இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆக இருக்கும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாகம், டெலிகாம் சேவை பிரிவை தொடர்ந்து தற்போது ரீடைல் வர்த்தக பிரிவின் பங்குகளை விற்பனை செய்து பெரிய அளவிலான நிதியை திரட்ட முடிவு செய்துள்ளது. இதன் முதல் படியாக கடந்த வாரம் ரிலையன்ஸ் ரீடைல் தனது 1.75 சதவீத பங்குகளை சில்வர் லேக் நிறுவனத்திடம் விற்பனை செய்து சுமார் 7, 500 கோடி ரூபாய் அளவிலான நிதியை புதிய முதலீடாக பெற்றது.
இதைதொடர்ந்து KKR நிறுவனத்திடம் சுமார் 1.5 பில்லியன் டாலர் அளவிலான முதலீடு ஈர்க்கும் திட்டத்திற்கு பேச்சுவார்த்தை இறங்கியது. KKR நிறுவனத்தின் முதலீடு திட்டம் குறித்து முழுமையான அறிவிப்பு இன்னும் வெளியிடப்படாமல் இருக்கும் இந்த வேளையில் அடுத்த முதலீடு குறித்து பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.
இந்த முறை 2 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை ஈர்க்கும் திட்டத்தில் இறங்கியுள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.
ஒரு கம்பெனிக்கு 3 கோடி யூரோவைக் கொட்டிக் கொடுக்கும் Infosys! எகிறிய பங்கு விலை!

அமெரிக்க நிறுவனம்
அமெரிக்காவின் முன்னணி தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமாக விளங்கும் The Carlyle Group ஏற்கனவே இந்தியாவில் பல நிறுவனங்களில் முதலீடு செய்திருந்த நிலையில், தற்போது ரிலையன்ஸ் ரீடைல் பங்குகளை கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் பங்கு விற்பனை மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில், ரிலையன்ஸ் மிகப்பெரிய மதிப்பை பெற்ற நிலையில், தற்போது The Carlyle Group ரிலையன்ஸ் ரீடைல் பங்குகளை கைப்பற்றி முதலீடு செய்ய பேச்சுவார்த்தையை துவங்கியுள்ளது.

2 பில்லியன் டாலர்
ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் கடந்த சில மாதங்களாக மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ள நிலையில், The Carlyle Group குருப் ரிலையன்ஸ் ரீடைல் வென்சர்ஸ் நிறுவனத்தில் சுமார் 2 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

மிகப்பெரிய முதலீடு
ரிலையன்ஸ் ரீடைல் மற்றும் The Carlyle Group மத்தியில் நடக்கும் இந்த முதலீட்டு பேச்சுவார்த்தை வெற்றி அடைந்தால், கார்லைல் குரூப் இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்யப்பட்ட நிறுவனமாக ரிலையன்ஸ் ரீடைல் திகழும்.
அதுமட்டும் அல்லாமல் இந்திய ரீடைல் பிரிவில் முதலீடு செய்யப்பட்ட முதல் நிறுவனமாகவும் ரீலையன்ஸ் ரீடைல் இருக்கும்.

ஆன்லைன் மற்றும் ஆப்லைன்
கார்லைல் குருப் முதலீடு செய்ய முடிவு செய்துள்ள 2 பில்லியன் டாலர் முதலீடு ஆன்லைன் சந்தையில் மட்டும் அல்லாமல் ஆப்லைன் சந்தையிலும் இருக்கும் என தகவல் கிடைத்துள்ளது.
இந்த அடுத்தடுத்த முதலீடுகளால் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் வர்த்தகம் இந்திய சந்தையில் புதிய வலிமையை அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரீடைல் வர்த்தகம்
ரிலையன்ஸ் ரீடைல் பல கட்ட சோதனைகளுக்கு பின்பு தனது ஆப்லைன் சந்தை வர்த்தத்தை ஜியோ மார்ட் மூலம் மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி, பழ விற்பனையை ஆன்லைன் சந்தைக்கு கொண்டு வந்தது. மிகவும் குறைந்த காலத்தில் பெரிய அளவிலான வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்ற ஜியோ மார்ட் சனிக்கிழமை ஆடை விற்பனையும் ஜியோ மார்ட்-ல் அறிமுகம் செய்து அசத்தியுள்ளது.