கிரிப்டோகரன்சி முதலீட்டுக்கு 'புதிய வரி'.. பட்ஜெட் அறிக்கையில் முக்கிய அறிவிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் கிரிப்டோகரன்சி மீது முதலீடு செய்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அனைத்துத் தரப்பு முதலீட்டாளர்களையும் வருமான வரி வளையத்திற்குள் கொண்டு வரும் பொருட்டு மத்திய அரசு அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் கிரிப்டோகரன்சி முதலீடு மற்றும் அதன் மூலம் கிடைக்கும் லாபம் ஆகியவற்றின் மீதான வருமான வரிச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வர திட்டமிட்டு உள்ளதாக மத்திய நிதியமைச்சகத்தின் வருவாய் துறை செயலாளர் தருண் பஜாஜ் அறிவித்துள்ளார்.

 கிரிப்டோகரன்சி

கிரிப்டோகரன்சி

கிரிப்டோகரன்சி முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு ஏற்கனவே மக்கள் கேப்பிடல் கெயின்ஸ் டாக்ஸ் செலுத்தி வருகின்றனர், ஆனால் சரக்கு மற்றும் சேவை வரி பிற கிரிப்டோகரன்சி சேவைகளுக்குப் பொருந்தும் என வருவாய்த் துறை செயலாளர் தருண் பஜாஜ் அறிவித்துள்ளார்.

 வருமான வரி

வருமான வரி

மக்கள் கிரிப்டோகரன்சி மீதான முதலீட்டுக்குக் கிடைக்கும் வருமானத்திற்கு ஏற்கனவே வரி செலுத்தி வரும் நிலையில், புதிய வரி மாற்றங்களைக் கொண்டு வர வேண்டுமா..? வேண்டாமா..? என்பதை விரைவில் முடிவு எடுக்கப்படும். இதுகுறித்த இறுதியான முடிவை பட்ஜெட் அறிக்கையின் போது வெளியிடப்படும் எனவும் வருவாய் துறை செயலாளர் தருண் பஜாஜ் அறிவித்துள்ளார்.

 Tax collected at Source வருமா..?

Tax collected at Source வருமா..?

கிரிப்டோகரன்சி மீதான முதலீட்டுக்கு கிடைக்கும் வருமானத்திற்கு TCS (Tax collected at Source) கொண்டு வரப்படுமா என்ற கேட்ட கேள்விக்கு வருவாய் துறை செயலாளர் தருண் பஜாஜ், புதிய வரி மாற்றங்கள் கொண்டு வரப்போகிறோம் என்றால் கட்டாயம் இதுகுறித்து ஆய்வும் மேற்கொள்ளப்படும் எனக் கூறினார்.

 ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி

ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி

தற்போது கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் ஈடுபட்டு உள்ளவர்களை தனித்தனியாகப் பிரித்து அதாவது facilitator, brokerage மற்றும் trading platform எனப் பிரிந்து அவர்கள் செய்யும் வர்த்தகம் மற்றும் வருமானத்திற்கான ஜிஎஸ்டி மற்றும் வருமான வரியை சரியான விகிதத்தில் விதிக்கப்பட வேண்டும் என்பது அரசின் முக்கிய இலக்காக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Cryptocurrency may taxed more sooner, In Budget 2022 govt plans to changing tax laws

Cryptocurrency may taxed more sooner, In Budget 2022 govt plans to changing tax laws
Story first published: Friday, November 19, 2021, 19:36 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X