ஜிஎஸ்டி வரியில் குழப்பம்.. நிர்மலா சீதாராமன் டிவிட்டரில் பலே விளக்கம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் 47வது ஜிஎஸ்டி கூட்டம் முடிந்த நாளில் இருந்து பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.

குறிப்பாக விலைவாசி உயர்வு நடுத்தர மக்களை வாட்டி வதைத்து வரும் வேளையில் ஜிஎஸ்டியில் செய்யப்பட்டு உள்ள மாற்றங்கள் மக்களுக்கு ஜிஎஸ்டி வரி மாற்றங்கள் பெரும் பாதிப்பாக இருக்கும் எனக் கருத்து நிலவியது.

இதைத் தொடர்ந்து இன்று நிர்மலா சீதாராமன் தனது டிவிட்டரில் விளக்கம் கொடுத்துள்ளார்.

மோடி அரசுக்கு புதிய சவால்.. திரும்பும் பக்கம் எல்லாம் பாதிப்பு..!மோடி அரசுக்கு புதிய சவால்.. திரும்பும் பக்கம் எல்லாம் பாதிப்பு..!

ஜிஎஸ்டி கவுன்சில்

ஜிஎஸ்டி கவுன்சில்

ஜிஎஸ்டி கவுன்சில் தனது 47வது கூட்டத்தில் பருப்பு வகைகள், தானியங்கள், மாவு போன்ற குறிப்பிட்ட உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கும் அணுகுமுறையை மறுபரிசீலனை செய்யப் பரிந்துரைத்தது. இது குறித்துப் பல தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றன. உண்மைகள் பற்றிய விளக்கம்.

முதல் முறையல்ல

முதல் முறையல்ல

இதுபோன்ற உணவுப் பொருட்களுக்கு வரி விதிக்கப்படுவது இதுவே முதல் முறையா? இல்லை. ஜிஎஸ்டிக்கு முன்பு மாநிலங்கள் உணவு தானியத்திலிருந்து கணிசமான வருவாயைத் திரட்டி வந்தன. பஞ்சாப் மட்டும் ரூ. 2,000 கோடிக்கு மேல் உணவு தானியத்தின் மீது கொள்முதல் வரியாக வசூலித்துள்ளது. உத்தரப் பிரதேசம் ரூ. 700 கோடி வரையில் வரி வருமானம் பெற்று வந்தது. அரிசி மீது எந்த மாநிலம் எவ்வளவு வரி விதித்தது என்பதைக் கீழ் உள்ள புகைப்படத்தில் பார்க்க முடியும்

வணிக முத்திரையிடப்பட்ட பொருட்கள்

வணிக முத்திரையிடப்பட்ட பொருட்கள்

இதைக் கருத்தில் கொண்டு, ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டபோது, வணிக முத்திரையிடப்பட்ட (Branded) தானியங்கள், பருப்பு வகைகள், மாவு ஆகியவற்றுக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது. பின்னர் இது திருத்தப்பட்டது, பதிவு செய்யப்பட்ட பிராண்ட் அல்லது பிராண்டின் கீழ் விற்கப்படும் பொருட்களுக்கு மட்டுமே வரி விதிக்கப்பட்டது, ஆனால் அதன் மீதான அமலாக்க உரிமை விநியோகஸ்தரால் கைவிடப்படவில்லை.

தவறுகள்

தவறுகள்

இந்த விதிமுறையின் தவறான பயன்பாடு இருப்பதாகக் குறுகிய காலகட்டத்திலேயே பல உற்பத்தியாளர்கள் மற்றும் பிராண்ட் உரிமையாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. படிப்படியாக இந்தப் பொருட்களிலிருந்து கிடைத்த ஜிஎஸ்டி வருவாய் அரசு கணிசமாகக் குறைந்தது.

பேக்கேஜ் செய்யப்பட்ட பொருட்கள்

பேக்கேஜ் செய்யப்பட்ட பொருட்கள்

பிராண்டட் பொருட்களுக்கு வரி செலுத்தும் விநியோகஸ்தர்கள், தொழில் சங்கங்கள் இதை எதிர்த்தன. இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்க அனைத்துப் பேக்கேஜ் செய்யப்பட்ட பொருட்களுக்கும் ஒரே மாதிரியான ஜிஎஸ்டி வரி விதிக்கக் கோரிக்கை எழுந்தது. இந்த அபரிமிதமான வரி ஏய்ப்பு மாநிலங்களாலும் கவனிக்கப்பட்டது.

வரி நிர்ணயக் குழு

வரி நிர்ணயக் குழு

ராஜஸ்தான், மேற்கு வங்கம், தமிழ்நாடு, பீகார், உத்தரப்பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, ஹரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகளைக் கொண்ட வரி நிர்ணயக் குழு, பல கூட்டங்களில் இந்தப் பிரச்சினையை ஆராய்ந்து, தவறான பயன்பாட்டைத் தடுப்பதற்கான பரிந்துரைகளை வழங்கியது.

