பி.எஸ்.என்.எல் VRS திட்டத்துக்கு பலே வரவேற்பு.. 2 நாளில் 22,000 பேர் விருப்பம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : வெறும் இரண்டு நாட்களில் சுமார் 22,000 ஊழியர்கள் பி.எஸ்.என்.எல் தன்னார்வ ஓய்வூதிய திட்டத்துக்கு விருப்பம் தெரிவித்துள்ளனராம்.

கடன் பிரச்சனையால் தத்தளித்து வரும் பொதுத்துறையை சேர்ந்த தொலைத் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல், தனது கடன் விகிதத்தினை குறைக்க பல்வேறு துரித நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.

இந்த நிலையில் இதன் முக்கிய அம்சங்களாக, பி.எஸ்.என்.எல் தனியார்மயம் இல்லை. ஆனால் பி.எஸ்.என்.எல் நிறுவனமும், எம்.டி.என்.எல் நிறுவனம் இணைக்கப்படும் என்றும் கடந்த மாதமே அரசின் தரப்பில் கூறப்பட்டது.

இருப்பதோ 1.2 லட்சம் வேலைகள் தான்.. 2.4 கோடி பேர் போட்டி.. தவிக்கும் ரயில்வே..!இருப்பதோ 1.2 லட்சம் வேலைகள் தான்.. 2.4 கோடி பேர் போட்டி.. தவிக்கும் ரயில்வே..!

கடனை குறைக்க அதிரடி நடவடிக்கை

கடனை குறைக்க அதிரடி நடவடிக்கை

மேலும் கடன் பிரச்சனையால் தத்தளித்து வரும் இந்த நிறுவனத்தினை மீட்டெடுக்க அரசு பல்வேறு திட்டங்களை தீட்டியுள்ளது. இதில் முக்கிய அம்சமாக இதன் பெருத்த செலவினை குறைக்க திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் முதல் செலவினமாக சம்பளம் கருதப்பட்டது. இதனால் இந்த தன்னார்வ ஓய்வூதிய திட்டத்தினை பற்றி அரசு பல மாதங்களாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஆட்குறைப்பு செய்ய திட்டம்

ஆட்குறைப்பு செய்ய திட்டம்

இந்த நிலையில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் தற்போது சுமார் 1.50 லட்சம் பணியாளர்கள் உள்ள நிலையில் ஆட்குறைப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சம்பள செலவை 7,000 கோடி ரூபாய் அளவுக்கு குறைக்க முடியும் என்றும் பி.எஸ்.என்.எல் தரப்பில் கூறப்படுகிறது. இதற்காக கடந்த நவம்பர் 4ம் தேதி முதல் விருப்ப ஓய்வு பெறும் திட்டத்தை பி.எஸ்.என்.எல் அறிமுகப்படுத்தி உள்ளது.

2 நாளில் 22,000 பேர் விருப்பம்
 

2 நாளில் 22,000 பேர் விருப்பம்

மேலும் இந்த விருப்ப ஓய்வூ திட்டம் வரும் டிசம்பர் 3ம் தேதி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இத்திட்டத்தின் மூலம், அறிமுகப்படுத்தப்பட்ட 2 நாட்களில் 22,000 பேர் இதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சுமார் 1 லட்சம் பணியாளர்கள் பயனடைவார்கள் என பி.எஸ்.என்.எல் தலைவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

விருப்ப ஓய்வூ பெறுபவர்களுக்கு பல சலுகை

விருப்ப ஓய்வூ பெறுபவர்களுக்கு பல சலுகை

இவ்வாறு விருப்ப ஓய்வூ பெறும் ஊழியர்களுக்கு, அரசு இந்த திட்டத்தின் கீழ் பலசலுகைகளை அறிவித்துள்ளது. குறிப்பாக ஊழியர்களுக்கு பணி முடித்த ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 35 நாட்கள் ஊதியமும், மீதமுள்ள பணிக்காலத்திற்கு ஆண்டுக்கு 25 நாட்கள் ஊதியமும் வழங்கப்படும் என பி.எஸ்.என்.எல் தெரிவித்துள்ளது. மேலும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க 50 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும் என்றும் ஏற்கனவே அறிவித்திருந்தது.

விருப்ப ஓய்வூ பெறலாம்

விருப்ப ஓய்வூ பெறலாம்

மேலும் தற்போது பணியில் உள்ள 1.5 லட்சம் ஊழியர்களில் கிட்டத்தட்ட 1 லட்சம் பேர், இந்த விருப்ப ஓய்வுக்கு தகுதி பெறுகிறார்கள். மேலும் இந்த விருப்ப ஓய்வை பெற 80 ஆயிரம் ஊழியர்கள் இந்த திட்டத்தை பயன்படுத்த விரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

பி.எஸ்.என்.எல்லுக்கு புத்துயிர்

பி.எஸ்.என்.எல்லுக்கு புத்துயிர்

மேலும் கடந்த மாதத்தில் அரசு அறிவித்த இணைப்பு நடவடிக்கையும், இந்த விருப்ப ஓய்வூ திட்டத்தாலும், நஷ்டத்தில் இயங்கி வருகிற பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்களுக்கு இது ஒரு புத்துயிரூட்டலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் விருப்ப ஓய்வு திட்டத்துக்கு தேவையான நிதியினை மத்திய அரசு வழங்கும் என்றும் கடந்த மாதமே அறிவித்திருந்தது நினைவு கூறத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

BSNL VRS plan: BNSL senior officials said more over 22,000 employees chosen VRS within two days

BNSL senior officials said more over 22,000 employees chosen VRS within two days. And it’s expected more in coming weeks, said BSNL officials
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X