சிக்கலில் மத்திய அரசு..! ரவுண்டு கட்டும் நிதிப் பற்றாக்குறை & ஜிஎஸ்டி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா முழுக்க ஒரு வித பொருளாதார மந்த நிலை நிலவிக் கொண்டு இருப்பதை பல்வேறு தரகு நிறுவனங்கள் தொடங்கி அனலிஸ்டுகள் வரை பலரும் சொல்லி விட்டார்கள்.

இந்த பொருளாதார மந்த நிலையினால் வியாபாரிகளுக்கு, வியாபாரமும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

எனவே மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) மற்றும் நேரடி வரிகள் மூலம் வர வேண்டிய வரி வருவாய் பெரிய அளவில் சரிந்து இருக்கிறது.

ஆஹா.. சென்செக்ஸ் 41,950-ஐ தொட்டுடும் போலருக்கே..!ஆஹா.. சென்செக்ஸ் 41,950-ஐ தொட்டுடும் போலருக்கே..!

இலக்கு அதிகரிப்பு

இலக்கு அதிகரிப்பு

இந்த நிலையை சரி செய்ய, மத்திய அரசு, இந்த நிதி ஆண்டில் மீதம் இருக்கும் மாதங்களுக்கு ஜிஎஸ்டி வருவாய் இலக்கை அதிகரித்து இருக்கிறது. இப்போது ஜிஎஸ்டி மூலம் வரும் வருவாய் குறைவது மட்டும் பிரச்சனை இல்லை. இந்த ஜிஎஸ்டி வரி வருவாய் குறைவால், மாநில அரசுகளுக்கு கொடுக்க வேண்டிய வரித் தொகையையும் ஒழுங்காகக் கொடுக்க முடியவில்லை.

கணிப்பு

கணிப்பு

இந்த 2019 - 20 நிதி ஆண்டில் மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு கொடுக்க வேண்டிய, பங்குத் தொகை சுமாராக 59,500 - 77,000 கோடி ரூபாயாக இருக்கலாம் எனக் கணித்து இருக்கிறது இக்ரா (ICRA) அமைப்பு. இந்த தொகை, இந்த தொகை 2019 - 20 பட்ஜெட்டில், மாநில அரசுகளுக்கு, கொடுப்பதாகச் சொன்ன தொகையை விட குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திப்பு

சந்திப்பு

மாநிலங்கள் சுதந்திரமாக செலவழிக்க கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுக்கவில்லை என்றால் மாநில அரசுகள் கேள்வி எழுப்பத் தானே செய்யும். ஏற்கனவே சில மாநில நிதி அமைச்சர்கள் நேரடியாக நிதி அமைச்சரைச் சந்தித்து தங்கள் பங்கை கேட்டிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜிஎஸ்டி நஷ்ட ஈடு

ஜிஎஸ்டி நஷ்ட ஈடு

அதோடு, இந்த 2019 - 20 நிதி ஆண்டில், ஜிஎஸ்டி நஷ்டஈடுத் தொகையாக ஒன்பது மாநிலங்களுக்கு மட்டும் சுமார் 60,000 - 70,000 கோடி ரூபாய் வரை கொடுக்க வேண்டி இருக்கும் எனவும் கணித்துச் சொல்லி இருக்கிறது இக்ரா. இப்படி ஜிஎஸ்டி வரி வருவாய் சரிவினால், ஒரு பக்கம் பங்கீட்டுப் பிரச்னைகள் இருக்கிறது என்றால்... மறு பக்கம் நிதிப் பற்றாக்குறை பெரிய பிரச்னையாக இருக்கிறது.

கடந்துவிட்டோம்

கடந்துவிட்டோம்

இந்த 2019 - 20 நிதி ஆண்டில் நிர்ணயித்த நிதிப் பற்றாக்குறை (Fiscal Deficit) அளவை எப்போதோ கடந்துவிட்டோம். இதை இழுத்துப் பிடிக்க வேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறது மத்திய அரசு. கிட்டத் தட்ட ஜிஎஸ்டியில் இருந்து, நிர்ணயித்த அளவுக்கு வரி வருவாய் இல்லை என்பதால் இந்த பிரச்னைகளை சமாளித்துக் கொண்டிருக்கிறது மத்திய அரசு.

பார்ப்போம்

பார்ப்போம்

இந்த இக்கட்டான சூழலை மத்திய அரசு எப்படி சரி செய்யப் போகிறது..? மாநில அரசுகளுக்குக் கொடுக்க வேண்டிய சரக்கு மற்றும் சேவை வரி நஷ்டஈடுத் தொகையை எப்படி ஒழுங்காகக் கொடுக்கப் போகிறது..? அப்படி கொடுப்பதாக இருந்தாலும் எங்கிருந்து நிதியைத் திரட்டும் என்பதை எல்லாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

central government facing fiscal deficit gst compensation payment issue

The ruling central government has to maintain the fiscal deficit and has to pay the gst compensation amount to the respective states as it said. Now its struggling to do it.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X