செவ்வாய்க்கிழமை காலை வர்த்தகம் துவங்கிய சில நிமிடங்களில் 400 புள்ளி வரையில் சரிந்த சென்செக்ஸ், இன்றைய வர்த்தக முடிவில் சுமார் 452 புள்ளிகள் உயர்வடைந்துள்ளது. இதன் மூலம் இன்று ஓரே நாளில் சென்செக்ஸ் குறியீடு சுமார் 894 புள்ளிகள் வரையில் உயர்ந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் ஐடி நிறுவனப் பங்குகள் மீது அதிகளவிலான முதலீடுகள் குவிந்த காரணத்தினால் சென்செக்ஸ் குறியீடு சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 45,553.96 புள்ளிகளில் துவங்கி வர்த்தக முடிவில் 452.73 புள்ளிகள் உயர்வுடன் 46,006.69 புள்ளிகளை அடைந்தது. இதன் மூலம் காலையில் சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் அதிகளவிலான சரிவை எதிர்கொண்ட நிலையில், மாலையில் இண்டஸ்இந்த், ரிலையன்ஸ், ஹெச்டிஎப்சி, பஜாஜ் பைனான்ஸ், கோட்டாக் மஹிந்திரா வங்கி ஆகியவை மட்டுமே சரிவை எதிர்கொண்டுள்ளது.
சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் ஹெச்சிஎல் 5 சதவீதம், டெக் மஹிந்திரா 4.33 சதவீதம், இன்போசிஸ் 3.78 சதவீதம், டிசிஎஸ் ஒரு சதவீதம் என ஐடி நிறுவன பங்குகள் அதிகளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது.
இதோடு பவர்கிரிட், சன் பார்மா, நெஸ்லே, எல் அண்ட் டி, டைட்டன், பார்தி ஏர்டெஸ், ஏசியன் பெயின்ட்ஸ், டாக்டர் ரெட்டி, என்டிபிசி, பஜாஜ் ஆட்டோ ஆகியவை நேற்றையச் சரிவில் இருந்து மீண்டுள்ளது.
விப்ரோவின் அதிரடி முடிவு.. ஏப்ரல் வரையில் ஜாலி தான்.. குதூகலத்தில் ஊழியர்கள்..!
சென்செக்ஸ் குறியீட்டைப் போலவே நிஃப்டி குறியீடு மதியம் 1.30 மணிக்கு மேல் சிறப்பான வளர்ச்சி அடைய துவங்கியது. இதன் வாயிலாக நிஃப்டி குறியீடு வர்த்தக முடிவில் 137.90 புள்ளிகள் உயர்வில் 13,466.30 புள்ளிகளை அடைந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் ஆசியச் சந்தையில் இந்தியாவைத் தவிர அனைத்து வர்த்தகச் சந்தைகளும் சரிவை அடைந்துள்ளது. குறிப்பாகச் சீனா மற்றும் தைவான் சந்தைகள் அதிகப்படியாக 1.86 சதவீதம், 1.44 சதவீத சரிவை எதிர்கொண்டு உள்ளது. இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா, ஜப்பான் ஹாங்காங் ஆகிய நாடுகள் அதிகளவிலான சரிவை எதிர்கொண்டு உள்ளது.