Budget 2023: பட்ஜெட் எதிரொலி.. சென்செக்ஸ் 1100 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: 2023 - 24ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்திய பங்கு சந்தையானது நல்ல ஏற்றத்தில் காணப்படுகின்றது. குறிப்பாக சென்செக்ஸ் 1100 புள்ளிகளுக்கு மேலாக ஏற்றத்தில் காணப்படுகின்றது.

1.08 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 1187.44 புள்ளிகள் அதிகரித்து, 60,737.34 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகின்றது. இதே நிப்டியும் 296.20 புள்ளிகள் அதிகரித்து, 17,958.40 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகின்றது.

இன்று காலை தொடக்கத்தில் இருந்தே சந்தையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், தற்போது 1100 புள்ளிகளுக்கு மேலாக ஏற்றத்தில் காணப்படுகின்றது.

மத்திய பட்ஜெட் 2023: 50 வருடம் வட்டியில்லா கடன்.. மாபெரும் அறிவிப்பு..!மத்திய பட்ஜெட் 2023: 50 வருடம் வட்டியில்லா கடன்.. மாபெரும் அறிவிப்பு..!

வருமான வரி சலுகை

வருமான வரி சலுகை

வருமான வரி சலுகை உள்ளிட்ட பற்பல அறிவிப்புகளுக்கு மத்தியில், இந்திய பங்கு சந்தையானது நல்ல ஏற்றத்தினை கண்டு வருகின்றது.

குறிப்பாக இன்றைய பட்ஜெட் அமர்வில் தனிநபருக்கான புதிய வருமான வரி உச்சவரம்பு விலக்கு 2.5 லட்சம் ரூபாயிலிருந்து 3 லட்சமாக அதிகரிப்பு. புதிய வருமான வரி திட்டத்தின்கீழ் ரூ.7 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ள தனிநபருக்கு வருமான வரி இல்லை என்பது பெரும் அறிவிப்பாக பார்க்கப்படுகிறது.

கடன் அவசியம்

கடன் அவசியம்

விவசாயக் கடன் செலவு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகள், பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமானது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறது.

இது தொழில் மற்றும் சில்லறைக் கடன்களைப் போலவே விவசாயத்திற்கும் பொருந்தும். இது தவிர விவசாய துறை, கல்வித் துறை என பலவற்றிற்கும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விலை குறையும்?

விலை குறையும்?

டிவி பேனல்களின் ஓபன் செல்களின் பகுதிகளுக்கான சுங்க வரி 2.5% குறைக்கப்பட்டுள்ளது. ஆக இது சார்ந்த துறைகளை இது மேற்கொண்டு ஊக்கிவிக்கும் எனலாம்.

மொபைல் போன் உற்பத்திக்கான சில மூலதன பொருட்களுக்கு இறக்குமதி மீதான சுங்க வரியை குறைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில் ஆய்வகத்தில் வளர்க்கப்படும் வைரங்கள் தயாரிக்கப் பயன்படும் விதைகளுக்கான அடிப்படை சுங்க வரியை அரசு குறைக்க திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் இறால் தீவனத்தின் மீதான சுங்க வரியை குறைக்க அரசு முடிவு செய்துள்ளது

எதெல்லாம் விலை அதிகரிக்கும்?

எதெல்லாம் விலை அதிகரிக்கும்?

சிகரெட் மீதான வரி 16% உயர்த்தப்பட்டுள்ளது.

கலப்பு ரப்பரின் அடிப்படை இறக்குமதி வரி 10%ல் இருந்து 25% அதிகரிக்கப்பட்டுள்ளது.

தங்கக் கட்டிகளால் செய்யப்பட்ட பொருட்களுக்கு அடிப்படை சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளது.

கிச்சன் எலக்ட்ரிக் சிம்னி சுங்க வரி 7.5%ல் இருந்து 15% ஆக அதிகரித்துள்ளது.

பொருளாதார வளர்ச்சி

பொருளாதார வளர்ச்சி

மத்திய பட்ஜெட்டில் இந்த நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7% வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சவால்கள் இருந்தபோதிலும் பொருளாதாரம் சரியான பாதையில் செல்கிறது என்பதை சுட்டிக் காட்டியுள்ளது. இத போன்ற பற்பல அறிவிப்புகளும் சந்தையில் ஏற்றத்திற்கு வழிவகுத்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

budget 2023: sensex jump above 1100 points, nifty around 18,000

budget 2023: sensexjump above 1100 ponits, nifty trade nearly 18,000
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X