தேடி தேடி பெண்களை சேர்க்கும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்.. டாடா, ஓலா, MG எடுத்த முக்கிய முடிவு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொதுவாக உற்பத்தித் துறையில் பெண்களின் பங்கீடும் ஆர்வமும் குறைவாக இருக்கும், அதிலும் முக்கியமாக ஆட்டோமொபைல் துறையில் நிர்வாகப் பணிகளில் கூடப் பெண்களின் பங்கு குறைவாக இருக்கும்.

இந்த நிலையை எலக்ட்ரிக் வாகனங்கள் முற்றிலுமாக மாற்றியுள்ளது என்றால் மிகையில்லை, இத்துறையில் புதிய நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரையில் பெண்களை அதிகளவில் பணியில் அமர்த்தி வருகிறது.

இது இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் புதிதாகவும், முக்கியமானதாகவும் பார்க்கப்படுகிறது.

சைரஸ் மிஸ்திரி மரணம்.. ஆட்டோமொபைல் துறையில் முக்கிய மாற்றம்..! #Seatbelt சைரஸ் மிஸ்திரி மரணம்.. ஆட்டோமொபைல் துறையில் முக்கிய மாற்றம்..! #Seatbelt

ஆட்டோமொபைல் துறை

ஆட்டோமொபைல் துறை

ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செய்து வந்த ஆட்டோமொபைல் துறையில் எலக்ட்ரிக் வாகனங்களே புதிய மாற்றமாக இருக்கும் நிலையில், எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் பெண்களை அதிகளவில் பணியில் சேர்த்து பாலின சமன்பாட்டை நிறுவனங்கள் எட்ட முயல்கிறது.

பெண்கள்

பெண்கள்

இந்த வகையில் எலக்ட்ரிக் வாகன துறையில் புதிதாக 10 பேரை பணியில் சேர்த்தால் அதில் 6 பேர் பெண்கள் தான். பெண்கள் EV துறையில் பிஸ்னஸ் மாடலிங், டிசைன் ரீடெவலப்மென்ட், ஈ மொபிலிட்டி, ரினியூவபிள் எனர்ஜி மேனேஜ்மென்ட் பிரிவில் பணியில் அமர்த்தப்படுகின்றனர்.

35 சதவீதம் அதிகச் சம்பளம்
 

35 சதவீதம் அதிகச் சம்பளம்

மேலும் கிரீன் துறையில் பெண்களுக்கு மற்ற துறைகளைக் காட்டிலும் 35 சதவீதம் அதிகச் சம்பளம் அளிக்கப்படுகிறது. இதுமட்டும் அல்லாமல் கடந்த ஒரு காலாண்டில் EV துறை சார்ந்த ஆட்டோமொபைல் நிறுவனங்களில் 18 சதவீதம் அதிகப் பெண்களைப் பணியில் சேர்க்கப்பட்டு உள்ளனர் என Adecco தெரிவிக்கிறது.

டாடா மோட்டார்ஸ், MG மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ், MG மோட்டார்ஸ்

இந்திய EV கார் சந்தையில் 80 சதவீத வர்த்தகத்தைப் பெற்று இருக்கும் டாடா மோட்டார்ஸ் பெண்களை அதிகளவில் பணியில் சேர்த்து வருகிறது. இதேபோல் MG மோட்டார்ஸ் நிறுவனமும் தற்போது பெண்களை அதிகளவில் பணியில் சேர்க்கும் வழக்கத்தைக் கொண்டு உள்ளது. பல ஆட்டோமொபைல் நிறுவனத்தில் பெண்கள் நிர்வாகக் குழு மற்றும் தலைமை பொறுப்புகளிலும் இருக்கிறார்கள்.

3000 பெண்கள்

3000 பெண்கள்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் சுமார் 3000 பெண்கள் உற்பத்தி தொழிற்சாலைகளில் கார் முதல் கனரக வர்த்தக வாகனங்களில் பணியாற்றி வருகிறார்கள். சமீபத்தில் புனே-வில் ஒரு assembly line-ஐ மொத்தமும் பெண்கள் இயக்கும் தளமாக மாறியுள்ளது. இந்த assembly line-ல் சுமார் 1500 பேர் பணியாற்றி வருகின்றனர்.

ஓலா நிறுவனம்

ஓலா நிறுவனம்

இதேபோல் தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் தொழிற்சாலை துவங்கிய நாளில் இருந்து அதிகப்படியான பெண்களைப் பணியில் அமர்த்தியுள்ளது. இப்படி ஒவ்வொரு ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்களும் பெண்களுக்கு அதிகளவிலான இடத்தைக் கொடுத்து பாலின சமநிலையை ஈடு செய்ய முயற்சி செய்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

EV industry benefits women in India; Tata Motors, MG employees more women than ever in history

EV industry benefits women in India; Tata Motors, MG employees more women than ever in history
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X