94 வருட பழமையான வங்கியின் 2 வருட மோசமான பயணம் முடிவு.. DBS சரியான தீர்வு தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லட்சுமி விலாஸ் வங்கியின் இரண்டு வருட நெருக்கடியான மோசமான பயணம், ரிசர்வ் வங்கியினால் தற்போது முடிவுக்கு வந்துள்ளது என்று தான் கூற வேண்டும்.

Recommended Video

1000 ருபாய் கூட எடுக்க முடியல | LAKSHMI VILAS BANK | PUBLIC OPINION | ONEINIDA TAMIL

ஏனெனில் கடந்த இரண்டு வருடங்களாகவே தங்களது பொருளாதார சிக்கலை குறைக்கும் விதமாக, லட்சுமி விலாஸ் வங்கி தொடர்ந்து தகுந்த முதலீட்டாளர்களை தேடி வந்தது.

ஆரம்பத்தில் கடந்த ஆண்டில் தனியார் வீட்டு வசதி நிதி நிறுவனமான இந்தியா புல்ஸ் நிறுவனத்துடன் இணைக்க திட்டமிட்டது.

இந்தியா புல்ஸ் கூட்டணிக்கு செக்

இந்தியா புல்ஸ் கூட்டணிக்கு செக்

இதற்காக இந்திய ரிசர்வ் வங்கியையும் நாடியது. ஆனால் ரிசர்வ் வங்கியோ லட்சுமி விலாஸ் வங்கியின் முடிவுக்கு ஒப்புதல் கொடுக்க வில்லை. ஆனால் அப்போதும் கூட லட்சுமி விலாஸ் வங்கி மனம் தளரவில்லை. மீண்டும் கிளிக்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்துடன் இணைக்கும் முயற்சியை கையில் எடுத்தது. ஆனால் அதுவும் கைகொடுக்கவில்லை என்றே கூறலாம்.

ரிசர்வ் வங்கியின் ட்விஸ்ட்

ரிசர்வ் வங்கியின் ட்விஸ்ட்

ஆனால் இதற்கிடையில் தான் அதன் வாடிக்கையாளர்களும், வங்கியும் எதிர்பாராத விதமாக ரிசர்வ் வங்கி ஒரு மாதத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகளை லட்சுமி விலாஸ் வங்கிக்கு விதித்தது. அதோடு இவ்வங்கியின் இரண்டு வருட போராட்டத்தையும் முடிவுக்கு கொண்டு வந்தது. அதாவது இரண்டு வருடமாக தகுந்த முதலீட்டாளரை தேடி வந்த லட்சுமி விலாஸ் வங்கிக்கு ஆறுதல் கொடுக்கும் வகையில், டிபிஎஸ் பற்றிய அறிவிப்பினையும் கொடுத்தது.

கடுமையான பிரச்சனை

கடுமையான பிரச்சனை

கடுமையான வாரக்கடன், நிதி நெருக்கடி, மோசமான கடன்களினால் பாதிக்கப்பட்ட லட்சுமி விலாஸ் வங்கிக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு இது என்றாலும், இந்திய வங்கியினை வெளி நாட்டு வங்கியுடன் இணைக்கு யோசனை இதுவே முதல் முறை என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். எனினும் இது தொடர்பான கருத்துகளை ரிசர்வ் வங்கி நவம்பர் 20ம் தேதிக்குள் தெரிவிக்குமாறு கோரியுள்ளது கவனிக்கதக்கது.

94 வருட வங்கிக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு

94 வருட வங்கிக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு

லக்ஷ்மி விலாஸ் வங்கியின் நிதி நிலையை மீட்க வேண்டுமானால், ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி அந்த வங்கியில் 2,500 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்யப்பட வேண்டும். இந்த தொகையை முதலீடு செய்ய சிங்கப்பூர் வங்கியான டிபிஎஸ் முன்வந்துள்ளது. ஆனால் இந்த தேவையை உடனடியாக மற்ற நிதி நிறுவனங்கள் உடனடியாக செய்யுமா? என்பது சந்தேகமாகத் தான் பார்க்கப்படுகிறது. ஆக ரிசர்வ் வங்கியின் இந்த பரிந்துரை ஏற்கப்படும்பட்சத்தில் வங்கியின் நிதி நிலையை மீட்டெடுக்கும் வாய்ப்புகள் உள்ளதாக நம்பப்படுகிறது.

உண்மையும் இதுதான், 94 வருட பழமையான ஒரு வங்கிக்கு கிடைத்த நல்ல வாய்ப்பாக கூட இதனை எடுத்துக் கொள்ளலாம். அதோடு சர்வதே அளவில் இதன் வர்த்தகத்தினை விரிவுபடுத்த முடியும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

DBS deal puts an end to Lakshmi vilas bank’s 2 year struggle

LVB moratorium.. DBS deal puts an end to Lakshmi vilas bank’s 2 year struggle
Story first published: Thursday, November 19, 2020, 14:44 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X