந்த விலை என்று நினைத்தனர். ஆக இதுவே செளஹானுக்கு பெரிய சவாலாக இருந்தது. அதன் பிறகு தான் டிரான்ஸ்போர்ட் பிரச்சனையையும் சரி செய்ய விநியோகஸ்தர்களை நியமித்தார். 5000 டிரக்குகள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டது.

பல போட்டியாளர்கள்

பல போட்டியாளர்கள்

2000வது ஆண்டில் பிஸ்லெரிக்கு டாடாவின் ஹிமாலயன் பிராண்ட் கடும் போட்டியாளராக அமைந்தது. அது மட்டும் அல்ல அக்குவாஃபீனா, கோகோ கோலா (கின்லே), கிங்க்பிஷர் மறும் நெஸ்டிலே போன்ற பிற போட்டியாளர்களும் சந்தையில் இருந்தனர்.

முதலிடம் எப்படி?

முதலிடம் எப்படி?

கடந்த 2007ல் எக்னாமிக் டைம்ஸூக்கு அளித்த பேட்டியில், வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு சிறந்த சேவையை வழங்க எந்த பிராண்டும் இல்லை. நான் முதலிடத்தினை பிடிக்க, எனது பிராண்டை வளர்க்க கடினமான போராடினேன் என்றும் கூறியிருந்தார்.

ஏன் விற்பனை?

ஏன் விற்பனை?

ஏன் தனது குளிர்பான சேவையை விற்பனை செய்தீர்கள் என்ற கேள்விக்கு, மாஷா, சிட்ரா, கோல்டு ஸ்பாட் மற்றும் ரிம் ஜிம் போன்ற பிராண்டுகளை விளம்பரப்படுத்த தண்ணிடம் பணம் இல்லை என்றும் கூறியிருந்ததும் நினைவுகூறத்தக்கது. அதிகம் பாட்டில்காரர்களையே சார்ந்திருந்ததாகவும், பிஸ்லெரி தான் அனைத்தையும் மாற்றியது என்றும் கூறினார்.

பிஸ்லெரி ஏன் விற்பனை?

பிஸ்லெரி ஏன் விற்பனை?

தற்போது ரமேஷ் செளஹானின் உடல் நிலை சரியில்லாததாலும், அவரது மகள் ஜெயந்திக்கு வியாபாரத்தில் ஆர்வம் இல்லை என்பதாலும், செளஹான் அதனை டாடா நுகர்வோருக்கு விற்பனை செய்ய விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். பிஸ்லெரியை பிரிவது என்பது மிக வேதனையளிக்கிறது. எனினும் டாடாக்கள் அதனை நன்றாக வளர்ப்பார்கள் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆர்வமில்லை

ஆர்வமில்லை

மேலும் தனக்கு நிறுவனத்தினை நடத்தும் எந்த எண்ணமும் இல்லை. ஆக நான் சிறு பங்குகளை வைத்துக் கொள்ள மாட்டேன். எனக்கு அதில் விருப்பமும் இல்லை. நான் சுற்றுசூழல் மற்றும் தொண்டு நிறுவனங்களில் முதலீடு செய்வேன் என்றும் செளஹான் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

bought Rs4 lakh, sold for around Rs.7000 crore: bisleri's success travel

When Ramesh Chauhan bought the Bisleri brand, it was worth Rs 4 lakh. But today it has become around 7 thousand crores.
Story first published: Thursday, November 24, 2022, 19:20 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X