விவசாயத்தில் இறங்கிய தோனி.. 43 ஏக்கரில் பிரம்மாண்ட திட்டம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியினை பற்றி அறியாமல் இருக்க முடியாது. ஏனெனில் இந்திய கிரிகெட்டினை உலகத்திற்கு எடுத்து சென்ற மாபெரும் வீரர்.

 

ராஞ்சியில் பிறந்த தோனி, ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். சிறு வயதில் தனது பொழுதுபோக்குகாக நண்பர்களோடு சாலை ஓரத்தில் விளையாடுவதில் அதிக நேரத்தினை கழித்தவர். இவருக்கு மிக பிடித்தவை, விளையாட்டு மற்றும் ஓவியம் வரைவது தானாம்.

சிறு வயதில் இருந்தே கால்பந்து மற்றும் பாட்மிண்டன் பிடித்த விளையாட்டாக இருந்தாலும், பின்னாளில் கிரிகெட் மீதான பாசமும் தொற்றிக் கொண்டது.

இந்திய நிறுவனத்துடன் கூட்டணி வைக்கும் எலான் மஸ்க்.. எதிர்பார்க்காத டிவிஸ்ட்..!இந்திய நிறுவனத்துடன் கூட்டணி வைக்கும் எலான் மஸ்க்.. எதிர்பார்க்காத டிவிஸ்ட்..!

கிரிகெட்டில் சாதனை

கிரிகெட்டில் சாதனை

அதன் பிறகு பற்பல சவால்களை சந்தித்தவர், பிறகு கிரிக்கெட்டில் சாதனை புரியத் தொடங்கினார். கடந்த 2011ம் ஆண்டில் உலக கோப்பையில் களமிறங்கினார். அப்போது இந்தியா உலக கோப்பையை வென்றதில் தோனிக்கும் முக்கிய பங்கு உண்டு. இப்படியாக கிரிக்கெட் வீரராக கேப்டனாக வலம் வந்தவர், அதன் பின்னர் அறக்கட்டளை மூலம் பல உதவிகளையும் செய்து வருகின்றார்.

Sports franchises

Sports franchises

சென்னை FCயின் இணை உரிமையாளராகவும் உள்ளார். ஹாக்கி இந்திய லீக்கில் விளையாடிய ராஞ்சி ரேஸ் அணியிலும் தோனி இணை உரிமையாளராக உள்ளார். கால்பந்து மற்றும் ஹாக்கி தவிர, Mahi Racing Team India என்ற சாம்பியன்ஷிப் அணியையும் வைத்துள்ளார்.

தோனியின் செவன் (SEVEN)
 

தோனியின் செவன் (SEVEN)

தோனி கடந்த 2016ம் ஆண்டில் லைஃப் ஸ்டைல் பிராண்டான SEVENஐ அறிமுகப்படுத்தினார். இது அவருக்கு பிடித்தமான ஜெர்சியின் நம்பரான இந்த செவன் மூலம், ஆடைகள் மற்றும் காலணிகள் வணிகத்தினை செய்து வருகின்றனர். மேலும் ரித்தி குழுமத்தின் RS Seven Lifestyle நிறுவனத்திலும் அதன் பிராண்ட் அம்பாசிடராக உள்ளார்.

ரித்தி குழுமத்திலும் பங்கு

ரித்தி குழுமத்திலும் பங்கு

முன்னாள் இந்திய கேப்டனான இவர் Rhiti Sports-லிம் பங்குகளை வைத்துள்ளார். இது புவனேஷ்வர் குமார் போன்ற நட்சத்திர வீரர்களை கொண்ட ஸ்போர்ட்ஸ் மார்கெட்டிங் & மேனேஜ்மென்ட் நிறுவனமாகும்.

SportsFit World Pvt Ltd

SportsFit World Pvt Ltd

தோனி தனது SportsFit World நிறுவனத்தின் மூல வர்த்தக ரீதியான உடற்பயிற்சி சந்தையிலும் காலடி எடுத்து வைத்துள்ளார்.
தற்போது டெல்லி, மும்பை, காசியாபாத், குர்கான் உள்ளிட்ட பல முன்னணி நகரங்களில், 11 இடங்களில் உடற்பயிற்சி கூடங்களை வைத்துள்ளார்.

காட்டாபுக்கிலும் முதலீடு

காட்டாபுக்கிலும் முதலீடு

பெங்களூரை சேர்ந்த ஸ்டார்டப் நிறுவனமான காட்டபுக்-கிலும் (Khatabook) முதலீடு செய்துள்ளார். அதோடு இந்த ஸ்டார்டப் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராகவும் உள்ளார். இந்த ஸ்டார்டப் நிறுவனமானது இதுவரை 29 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியினை திரட்டியுள்ளது. எனினும் இந்த நிறுவனத்தில் தோனி எவ்வளவு முதலீடு செய்துள்ளார் என்ற விவரங்கள் வெளியாகவில்லை.

ஆர்கானிக் தோட்டம்

ஆர்கானிக் தோட்டம்

மேற்கண்ட பல வணிக நடவடிக்கைகளை தவிர, ராஞ்சியில் 43 ஏக்கரில் விவசாயம் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிலும் இது வழக்கமான விவசாயமாக அல்லாமல் ஆர்கானிக் முறையில் செய்து வருவதாகவும், இதன் மூலம் பல காய்கறிகள் பலங்கள் என உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து வருவதாகவும் வெளியாகியுள்ளன. குறிப்பாக ஸ்ட்ராபெர்ரி, பட்டானி, தக்காளி மற்றும் முட்டைகோசுகள் என ராஞ்சியில் உள்ள பண்ணையில் விளைவித்து வருவதாகவும், இதன் மூலம் நல்ல வருமானத்தினை ஈட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Former India captain MS Dhoni turns farmer; Export organic fruits and vegetables

Business plan updates; Former India captain MS Dhoni turns farmer; Export organic fruits and vegetables
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X