கொரோனா பிடியில் இந்திய விவசாயம்! பழங்களை மரத்திலேயே அழுக விடும் அவல நிலை!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வைரஸ் யாரை அதிகம் பாதித்தது? என்கிற கேள்விக்கு ஒவ்வொரு தரப்பினரும் தங்களைத் தான் அதிகம் பாதித்தது என்பார்கள்.

 

ஆனால் உண்மையில் அதிகம் பாதிக்கப்பட்ட துறை விவசாயம் தான், என இந்த கட்டுரை படித்து முடித்த பின் நீங்களே சொல்வீர்கள்.

விவசாயிகளுக்கு கொரோனாவால் அப்படி என்ன பெரிய பிரச்சனை வந்துவிட்டது?

50% மக்கள்

50% மக்கள்

இந்தியாவின் மொத்த ஜிடிபியில் வெறும் 15 சதவிகிதம் விவசாயத்தின் பங்களிப்பு இருக்கிறது. இருப்பினும் சுமார் 50 சதவிகித மக்கள், இந்த விவசாயத்தை நம்பித் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். ஆக இந்திய விவசாயத்துக்கு ஒரு பிரச்சனை என்றால் இந்தியாவில் 50 % பேர் பாதிக்கப்படுகிறார்கள். இப்போது அது தான் நடந்து கொண்டு இருக்கிறது.

அறுவடை

அறுவடை

தற்போது, இந்தியாவின் பல பகுதிகளில் அறுவடை காலம். கடந்த ஆண்டில் ஓரளவுக்கு நல்ல மழை பொழிவு, நல்ல தட்ப வெப்ப நிலை நிலவியது போன்ற காரணத்தால் விளைச்சலும் நன்றாக இருக்கிறதாம். ஆனால் இப்போது அந்த விளைச்சலை அறுவடை செய்ய முடியாமல் தவிக்கிறார்கள் விவசாயிகள்.

லாக் டவுன்
 

லாக் டவுன்

ஏன்? அறுவடை செய்ய விவசாயக் கூலித் தொழிலாளர்கள் வேண்டும். பெரும்பாலான விவசாய கூலித் தொழிலாளர்கள், கொரோனா வைரஸ் லாக் டவுனால், தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் சென்றுவிட்டார்கள். எனவே அருமையான விளைச்சலை, அறுவடை செய்ய, விவசாய கூலித் தொழிலாளர்கள் கிடைக்கவில்லை.

வருமானம்

வருமானம்

விளைச்சல் நன்றாக இருந்து என்ன பயன். அந்த விளைச்சலை அறுவடை செய்து சந்தைக்குக் கொண்டு சென்று விற்றால் தானே பணமாகும்? அதை செய்ய முடியாமல் தான் இந்த லாக் டவுன் காலத்தில் இந்திய விவசாயிகள் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

அழுகும் ஆரஞ்சுப் பழம்

அழுகும் ஆரஞ்சுப் பழம்

சில நேரங்களில், விளைச்சலை விற்று வரும் வருமானத்தை விட, அறுவடை & போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துவிடும். அப்படி ஒரு நிலை தான் இப்போது நிலவிக் கொண்டு இருக்கிறது. எனவே அறுவடை செய்யாமலேயே விளைச்சலை அழுகவிடுவார்கள். அப்படி இந்தியாவில், ஆரஞ்சு பழத் தோட்டங்களில், ஆரஞ்சுப் பழங்கள், மரங்களிலேயே அழுகிக் கொண்டு இருக்கின்றன என Financial Times பத்திரிகை சொல்கிறது.

தேவை சரிவு

தேவை சரிவு

கொரோனா லாக் டவுனால் உணவுப் பொருட்களை அதிகம் பயன்படுத்தும் உணவகங்கள், இனிப்புக் கடைகள், பள்ளி கல்லூரி அலுவலக கேண்டீன்கள், சாலை ஓர தள்ளு வண்டி உணவகங்கள் என எல்லோரும் கடையை மூடி இருக்கிறார்கள். இதனால் விவசாய பொருட்களான பால், சர்க்கரை, தானியங்கள், பருப்புகள், காய்கறிகள்... போன்றவைகளின் தேவை கணிசமாக சரிந்து இருக்கிறதாம்.

நடுத்தர குடும்பம்

நடுத்தர குடும்பம்

கடைகளுக்கு அடுத்து, மிகப் பெரிய வாடிக்கையாளர்கள் மற்றும் இந்தியாவின் பெரும் பகுதி மக்கள் என்றால் அவர்கள் நடுத்தர மக்கள் தான். இந்த தரப்பினரும் கொரோனாவில் வேலை என்ன ஆகுமோ என்கிற பயத்தில், கையில் இருக்கும் பணத்தை, பார்த்து பார்த்து செலவழித்துக் கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் வாங்கும் காய், கனி, பால், சிக்கன், முட்டை போன்றவைகள் எல்லாம் கணிசமாக குறைந்து இருக்கிறதாம்.

தரகர் பிரச்சனை

தரகர் பிரச்சனை

ஏற்கனவே கொரோனா லாக் டவுனால் இந்தியாவின் பல பகுதிகளில் உழவர் சந்தைகள் மூடப்பட்டு இருக்கிறது என்கிறார் கேதார் சிரோஹி என்கிற மத்தியப் பிரதேச விவசாயி. எனவே, தரகர்கள் தங்கள் இஷ்டத்துக்கு விவசாயிகளிடம் விலையை அடித்து குறைத்துச் சொல்லி வாங்கிக் கொண்டு இருக்கிறார்களாம். ஆனால் மறுபக்கம் குறைவான விவசாய பொருட்கள் வந்து கொண்டு இருப்பதால், சந்தையில் காய்கறிகளின் விலை அதிகரித்து இருக்கிறது.

விவசாயிகளுக்கு அடி

விவசாயிகளுக்கு அடி

1. அறுவடைக்கு ஆள் இல்லை, 2. அறுவடை செய்தாலும் அதன் மூலம் வரும் வருமானத்தை விட செலவுகள் அதிகமாக இருக்கிறது, எனவே பழங்கள் எல்லாம் மரத்திலேயே அழுகிக் கொண்டு இருக்கிறது,

3. லாக் டவுனால் உணவுத் தேவைகள் பயங்கரமாக சரிந்து கொண்டு இருக்கிறது,

4. இதற்கு மத்தியிலும் தரகர் தன் பங்குக்கு விவசாயிகளிடம் விலையை அடித்து பேசிக் கொண்டு இருக்கிறார்.

இத்தனை பிரச்சனைகளைத் தாண்டி விவசாயிக்கும் எப்படி வருமானம் கிடைக்கும்? எப்படி வாழ்வார்?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Coronavirus hit Indian agriculture farmers let crops rot on field & trees

The pandemic Coronavirus starts to hit hard the the indian agriculture. The indian farmers are not harvesting to face loss. Farmers let crops rot on field and trees instead facing loss after harvest.
Story first published: Wednesday, April 22, 2020, 11:01 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X