தேங்காய் எண்ணெய்-க்கு 18% வரியா.. ஜிஎஸ்டி கவுன்சில்-ஐ வெளுக்கும் பிடிஆர்..! #AntiSouth

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெள்ளிக்கிழமை நடந்து முடிந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் பல பொருட்களுக்கு வரி அளவீடுகள் மாற்றப்பட்டும், பலவற்றுக்கு வரி விதிப்பிற்கான விளக்கம் கொடுக்கப்பட்டது. இதில் முக்கியமாக மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தேங்காய் எண்ணெய் மீதான வரியை மாற்றுவதாக அறிவிக்கப்பட்டது.

 

ரூபாய் மதிப்பு மீண்டும் வீழ்ச்சி.. என்ன காரணம்.. இன்னும் எவ்வளவு தான் வீழ்ச்சி காணும்.. ! ரூபாய் மதிப்பு மீண்டும் வீழ்ச்சி.. என்ன காரணம்.. இன்னும் எவ்வளவு தான் வீழ்ச்சி காணும்.. !

இதைத் தமிழ்நாட்டின் நிதியமைச்சரான பழனிவேல் தியாகராஜன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். சாமானிய மக்களைப் பாதிக்கும் இதைக் கட்டாயம் மாற்ற வேண்டும் என ஜிஎஸ்டி கவுன்சில் அமைப்பிற்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒரு லிட்டருக்கும் குறைவான அளவில் விற்கப்படும் தேங்காய் எண்ணெய் பாட்டில்களை ஹேர் ஆயில் எனக் கருதி 18 சதவீத வரியும், ஒரு லிட்டர் மற்றும் அதற்கு அதிகமான அளவில் விற்பனை செய்யப்படும் பாட்டில்களை உணவு பொருட்கள் எனக் கருதி 5 சதவீத வரியும் விதிக்கப்படும் என ஜிஎஸ்டி கவுன்சில் அமைப்பின் Fitment Committee பரிந்துரை செய்தது.

பழனிவேல் தியாகராஜன்

பழனிவேல் தியாகராஜன்

இதற்குத் தமிழ்நாட்டின் நிதியமைச்சரான பழனிவேல் தியாகராஜன் தேங்காய் எண்ணெய் மீதான 18 சதவீத வரி ஜிஎஸ்டி கவுன்சில் மீது அவநம்பிக்கையை அளிக்கிறது. மேலும் இது anti-poor மற்றும் anti-southern states மனநிலையில் அளிக்கப்பட்ட பரிந்துரையாகப் பார்க்கப்படுகிறது. இந்த 18 சதவீதம் வரி என்பது தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா பிரதேஷ், கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய்
 

தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய்

இந்தியாவில் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் தமிழ்நாடு-ம் ஒன்று, இதேபோல் தேங்காய் எண்ணெய் அதிகம் பயன்படுத்தும் மாநிலத்தில் கேரளா மிக முக்கியமானது என ஜிஎஸ்டி கவுன்சில்-க்கு அனுப்பிய கடிதத்தில் தமிழ்நாட்டின் நிதியமைச்சரான பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டு உள்ளார்.

18 சதவீத வரி எப்படி..?

18 சதவீத வரி எப்படி..?

வரி விதிக்க வேண்டும் என்பதற்காகவே எப்படிச் சாப்பிடக்கூடிய ஒரு பொருளை, சாப்பிட கூடாத பொருளாக அறிவித்து 18 சதவீத வரி விதிக்க முடியும் எனப் பிடிஆர் கேள்வி எழுப்பியுள்ளார். இது மட்டும் அல்லாமல் இந்த வரி பரிந்துரையை ஒன்று லாஜிக் இல்லை அல்லது நேர்மை இல்லை. இது தமிழ்நாட்டுக்கு எதிரான மனநிலையாகவே பார்ப்போம் எனத் தெரிவித்துள்ளார் பிடிஆர்.

