கிரிப்டோகரன்சி மீது வரி உயர்வு..புதிதாக ஜிஎஸ்டி வரி விதிக்க மோடி அரசு திட்டம்.. யாருக்கு பாதிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் கிரிப்டோகரன்சி மற்றும் இதர டிஜிட்டல் சொத்துக்கள் மீதான முதலீட்டுக்கு 30 சதவீத கேபிடல் கெயின்ஸ் வரி விதித்துள்ளது. இது அதிகப்படியான வரி என்றாலும் கிரிப்டோ முதலீட்டாளர்களுக்குத் தடை அறிவிக்காமல் வரி விதித்தது மகிழ்ச்சியான விஷயமாக உள்ளது.

இந்நிலையில் தற்போது மீண்டும் கிரிப்டோரகரன்சி மீது கூடுதலாக வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதனால் கிரிப்டோ துறையைச் சார்ந்து இருக்கும் அனைத்து தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்பட உள்ளது.

ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை கூட்டம்.. முக்கிய அறிவிப்புக்கு காத்திருக்கும் முதலீட்டாளர்கள்..! ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை கூட்டம்.. முக்கிய அறிவிப்புக்கு காத்திருக்கும் முதலீட்டாளர்கள்..!

பட்ஜெட் அறிக்கை

பட்ஜெட் அறிக்கை

மத்திய அரசு பட்ஜெட் அறிக்கையில் கிரிப்டோகரன்சி மற்றும் இதர டிஜிட்டல் சொத்துக்கள் மீதான முதலீட்டுக்குக் கிடைக்கும் லாபத்திற்கு மட்டுமே வரி விதிக்கப்பட்டது. தற்போது மத்திய அரசு கிரிப்டோ துறையில் நடக்கும் பிற வர்த்தகம் மற்றும் சேவைகள் மீது ஜிஎஸ்டி வரி விதிக்கப்படத் திட்டமிட்டு வருகிறது.

கிரிப்டோகரன்சி உற்பத்தி

கிரிப்டோகரன்சி உற்பத்தி

அதாவது கிரிப்டோகரன்சி உற்பத்தி முதல் அனைத்து வர்த்தகங்கள் மீது சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பது குறித்து முடிவு எடுக்க மத்திய மறைமுக மற்றும் சுங்க வரித் துறை ஆலோசனை செய்ய உள்ளதாகவும், இதற்கான திட்ட வடிவத்தையும் ஜிஎஸ்டி கவுன்சில் முன் வைத்துள்ளதாக CBIC அமைப்பின் தலைவர் விவேக் ஜோஹ்ரி தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி வரி
 

ஜிஎஸ்டி வரி

கிரிப்டோ சந்தையில் பல சேவைகளுக்கும், பணிகளும் ஜிஎஸ்டி வரி விதிக்கும் நிலைப்பாடு உள்ளது, இதற்கான இறுதி ஒப்புதல் அளிக்கப்பட்டு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் போது கிரிப்டோ மீது மத்திய அரசு விதிக்கப்படும் மொத்த வரியின் அளவு மிகப்பெரிய அளவில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சேவை வரி

சேவை வரி

ஒரு தளம் அல்லது எக்ஸ்சேன்ஞ்ச் ஆபரேட்டரால் வழங்கப்படும் சேவைகளை அதாவது கிரிப்டோ முதலீடு, விற்பனை ஆகியவை வரி விதிக்கக்கூடிய சேவைகளாக அங்கீகரிக்கப்பட்டு முறையாக அதிகாரிகள் வரி விதித்து வசூலிக்கப்பட்டு வருகிறது. இதை இந்தியாவில் இருக்கும் அனைத்து கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் தளமும் பின்பற்றி வருகிறது.

ஆலோசனை

ஆலோசனை

இந்தச் சூழ்நிலையில் கிரிப்டோ-வை உற்பத்தி அதாவது மைனிங் செய்வது சப்ளை பிரிவில் வருமா இல்லையா, உற்பத்தி செய்த கிரிப்டோ-வை விற்பனை செய்தால் இதை எப்படிக் கணக்கிடுவது. இது சப்ளை ஆப் மணி அல்லது சப்ளை ஆப் கூட்ஸ் எப்படிப் பார்க்க வேண்டும் என்பது குறித்து CBIC ஆலோசனை செய்து அடுத்த 2-3 மாதத்தில் முடிவு எடுக்க உள்ளது என விவேக் ஜோஹ்ரி தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

cryptocurrency may face another Tax impose after 30 percent capital gains tax

cryptocurrency may face another Tax impose after 30 percent capital gains tax கிரிப்டோகரன்சி மீது வரி உயர்வு.. புதிதாக ஜிஎஸ்டி வரி விதிக்க மோடி அரசு திட்டம்.. யாருக்கு பாதிப்பு..!
Story first published: Thursday, February 10, 2022, 10:17 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X