ரோட்டோமேக் மீது சிபிஐ வழக்கு.. ரூ.750.54 கோடி மோசடி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கான்பூர் தலைமையிடமாக கொண்டு இயங்கும் ரோட்டோமேக் குளோபல் நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள் சாதனா கோத்தாரி மற்றும் ராகுல் கோத்தாரி (இவர்கள் ரோட்டோமேக் நிறுவனத்தின் ப்ரோமோட்டரான விக்ரம் கோத்தாரி-யின் மனைவி மற்றும் மகன் ஆவார்) ஆகியோர் மீது சிபிஐ வழக்கு தொடுத்துள்ளது.

 

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) சுமார் 750.54 கோடி ரூபாய் அளவிலான நிதி இழப்பை ஏற்படுத்தி வங்கியில் மோசடி செய்த குற்றத்திற்காக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

ரோட்டோமேக் நிறுவனங்களை மூட முடிவு.. வங்கி மோசடியின் எதிரொலி..! ரோட்டோமேக் நிறுவனங்களை மூட முடிவு.. வங்கி மோசடியின் எதிரொலி..!

ரோட்டோமேக் நிறுவனம்

ரோட்டோமேக் நிறுவனம்

பேனா தயாரிக்கும் ரோட்டோமேக் நிறுவனம், பாங்க் ஆஃப் இந்தியா தலைமையிலான ஏழு வங்கிகளின் கூட்டமைப்பிற்கு மொத்தம் 2,919.39 கோடி ரூபாய் அளவிலான நிதி நிலுவையில் உள்ளது. இதில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு மட்டும் சுமார் 23 சதவீத தொகையை அளிக்க வேண்டும்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் லக்னோ கிளையின் தலைமை மண்டல மேலாளர் சஞ்சய் கிஷோர் நவம்பர் 14 அன்று நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள் சாதனா மற்றும் ராகுல் கோத்தாரி மற்றும் பிற சில அரசு ஊழியர்களுக்கு எதிராக ஐபிசி பிரிவுகள் 210-பி (குற்றச் சதித் திட்டத்தின் கீழ்), 420 (ஏமாற்றுதல்), ஊழல் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு விதிகள் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

ஏழு வங்கிகள்
 

ஏழு வங்கிகள்

பாங்க் ஆஃப் இந்தியா தலைமையிலான ஏழு வங்கிகளின் கூட்டமைப்பின் உறுப்பினர்களின் புகார்களின் அடிப்படையில் பேனா தயாரிக்கும் ரோட்டோமேக் நிறுவனம் ஏற்கனவே சிபிஐ மற்றும் அமலாக்க இயக்குநரகத்தின் பல விசாரணைகளை எதிர்கொள்கிறது. இந்த நிலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி புதிய வழக்கை பதிவு செய்துள்ளது.

நிதியல்லாத கடன்

நிதியல்லாத கடன்

ஜூன் 28, 2012 அன்று, நிறுவனத்திற்கு நிதியல்லாத (non-fund) ரூ. 500 கோடி வரம்பை அனுமதித்ததாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் லக்னோ கிளையின் தலைமை மண்டல மேலாளர் சஞ்சய் கிஷோர் FIR அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார்.

 கடன் மற்றும் நிலுவை தொகை

கடன் மற்றும் நிலுவை தொகை

இந்த கடன் கணக்கு வாராக் கடனாக ஜூன் 30, 2016 அறிவிக்கப்பட்டது, இதன் வாயிலாக வாங்கி கடன் மற்றும் நிலுவை தொகை ஆகியவற்றை சேர்ந்து மொத்த தொகை 750.54 கோடி ரூபாய் நிலுவை தொகையாக உயர்ந்தது.

11 கடன் கடிதங்கள

11 கடன் கடிதங்கள

இதை தொடர்ந்து ரோட்டோமேக் நிறுவனத்தின் வெளிநாட்டு வர்த்தகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 11 கடன் கடிதங்களை (Letters of Credit) வழங்கியுள்ளனர், அவற்றின் வர்த்தகம் முடிந்த பின் மொத்தம் 743.63 கோடி ரூபாய்க்கு எவ்விதமான பாதுகாப்பும் இல்லை என்று FIR அறிக்கையில் தெரிவித்துள்ளார் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாளர் சஞ்சய் கிஷோர்

Letters of Credit என்றால் என்ன

Letters of Credit என்றால் என்ன

Letters of Credit என்பது வங்கியிடமிருந்து ஒரு கடிதம், விற்பனையாளருக்கு வாங்குபவரின் பணம் சரியான நேரத்தில் மற்றும் சரியான தொகைக்கு பெறப்படும் என்று உத்தரவாதம் அளிக்கும் ஒரு ஆவணம். வாங்குபவர் வாங்கிய பொருட்களுக்கு பணம் செலுத்த முடியாவிட்டால், வாங்கிய முழு அல்லது மீதமுள்ள தொகையையும் வங்கி செலுத்த வேண்டும்.

இரண்டு தரப்பினர்

இரண்டு தரப்பினர்

ரோட்டோமேக் மேற்கொண்ட வர்த்தகத்திற்கான ஆவணங்களின் முழுமையான தொகுப்பை நிறுவனம் சமர்பிக்கவில்லை. மேலும் அனைத்து LCக்களும் இரண்டு தரப்பினருக்கு சாதகமாக வழங்கப்பட்டன ஒன்று Fareast Distributors மற்றொன்று Logistic P Ltd மற்றும் RBA Venture Ltd.

கணக்கு புத்தகங்களில் கோளாறு

கணக்கு புத்தகங்களில் கோளாறு

சரியான ஆவணங்கள் இல்லாத நிலையில் வர்த்தகக் கப்பல் மற்றும் பயணங்கள் பில்களில் நம்பகத்தன்மையில் சந்தேகங்கள் எழுந்தது. வங்கியால் நடத்தப்பட்ட தடயவியல் தணிக்கையில் கணக்கு புத்தகங்களில் கூறப்படும் கையாளுதல் மற்றும் LC களில் இருந்து எழும் கடன்களை வெளிப்படுத்தாதது வெளிப்படையாக காட்டியது என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

CBI books Rotomac for Rs 750-crore bank fraud case

CBI books Rotomac for Rs 750-crore bank fraud case
Story first published: Thursday, November 17, 2022, 19:10 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X