ஒரு லிட்டர் அளவு

ஒரு லிட்டர் அளவு

இதேபோல் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் வாங்கினால் எப்படி அது உணவிற்காகத் தான் எனக் கருத முடியும், இதை எப்படி ஒரு அடிப்படை கருத்தாக எடுத்துக்கொண்டு வரி விதிக்க முடியும். இது மக்கள் மீதான பரிவை பறிக்கப்படும் ஒரு செயலாகவே உள்ளது எனவும் தமிழ்நாட்டின் நிதியமைச்சரான பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டு உள்ளார்.

பிற எண்ணெய் வகைகள்

பிற எண்ணெய் வகைகள்

இதேபோல் இந்தியா முழுவதும் அனைத்து ஏழை எளிய மக்களும் சமையல் எண்ணெய்-ஐ ஒரு யூனிக்-க்கு அதிகமாக வாங்குவது இல்லை, இதேபோல் பல பயன்கள் கொண்ட கடுகு எண்ணெய் அல்லது எள் எண்ணெய் உணவுப் பொருட்கள் பிரிவில் இருக்கும் போது ஏன தேங்காய் எண்ணெய் மட்டும் தனியாகப் பிரிக்கப்பட வேண்டும்.

ஏழைக் குடும்பங்கள்

ஏழைக் குடும்பங்கள்

இந்தியாவில் எத்தனை ஏழைக் குடும்பச் சமையல் எண்ணெய்-ஐ ஒரு யூனிட் அல்லது ஒரு லிட்டருக்கும் அதிகமாக வாங்குகிறது..? மிகவும் குறைவு தான், அதேபோல் தென் இந்தியாவில் எத்தனை குடும்பங்கள் தேங்காய் எண்ணெய் பயன்படுத்திச் சமையல் செய்கிறது..? மிகவும் அதிகம்.

ஏன் தேங்காய் எண்ணெய் மட்டும்

ஏன் தேங்காய் எண்ணெய் மட்டும்

இந்தியாவில் உணவு பிரிவைச் சார்ந்த அனைத்து எண்ணெய் வகைகளை உணவு பொருட்களாகக் கருதப்படும் போது, ஏன் தேங்காய் எண்ணெய் மட்டுமே தனியாகப் பிரிந்து 18 சதவீதம் விதிக்கப்பட வேண்டும் என்பது தான் தன்னுடைய கேள்வி என ஜிஎஸ்டி கவுன்சில்-க்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இறக்குமதி எண்ணெய்

இறக்குமதி எண்ணெய்

சரி வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் அல்லது ஆலிவ் எண்ணெய் ஆகியவை ஒன்றிய அரசு எந்த அடிப்படையில் இறக்குமதி வரித் தளர்வு அளிக்கப்பட்டது மட்டும் அல்லாமல் எந்த அளவில் இதை வாங்கினாலும் 5 சதவீதம் வரி மட்டுமே விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தென் இந்தியாவில் அதிகம் உற்பத்தி மற்றும் பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெய்-க்கு மட்டும் ஏன் 18 சதவீத வரி. இதை anti-southern states என்ற தொனியில் தான் பார்க்க முடியும்.

தமிழ்நாடு

தமிழ்நாடு

மத்திய அரசின் இந்த anti-poor மற்றும் anti-southern states மனநிலை தமிழ்நாடு அரசும் ஏற்காது, தமிழ்நாட்டில் இருக்கும் லட்ச கணக்கான தேங்காய் விவசாயிகளும் ஏற்கவும் மாட்டார்கள், மறக்கவும் மாட்டார்கள் எனத் தமிழ்நாட்டின் நிதியமைச்சரான பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டு உள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Coconut oil at 18% GST: TamilNadu FM PTR terming as Anti South and Anti poor

Coconut oil at 18% GST: TamilNadu FM PTR terming as Anti South and Anti poor
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X