ஜூலை 18 முதல்

ஜூலை 18 முதல்

இந்த நிலையில் ஜிஎஸ்டி கவுன்சில் 47வது கூட்டத்தில் இந்த முடிவை எடுத்தது. ஜூலை 18, 2022 முதல், 2-3 பொருட்களைத் தவிர, ஜிஎஸ்டி வரிவிதிப்பில் எந்த மாற்றமும் இல்லாமல், இந்தப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கும் முறைகள் மட்டுமே மாற்றப்பட்டன. Legal Metrology Act படி "ப்ரீ-பேக்கேஜ் மற்றும் லேபிள் இடப்பட்ட" பொருட்களாக வழங்கப்படும் போது இதன் மீதான ஜிஎஸ்டி பொருந்தும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

5% ஜிஎஸ்டி

5% ஜிஎஸ்டி

எடுத்துக்காட்டாக, பருப்பு வகைகள், அரிசி, கோதுமை மற்றும் மாவு போன்றவை பிராண்ட் செய்யப்பட்டு யூனிட் கன்டெய்னரில் பேக் செய்யப்படும் போது, 5% ஜிஎஸ்டி விதிக்கப்படும். 18.7.2022 முதல், இந்தப் பொருட்கள் "முன்பே பேக் செய்யப்பட்டு லேபிளிடப்படும்" பிரிவின் கீழ் ஜிஎஸ்டி-யை ஈர்க்கும்.

வரி இல்லை

வரி இல்லை

மேலும் கீழே புகைப்படத்தில் பட்டியலிடப்பட்ட பொருட்களை, பாக்கெட் செய்யாமல் விற்கப்படும் போது, அதாவது loose-ல் விற்கப்படும் போது எந்த ஜிஎஸ்டியையும் ஈர்க்காது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு

ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு

இது ஜிஎஸ்டி கவுன்சிலில் ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவு. ஜூன் 28, 2022 அன்று சண்டிகரில் நடைபெற்ற 47வது கூட்டத்தில் வரி விகித மாற்றம் குறித்த விஷயத்தை அமைச்சர்கள் குழு முன்வைத்தபோது அனைத்து மாநிலங்களும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்டன.

பாஜக அல்லாத மாநிலங்கள்

பாஜக அல்லாத மாநிலங்கள்

பாஜக அல்லாத மாநிலங்கள் பஞ்சாப், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கேரளா உட்பட அனைத்து மாநிலங்களும் இந்த முடிவை ஏற்றுக்கொண்டன. ஜிஎஸ்டி கவுன்சிலின் இந்த முடிவு ஒருமித்த கருத்தாகும்.

அமைச்சர்கள் குழு

அமைச்சர்கள் குழு

மேலும், இந்த மாற்றங்களைப் பரிந்துரைத்த அமைச்சர்கள் குழு, கர்நாடக முதலமைச்சர் தலைமையிலான மேற்கு வங்கம், ராஜஸ்தான், கேரளா, உத்தரப்பிரதேசம், கோவா, பீகார் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களைக் கொண்டது. வரி கசிவைக் கருத்தில் கொண்டு, இந்த முன்மொழிவை ஜிஎஸ்டி கவுன்சில் கவனமாகப் பரிசீலித்தது.

வரிக் கசிவு

வரிக் கசிவு

இந்த முடிவு வரி கசிவைத் தடுக்க மிகவும் அவசியமான ஒன்றாகும். அதிகாரிகள், அமைச்சர்கள் குழு உட்படப் பல்வேறு மட்டங்களில் இது பரிசீலிக்கப்பட்டு, இறுதியாக அனைத்து உறுப்பினர்களின் முழுமையான கருத்தொற்றுமையுடன் ஜிஎஸ்டி கவுன்சிலால் பரிந்துரைக்கப்பட்டது.

'மேக் இன் இந்தியா'-வில் 'மேடு இன் சீனா' பிரச்சனை.. மோடி அரசிடம் ICEA கோரிக்கை..! 'மேக் இன் இந்தியா'-வில் 'மேடு இன் சீனா' பிரச்சனை.. மோடி அரசிடம் ICEA கோரிக்கை..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Finance Minister Nirmala Sitharaman clearing misconceptions on 5 percent GST on pulses, cereals, flour in twitter

Finance Minister Nirmala Sitharaman clearing misconceptions on 5 percent GST on pulses, cereals, flour in twitter ஜிஎஸ்டி வரியில் குழப்பம்.. நிர்மலா சீதாராமன் டிவிட்டரில் பலே விளக்கம்..!
Story first published: Tuesday, July 19, 2022, 18:00 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X